Skip to main content

வாடாமல்லிகை - பாகம் 03


தரை தட்டிய விமானத்தில் உள்ள அரேபியர்களில் முக்கால் வாசியினர் ஐரோப்பிய நவநாகரீக உடைகளில் இருந்து விடுதலை அடைந்து, ஓர் வெள்ளை நிற நாலுமுழ வேட்டி போன்று உயர்த்திகட்டியும், வெறும் உடலின் மேல் வெள்ளை நிறத்திலான ஓர் போர்வையுடனும் வெறும் கால்களுடனும் நின்றிருந்தார்கள். இந்தக் காட்சியானது பட்டிக்கு வழிமாறி வந்த ஆட்டுக்குட்டியின் நிலையையே எனக்கு ஏற்படுத்தியது. மேற்கு நாடுகளுக்கு உல்லாசம் அனுபவிக்க வரும் இவர்கள் தங்கள் மண்ணை மிதிக்கும் பொழுது மட்டும் சட்டங்களினால் கட்டாயப்படுதப்பட்ட வாழ்வுநிலையை ஏற்றது எனது மனதை நெருடவே செய்தது. எல்லோரும் இறங்குவதற்கு முண்டியடித்தனர். ஆனாலும் அத்தனை சுலபமாக அவர்களால் இறங்க முடியவில்லை. அதற்கான காரணத்தை நாங்கள் வெளியே போகும் பொழுது தான் அறிந்து கொண்டோம். விமானம் , விமானநிலயத்துடன் இணைக்காது தொலை தூரத்தில் நின்றது. அதில் படிக்கட்டுகள் இணைக்கப்பட்டிருந்தன. அதன் வழியே உடல் பெருத்த அரேபியர்கள் இறங்குவதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். விமான நிலையத்துக்கு குளிரூட்டிய பேரூந்துகள் பயணிகளை கொண்டு சென்று கொண்டிருந்தன. எல்லோருமே குழந்தயை கிணத்துக்கட்டில் விட்டு விட்டு வந்த மன நிலையிலேயே இருந்தார்கள். நாங்கள் எல்லாவற்றையும் உன்னிப்பாக விடுப்பு பார்த்துக்கொண்டு இறங்கினோம். நான் ஜெட்டா எப்படி இருக்கப் போகின்றது என்ற மிதப்பில் விமான நிலையத்தில் நுழைந்தேன்.

நாங்கள் பாதுகாப்பு கெடுபிடிகளை முடித்துக்கொண்டு பயணிகள் மாறும் இடத்திற்கு சென்று கொண்டிருந்தோம். கண்ணுக்கெட்டிய தூரதிலேயே அந்த மண்டபம் சுங்கத் தீர்வைகள் அற்ற ஒரேயொரு கடையுடன் காணப்பட்டது. அங்கேதான் எனக்குப் பல அதிர்சிகள் காத்திருந்தன. எங்களுக்கு உடனடி தேவையாக கழிப்பிடம் செல்ல வேண்டி இருந்தது. அங்கே இரண்டு கழிப்பிடங்களே இருந்தன. ஒன்று பாதுகாப்பு சோதனைகள் முடிவடையும் இடத்திலும், இரண்டாவது பயணிகள் தங்கும் இடத்திலும் காணப்பட்டன. நான் மனைவியை முதல் விட்டு விட்டு காத்திருக்கத் தொடங்கினேன். சிறிது நேரத்தில் வந்த மனைவியின் முகத்தில் ஈ ஆடவில்லை. எனக்கு கேள்விகள் கேட்க நேரம் இல்லாததால் உடனடியாகவே ஆண்கள் " பிஸ் " அடிக்கும் இடத்திற்கு சென்றேன். அங்கே " பிஸ் " அடிக்கும் இடம் மக்களால் நிரம்பி வழிந்தது. கீழே தண்ணிக்காடாக இருந்தது. பலர் தங்கள் கால்களை ஒன்றுமாறி ஒன்றாக முகம் கழுவும் தொட்டியினுள் வைத்து கழுவி அதனுள்ளேயே முகமும் கழுவிக்கொண்டனர். ஒரு சிலர் வாயுக்குள் தண்ணியை விட்டு விரல்களினால் கிடாவி பெரும் சத்தத்துடன் ஓங்காளித்து துப்பினார்கள். குடலைப் புரட்டும் நாற்றம் அங்கே பரவி இருந்தது. தரையில் கீழே இருந்த தண்ணி வெள்ளத்தை நீக்க ஒரு இந்தியர் தண்ணி வாரும் துடைப்பக்கட்டையுடன் நின்று கொண்டார். எனக்கு வந்த மூத்திரம் எதிர் திசையில் ஒடியது. அனாலும் எனக்கு முட்டிய மூத்திரத்தால் விதைப்பை வலி எடுத்தது. நான் எனது விதியை எண்ணியவாறு மூச்சை அடக்கியவாறு எதிரே ஓடிய மூத்திரத்தை நேரே எடுக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினேன். இறுதியில் வெற்றிக்கனி என்பக்கம் விழுந்தது. வெற்றியை எனதாக்கி கழிப்பிடம் தந்த மன உளைச்சலில் கடுப்புடன் வெளியே வந்த என்னை எனது மனைவி ஒருவிதமான நமுட்டுச் சிரிப்புடன் எதிர் கொண்டா. அவாவின் சிரிப்பு என்னைக் மேலும் கடுகடுக்க வைத்தது.

எங்களை சுங்கதீர்வையற்ற கடைகள் பெரிதாக கவரவில்லை. ஆனால் விதம் விதமான பேரீந்துகளை அடுக்கி இருந்தார்கள். அத்துடன் இருக்கும் ஆறு மணி நேரத்தை போக்காட்டுவதற்கு அவைகளை விடுப்பு பார்தோம் . ஜெட்டா விமான நிலையம் எனக்கு தின்னவேலி சந்தையையே நினைவுக்கு கொண்டடு வந்தது. அருகிலே இருக்கும் மெக்கா புனித ஸ்தலத்துக்கு இந்த விமான நிலையத்திலே தான் விமானம் மாறவேண்டும். உலகின் பல பாகங்களிலும் இருந்து யாத்திரீகர்கள் குவிந்து கொண்டு இருந்தார்கள். அதற்கேற்ப போதிய இடவசதிகளோ அடிப்படை சுகாதார வசதிகளோ அங்கு இல்லாதது எனக்கு பெரும் வியப்பையே தந்தது. நேரம் தனது கடமையை செய்துகொண்டிருந்தது. பல யாத்திரீர்கள் இடம் இல்லாததால் நிலத்திலேயே சப்பாணி கட்டிக்கொண்டு இருந்தார்கள். தாங்கள் உணவுப் பொட்டலங்களை அங்கேயே பிரித்து உண்டார்கள். இந்த நிகழ்வானது கழிப்பிடத்திற்கு முன்பாகவும் நடந்தது. அதில் அவர்கள் அருவருப்பு நிலையை அடைந்ததாக தெரியவில்லை. வெளிநாட்டுப் பயணிகள் புகைப்பதற்கு புகைக்கும் அறை அங்கு இருக்கவில்லை. இது எனக்கு மேலும் சிக்கலை உருவாக்கியது. அத்துடன் இரண்டே இரண்டு உணவுசாலைகள் தான் இருந்தன. அதில் இருந்த உணவுகள் சாப்பிடும் படியாக இருக்கவில்லை. எமக்கு பசி வயிற்ரை புடுங்கியது. இருவரும் தேநீரை குடித்தபடியே எமது விதியை நொந்து கொண்டோம். வாழ்க்கையில் அனுபவங்கள் எப்பொழுதுமே அலாதியானதும் இனிமையான பல படிப்பினைகளை தந்திருக்கின்றன. இந்த ஜெட்டா விமான நிலையமும் எனக்கு பலவித புதுமையான மக்களையும் அவர்களது பழக்கவழக்கங்களையும் தந்தது. நான் கஸ்ரமான நிலமையையும் இனிமையாக்க முயன்றுகொண்டிருந்தேன். ஒருவழியாக நேரம் ஒன்பது மணியை நெருங்கி கொண்டிருந்தது. எமது விமானம் புறப்படுவற்கான அழைப்பு வந்து கொண்டிருந்தது. எங்களை ஏற்றிக்கொண்டு அந்த இயந்திரப்பறவை மீண்டும் தனது கால்களை இலங்கை நோக்கி எக்கியது.

தொடரும்

கோமகன் 

07 சித்திரை 2014

Comments

Popular posts from this blog

பரிசுகெட்ட ஊரிலை பரபரப்பு சந்திப்பு-பத்தி

நேற்று இரவு கொஞ்சம் வெள்ளன படுக்கவேணும் எண்டு யோசிச்சன். அதுக்கு ஒரு காரணமும் இருக்கு. இண்டைக்கு. பாரிசுக்கு போற புறநகர் கோச்சி எல்லாம் ஸ்ட்ரைக் செய்யிறாங்கள். அதோடை இப்ப ரெண்டு கிழமைக்குமேலை எயார் பிரான்ஸ் காறங்களும் ஸ்ட்ரைக் செஞ்சு கொண்டிருக்கிறாங்கள். வெள்ளன படுத்தால்தான் காத்தாலை எழும்பி முதல் கோச்சியை பிடிச்சு வேலைக்கு போகலாம். என்ரை யோசினையிலை மண் விழுந்த மாதிரி பக்கத்திலை இருந்த கைத்தொலை பேசி அடிச்சுது. மெதுவாய் ஒரு கள்ளக் குணத்திலை அதை எட்டி பாத்தன். சோபா சக்தியின்ரை பேர் மின்னீச்சுது. இந்த நேரத்திலை இவர் ஏன் எடுக்கிறார்?? “கோமகா… அவதானமாய் நடந்துக்கோ ராசா” எண்டு என்ரை மனம் ஸ்ட்ரிக் ராய் ஓர்டர் போட்டுது. நான் ரெலிபோனை எடுக்க , மற்றப்பக்கம் “அண்ணை நான் சோபாசக்தி கதைக்கிறன்.நாளைக்கு நீங்கள் வேலைமுடிய ஒருக்கால் லாச்சப்பலுக்கு வாங்கோ. உங்களுக்கு ஒராளை அறிமுகப்படுதவேணும்” எண்டுபோட்டு என்ரை அபிபிராயத்தை நான் சொல்ல முதல் அண்ணாத்தை டெலிபோனை கட் பண்ணிபோட்டார். எனக்கு பண்டிவிசர் வந்திது. நான் மாற்றாரை விடிய பாக்கலாம் எண்டு படுக்கப்போனன். நான் காத்தாலை மூண்டு மணிக்கே எழும்பி ப...

அறத்துப்பால்-இல்லறவியல்-புகழ்- Renown- La gloire- 231 - 240

  ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. 231 வறியவர்க்குப் பொருள் ஈதல் வேண்டும் . அதனால் புகழுண்டாக வாழ வேண்டும் . அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியம் பயன் வேறு யாதும் இல்லை. எனது கருத்து: மனிசனாய் பிறந்தால் தன்னாலை நாலுபேருக்க உதவியா இருக்கவேணும். அதுவும் கஸ்ரப்பட்ட ஏழைபாழையளுக்கு உதவியா இருக்கவேணும். அப்பதான் அவன் செத்தாலும் சனங்களின்ரை மனசில வாழுவான்.  See that thy life the praise of generous gifts obtain; Save this for living man exists no real gain. Donnez! vivez avec gloire! Il n’y a pas de profit plus grand à l’homme que celui-là. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். 232 இவ்வுலகில் பேசுவோர் சிறப்பாகப் பேசுவன எல்லாம் தம்மிடம் வந்து யாசிப்வர்கு அவர் வேண்டும் ஒரு பொருளைக் கொடுத்து உதவுவோரிடம் நிற்பதாகிய புகழையேயாகும். எனது கருத்து: அந்தக்காலத்திலை பாத்தியள் எண்டால் இந்தப்புலவர்மாருக்கு வேலையே அரசன்மாரை ஏத்தி ஏத்தி கவிதையள் எழுதிறது தான். ஏனெண்டு நினைக்கிறியள் ?அப்பிடி அரசன்ரை புகழுகளை சொன்னால் அவரும் ஏழைஎழியதுகளுக்கு குடுப்பரெல...

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...