11 . காட்டு நெட்டைக்காலி குருவி (OLIVE-BACKED PIPIT-Indian pipit or Hodgson's pipit-tree pipit -Anthus hodgsoni
மேலதிக விபரங்களுக்கு இங்கே சொடுக்குங்கள் .
http://en.wikipedia.org/wiki/Olive-backed_Pipit
00000000000000000000000000
12 கருப்பு வெள்ளை மீன்கொத்தி- Pied Kingfisher, Ceryle rudis
கருப்பு வெள்ளை மீன்கொத்தி (Pied Kingfisher, Ceryle rudis) ஒரு நீர் மீன்கொத்தி. இதன் உடலில் கருப்பு மற்றும் வெள்ளை நிறச்சிறகுகளைக் கொண்டிருப்பதால் கருப்பு வெள்ளை மீன்கொத்தி என்றழைக்கப்படுகிறது. இது நீர்நிலைகளில் மீன்களைப் பாய்ந்து பிடிக்கும் முன்பு பறந்து கொண்டிருக்கும். இப்பறவை ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் பரவலாகக் காணபடுகிறது. இப்பறவையே மீன்கொத்திகளில் பொதுவாகக் காணப்படும் மூன்றாவது மீன்கொத்தி என்று கணிக்கப்பட்டுள்ளது.
இவை மீன்களையே முதன்மை உணவாகக் கொண்டாலும் பெரிய நீர்வாழ் பூச்சிகளையும் உண்ணும். இதன் இனப்பெருக்க காலம் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையாகும்.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
00000000000000000000000000000
13 பச்சைக்கதிர் குருவி -Greenish Warbler-Phylloscopus trochiloides
மேலதிக விபரங்களுக்கு இங்கே சொடுக்குங்கள்.
http://www.zoology.u...shwarblers.html
000000000000000000000000000000000
14 பனங்காடை குருவி - பால்க்குருவி - Indian Roller - Coracius bengalensis
பனங்காடை என்பது ஆசியக் கண்டத்தின் தெற்குப்பகுதியில் காணப்படும் ஒரு பறவை. இப்பறவை பாலக்குருவி என்றும் அழைக்கப்படும் .இது ஈராக் முதல் தாய்லாந்து வரை காணப்படுகிறது. இப்பறவை நீலமும் பழுப்பும் கலந்த நிறத்தில் இருக்கும். திறந்த புல்வெளிகளிலும் காட்டுப்பகுதிகளிலும் பொதுவாகக் காணப்படும். ஆண், பெண் பறவைகளுக்கிடையே தோற்றத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை. கொண்டை, வால், இறக்கைப் பகுதிகள் நீலநிறத்திலும் கழுத்து உடலின் அடிப்பகுதி பழுப்பு நிறத்திலும் இருக்கும்.
விளைநிலங்கள், அடர்த்தி குறைந்த காடுகள், திறந்த புல்வெளிகள் ஆகியவையை இவற்றின் முதன்மையான வாழிடம். எனினும் இவற்றை நகர்ப்புறங்களில் மின்கம்பிகளின் மீது அமர்ந்திருக்கக் காணலாம்.
இப்பறவைகள் சிறு பூச்சிகள், ஊர்வன, தவளை முதலானவற்றை உணவாகக் கொள்ளும். மார்ச் முதல் சூன் வரையான காலம் இவற்றின் இனப்பெருக்க காலம். பொதுவாக மரப்பொந்துகளில் மூன்று முதல் ஐந்து வரை முட்டைகள் இடும். இவற்றின் ஒலி காக்கை கரைவது போல் இருக்கும்.
இப்பறவை கர்நாடகா, ஆந்திரா, ஒரிசா, பீகார் மாநிலங்களின் மாநிலப்பறவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பனங்காடையைப் பார்த்தால் நல்ல சகுனம் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு.
முன்பு மேனாட்டுச்சீமாட்டிகள் உடையலங்காரத்திற்கு இதன் சிறகுகளைப் பயன்படுத்தியதால் இவை வேட்டையாடப்பட்டு இதன் இறகுகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.
http://ta.wikipedia....g/wiki/பனங்காடை
000000000000000000000000
15 பிளித் நாணல் கதிர்க்குருவி - Blyth's Reed Warbler -Acrocephalus dumetorum
மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லவும்.
http://en.wikipedia....'s_Reed_Warbler
000000000000000000000000
16 . பூநாரை -Greater Flamingo -Phoenicopterus roseus
பூநாரை (Greater Flamingo) என்பது நாரைக்(Family PHOENICOPRERUDAE) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இதன் அறிவியல் பெயர்(Phoenicopterus roseus, P. minor) என்பதாகும். நம் வீடுகளில் வளரும் வாத்தின் பருமனுடைய இப்பறவைக்கு நீண்ட முடியற்ற சிவந்த கால்களும், நீண்டு வளைந்த கழுத்தும், குறுகிய வளைந்த அலகும் இருக்கும். கால் விரல்கள் வாத்துக்கு இருப்பது போலவே சவ்வினால் இணைந்திருக்கும். நிமிர்ந்து நின்றால் 1 1/2 மீட்டர் உயரம் இருக்கும். இப்பறவைகள் செந்நிறம் கலந்த வெள்ளையுடலும் கரு நிறமான இறக்கை ஓரமும் கொண்டவை. நிலத்திலும் அதிக உப்புத்தன்மை அதிகமுள்ள ஏரிகளில் கடும் வெப்பத்தையும் தாங்கி வாழும் பூநாரை, தமிழகத்திலுள்ள கோடியக்கரை வனவுயிரினங்கள், பறவைகள் உய்விடம் புகலிடத்திற்கு வரும் எண்ணற்ற பறவைகளில் மிகவும் அழகான ஒன்று. இப்பறவைகள் கூட்டம் கூட்டமாகப் பறந்து உயரச் செல்லும் காட்சி மனதைக் கவரும் தன்மை உடையது.
பூநாரைகள் எளிதில் நீந்தக் கூடியன. சற்று ஆழமான நீரில் இடை தேடும்போது இதன் வால் மட்டும் நீருக்கு வெளியேயும், உடல் முழுவது நீருக்குள்ளும் இருக்கும். இந்த முக்குளித்த நிலையிலேயே புழுக்களை அரித்து உண்ணும். செங்கால் நாரைகள் வாத்து பறப்பது போன்ற அமைப்பிலோ அலையலையான நீண்ட சாய்வுக் கோடுகளாகவோ வேகமாகச் சிறகுகளை அடித்துப் பறந்து செல்லும். ஒடுங்கிய கழுத்தை நீட்டிப் பறக்கும்போது சிவந்த கால்களையும் சேர்த்துப் பின்னால் நீட்டிக் கொள்ளும். இவை சபதமிடுவதில்லை. ஆனாலும் சில சமயங்களில் வாத்துகள் போன்று ஒலி எழுப்பக்கூடியவை. இரை மேயும்போது கூட்டத்தில் உள்ள அனைத்துப் பறவைகளும் தொடர்ச்சியாகப் பிதற்றிக் கொண்டிருப்பது போல் தோன்றும்.
ஆழமற்ற நீரில் இறங்கி வரிசையாக நின்று, தலையை நீருக்குள் ஆழ்த்தித் தனக்கே உரிய விந்தையான மேல் அலகைத் தரையில் படும்படி கவிழ்த்து வைத்து முன்னே இழுத்துக் கொண்டு சேற்றைக் கலக்கிய வண்னம் நடக்கும். இந்நிலையில் இதன் மேல் அலகு கிண்ணம் போல் அமைந்து, சேற்று நீர் அதில் சேகரிக்கப்படுகிறது. சதைப் பற்றுள்ள நாக்கு இந்நீரினுள் ஒரு மத்துப் போல கடைந்தவாறு, புழு புச்சிகளை அலசும். இதன் சீப்பு போன்ற அலகு ஓரங்களில் உள்ள இடைவெளிகள் வழியே நீர் வெளியேறி பூச்சிகள் அலகிலேயே தங்கிவிடும். இதன் அலகு ஒரு வடிகட்டி போல செயல்படும். சிறு நண்டு, கூனிறால்கள், பூச்சிகள், புழுக்கள், நிலபுழுக்கள், நீர்த்தாவரங்களின் விதைகள், அழுகிப் படிந்த பொருட்கள் இவை பூநாரையின் முக்கிய உணவுப் பொருள்களாகும்.
பூநாரைகள் சேறு படிந்த கடற்கரை மேடுகளிலும், உப்புக் க்லப்புள்ள அகன்ற நீர்த் தேக்கங்களிலும் ஆழமிலாக் குளங்களிலும் கூட்டம் கூட்டமாக வாழும் இயல்புடையவை. பூநாரைகள் இந்தியாவின் பல பகுதிகளில் இடம்பெயராமல் வாழ்பவை. என்றாலும் சிறிதளவு உள்நாட்டுக்குள்ளேயே இடப்பெயர்வு செய்கின்றன. இவை சிறு சிறு கூட்டங்களாகவோ பெருங் கும்பல்களாகவோ வாழும். சில கூட்டங்களில் ஆயரத்துக்கு மேற்பட்ட பறவைகளும் இருக்கலாம்.
இந்தியாவில் குஜராத்தின் கச்சு (Rann of Kutch) வளைகுடாப் பகுதியில் இவை அதிக அளவில் காணப்படுகின்றன. அக்டோபரிலிருந்து மார்ச்சு மாதம் வரை ஏராளமான பறவைகள் இங்கு கூடுகின்றன. அப்பொழுது நீரின் தன்மையும் இவற்றுக்கு ஏற்றதாக உள்ளது. இக்காலத்தில் சுமார் ஒன்றரை இலட்சம் பறவைகள் இங்கு கூடுகின்றன. இக்காலங்களில் குஞ்சு பொரிக்கும் கூட்டங்களில் இது தான் மிகப் பெரியதாகும். பல்லாயிரம் பூநாரைகள் ஒன்றாக கூடி இருப்பது இவற்றின் தனித்தன்மை - இதுவே இவற்றுக்கு பாதுகாப்பும் அளிக்கின்றது. நீண்ட கால்களையும் நீண்ட கழுத்தையும் நீட்டியபடி பூநாரைகள் கூட்டம் கூட்டமாக பறந்து செல்வது ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும்.
பூநாரைகள் கூடுகட்டி, முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. இவற்றின் கூடு சேற்று மண்ணைக் குவித்து ஏற்படுத்தப்படுகின்றது.பூநாரை ஈரமான களிமண்னால் கூடு கட்டும். ஈரமான களிமண்ணைக் உயரமாகக் கூப்பி வைக்கப்பட்ட கிண்ணம்போல் இதன் கூடு இருக்கும். சூரிய வெப்பத்தால் உலந்து கெட்டியாக இதன் கூடு அடுப்பில் வைத்து சுட்டது போலவே நேர்த்தியாக இருக்கும் இது சுமார் 30 செ.மீ உயரமிருக்கும். இனச்சேர்க்கை முடிந்து, இதன் உச்சியிலுள்ள குழிவில் சராசரியாக ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் இடப்படும். முட்டையிட்டபின் ஆண், பெண் பூநாரைகள் இரண்டுமே ஒன்று மாற்றி ஒன்று அடை காக்கும். அடைகாக்கும் நாரை இதன்மேல் காலை மடக்கிக் கொண்டு தான் உட்கார்ந்து அடைகாக்கும்.
பூநாரைகள் உண்ணும் கூனிறால் -போன்ற ஒரு வகை கிரத்தேசிய உயிரினம் தான் இவற்றின் இளஞ்சிவப்பு நிறத்துக்கு காரணமாகும். பறவைகள் காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்படும் பூநாரைகள் இந்நிறமற்று காட்சியளிப்பது நாம் அறிந்ததே. மாறிவரும் இயற்கை சமநிலை காலமாக இப்பறவையினம் குறைந்து கொண்டே வருகிறது. மகிழ்வூட்டும் இப்பறவைகளின் கோடியக்கரை வரத்து வருடாவருடம் குறைந்து கொண்டிருப்பது நமக்கு ஒரு எச்சரிக்கை மணியே.
http://ta.wikipedia....org/wiki/பூநாரை
000000000000000000000000000000
17 கூழைக்கடா - மத்தாளி அல்லது மத்தாளிக் கொக்கு - Spot-billed Pelican-grey pelican-Pelecanus philippensis
சாம்பல் கூழைக்கடா ( Spot-billed Pelican or Grey Pelican - Pelecanus philippensis ) என்பது (பெலிக்கனிடே) கூழைக்கடாக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை. இப்பறவையை வேடந்தாங்கல் பகுதியில் மத்தாளி அல்லது மத்தாளிக் கொக்கு என்றும் அழைக்கின்றனர் . கூழைக்கடாக்கள் பறக்கும் பறவைகளில் மிகப் பெரிய நீர்ப் பறவை. 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பறவை. இதன் தசை கெட்டியாக இல்லாமல், மென்மையாக கூழ் போன்று இருப்பதாலும், கிடா போன்று பெரிதாக இருப்பதாலும் இதை கூழைக்கடா என அழைக்கிறார்கள். இதன் எடை 4.5 முதல் 11 கிலோ வரை இருக்கும். சிறகுகளின் நீளம் 2.7 மீ. மொத்த உயரம் 127 முதல் 182 செ.மீ. அலகு நீளம் 22 செ.மீ. கூழக்கடாக்கள் நெடுந்தூரம் வலசை செல்லும் இயல்புடையவை.இவ்வினத்தின் எண்ணிக்கை மிதமான-துரித வீதத்தில் குறைந்து வருவதால் இதனை அச்சுறுத்துநிலையை எட்டியவை என்ற பிரிவில் ஐயுசிஎன் - சிவப்புப் பட்டியலில் வகுத்துள்ளது.
நம் நாட்டில் புள்ளிவாய்க் கூழைக்கிடா, டால்மில்டன், பெரிய வெள்ளைக் கூழைக்கடா ஆகிய மூவகை கூழைக்கடாக்க காணப்படுகின்றன. ஸ்பாட் பில்டு பெலிக்கன் நீண்ட அலகின் இரு பக்கங்களிலும் கறுப்பு புள்ளிகளையுடையது. கூழைக்கடா இனத்திலேயே சிறியதான பழுப்புக் கூழைக்கடா 125–152 செ.மீ. நீளமும் 4.1–6 கி.கி. எடையும் உடையவை. தொங்குபை இளஞ்சிவப்பாகவோ ஊதா நிறத்திலோ இருக்கும். தால்மேசியன் கூழைக்கடா என்பதே இவ்வினத்தில் பெரியதெனக் கருதப்படுகிறது. இது 15 கிலோ எடை வரை இருக்கும். சிறகுகள் விரிந்த நிலையில் 11.5 அடி அகலம் இருக்கும். மற்ற கூழைக்கிடாக்களை விடவும் பழுப்புக் கூழைக்கிடாக்கள் சிறியவை; தாடையின் மேல்பகுதியில் புள்ளிகள் தென்படும். பளிச்சென்ற நிறமில்லாததும் பழுப்பு நிறமும் இவற்றை மற்ற கூழைக்கிடாக்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டும்
கூடைக்கடா நன்றாக நீந்தக் கூடியது. கூழக்கடாக்கள் விண்ணில் தாவிப் பறக்க தொடங்கும்போது, நீரில் தேவைக்கேற்ற தூரம் ஓடி (தேவை ஏற்படும்போது குறுகிய தூரம் நீரில் ஓடி அல்லது தரையில் ஓடி) விண்ணில் சாய்தளப் பாதையில் ஏறுகிறது. விண்ணில் தன்னை சமநிலைப்படுத்தியதும், எந்தவித தடுமாற்றமுமின்றி, சீரான சிறகடிப்பில், தலையை இரண்டு தோள்பட்டைகளுக்கு இடையில் இழுத்து வைத்து பறக்கும். இவ்வாறு பறந்து செல்லும்போது முதலில் பறந்து செல்லும் பறவை அதிக திறனை பயன்படுத்துவதால் ஏற்படும் களைப்பைப் போக்க, பின்னால் பறக்கும் பறவை முதலில் வந்து தங்கள் இடங்களை மாற்றிக் கொள்ளும். கூழக்கடாக்கள் நீர்நிலைகளை அடையும்போது நேர்கோட்டில் பறந்து வரும். நீரில் இறங்கும்போது வட்டமிட்டு அல்லது ஆர ஒழுங்கில் பறந்து சாய்தளமாக இறங்கி கொஞ்சதூரம் ஓடி சறுக்கி இறங்கும்.
பெரிய உடலும் சிறு கால்களும் கொண்டவை கூழைக்கிடாக்கள்; அவற்றின் சிறப்பம்சம் தொங்கும் பை போன்ற தாடை. மேல் அலகின் நுனி கீழ் நோக்கி வளைந்தது. முன்பக்கம் கரண்டி போல் அகன்றும், தட்டையான மேல் அலகு கீழ்கை மூடி போல் மூடியிருக்கும். இதன் காலின் நான்கு விரல்களும் சவ்வால் இணைக்கப்பட்டிருப்பதால் நீரில் எளிதாக நீந்தும். உடலிறகுகள் வெள்ளை. ஆனால், சிறகுகளிலுள்ள நீண்ட இறகுகள் கறுப்புநிறம். வாலும் கறுப்புநிறம். சதுரவடிவம். தலையின் மேல் சிகரம் போல் முடிச்சாக காணப்படும். இதன் அதிக எடை, பரந்த உடல் அமைப்பு பறக்கும் வேகம். இது விண்ணில் விபத்துகளைத் தவிர்த்து பாதுகாப்பாக பறக்க உதவும் காரணிகளாகும்.
கூழைக்கடாக்கள் பொதுவாக இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. வளர்ந்த நிலையில் வெண்ணிறமாக இருக்கும் பறவைகள் ஒரு வகை. இவை தரையில் கூடு கட்டி வாழ்கின்றன. ஆத்திரேலிய, தால்மேசிய, வெள்ளைக் கூழைக்கடாக்கள் இவற்றுள் அடங்கும். மற்றொரு வகை வளர்ந்த நிலையில் பழுப்பு நிறம் கொண்டிருக்கும். இவை மரத்தில் கூடு கட்டும். பழுப்புக் கூழைக்கடா, புள்ளிவாய்க் கூழைக்கடா போன்றன இவ்வகையைச் சேர்ந்தன. பெருநாட்டுக் கூழைக்கடா கடற்புறங்களில் உள்ள பாறைகளில் கூடு கட்டி வாழும்.
இதன் முக்கிய உணவு மீன்களாகும். தனியாக அல்லது கூட்டமாக குளங்களில் இரைதேடும். நீருக்கடியில் சுமார் ஒரு அடி ஆழத்தில் நீந்தி செல்லும் மீன்களைப் பார்க்கும் கூர்மையான கண்களையுடையது. நீருக்கடியில் மீன்களைக் கண்டதும் அலகை நீருக்குள் நுழைத்து பை போன்ற அலகில் மீனை முகர்ந்து பிடிக்கிறது. கூழக்கடாவின் நீண்ட உணவு குழலில் இருக்கும் அரைக்கப்பட்ட முழுமையாக செரிக்கப்படாத உணவு மீண்டும் வாய்க்குள் கொண்டுவரப்படுகிறது. இதைக் குஞ்சுகள் அருந்துகின்றன. கூழக்கடாக்களால் மீன் பண்ணைகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. ஆனால், உண்மையில் இவை வேட்டையாடும் மீன்கள் பெரிதும் நோய்வாய்ப்பட்ட மீன்களே ஆகும்.
தெற்காசியாவில் தென் பாகிஸ்தானிலிருந்து இந்தியா உள்பட கிழக்கே இந்தோனேசியா வரை கூழைக்கிடாக்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. கூழைக்கடாக்கள் அண்டார்டிக்காவைத் தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் காணப்படுகின்றன. கூழைக்கடாக்கள் டிசம்பர் மாதத்தில் புளியமரங்கள், பனைமரங்களில் குச்சிகளை வைத்து நடுவில் குழிந்த பெரிய மேடை போன்ற கூட்டைக்கட்டும். கூடுகள் ஒன்றோடொன்று இணைந்து காணப்படும். கூட்டை பத்து நாட்களில் கட்டி முடித்துவிடும். கூடுகளைக் கட்டுவதற்கு முன்னர் ஆண், பெண் இருபறவைகளும் உடலுறவு கொள்ளும். 2 அல்லது 3 முட்டைகள் இடும். ஆரம்பத்தில் வெள்ளைநிறத்தில் இருக்கும் முட்டைகள் நாளாக நாளாக அழுக்கு நிறத்தில் காணப்படும். ஆண்-பெண் இருபறவைகளுமாக சேர்ந்து 21 நாட்கள் அடைகாக்கும். முட்டை பொரித்து ஒரு வாரத்திற்குப் பிறகு குஞ்சுகளுக்கு உணவூட்டும். குஞ்சுகள் முழு வளர்ச்சியடைய ஓராண்டு காலமாகும். கூழைக்கடாக்கள் குஞ்சுகளை தூக்கவரும் பறவைகளை வெறியுடன் தாக்கும்.
பின்வரும் திருக்குற்றாலக் குறவஞ்சிப் பாடல் கூழைக்கடா தென்தமிழகத்தில் அறியப்பட்டிருந்ததைக் காட்டுகிறது.
" வருகினும் ஐயே! பறவைகள் வருகினும் ஐயே! வருகினும் ஐயே! திரிகூட நாயகர் வாட்டமில்லாப் பண்ணைப் பாட்டப் புறவெல்லாம் குருகும் நாரையும் அன்னமுந் தாராவும் கூழைக் கடாக்களும் செங்கால் நாரையும் (வரு) "
http://ta.wikipedia..../wiki/கூழைக்கடா
0000000000000000000000000000
18 கருந்தலை மீன்கொத்தி -Black-capped Kingfisher -Halcyon pileata
ஆங்கிலத்தில் இருப்பதற்கு மன்னிக்கவும்
Rare, and very endangered, but very beautiful the Black Capped King Fisher can be found along the shores of Koh Chang. They are found in jungle areas and generally eat fish and nest in cracks in the mountains. They are colorful and the sexes have little difference between their plumage. A very beautiful and rare bird but we still have them here on the island. Always a good idea to travel with binoculars and a notepad it seems!
http://kohchangsun.com/king-fisher/
000000000000000000000000
19 வண்ணாத்திக்குருவி அல்லது குண்டுக்கரிச்சான் -oriental magpie-robin Copsychus saularis.
வண்ணாத்திக்குருவி வீட்டுத்தோட்டங்களிலும் காடுகளிலும் எளிதில் காணக்கூடிய ஒரு பாடுங்குருவி ஆகும். தன் வாலைத் தூக்கியபடி நிற்கும் இயல்புடைய இக்குருவி 19 செ.மீ நீளமுடையது. இலை,தழைகளுக்கிடையிலும் வீட்டுத்தோட்டங்களில் உள்ள சாக்கடைகளிலும் இருக்கும் பூச்சி, புழுக்கள் இவற்றின் முக்கிய உணவாகும். முள்ளிலவு, கலியாண முருக்கை ஆகிய மரங்களின் தேனையும் இவை உண்ணும்.
வண்ணாத்திக் குருவியின்ஆண் குருவியானது கருமைநிற மேல்பகுதியில் வெண்ணிறத்தில் தோள்பட்டைச் சிறகுடையது; இதன் அடிப்பகுதி வெண்ணிறமுடையது. இனப்பெருக்க காலங்களில் இது் அருமையான சுருதிகளில் பாடி தன் எல்லையை அறிவிக்கும் இயல்பு கொண்டது.வண்ணாத்திக்குருவியின்பெண் குருவியானது சாம்பல் நிறமுடையது.
வண்ணாத்திக் குருவி மரப் பொந்துகளிலோ அல்லது வீட்டுச் சுவற்றில் உள்ள பொந்துகளிலோ தன் கூட்டினை அமைக்கும். கூடு காய்ந்த வேர்கள், புல் மற்றும் மயிர்களால் ஆன ஒரு தட்டை மேடை ஆகும். செம்புள்ளிகள் கொண்ட வெளிர் நீல நிறத்திலான மூன்று முதல் ஆறு வரையிலான முட்டைகளை இப்பறவை இடும். குஞ்சுகள் வெளிவந்தபின் தாய் தந்தை இரு பறவைகளுமே புழு பூச்சிகளைக் கொண்டுவந்து அவற்றுக்கு அளிக்கும்.
வண்ணாத்திக் குருவி மாந்தர் வாழும் இடங்களில் காணப்படும் ஒரு பறவை. பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை இதைப் பெரும்பாலும் காண இயலும். மற்ற மாதங்களில் இது பாடாது என்பதால், இதன் இருப்பை அறிந்து கொள்வது கடினம். பிப்ரவரி மாதம் அடர் கருப்பு-வெள்ளை நிறச் சிறகுத் தொகுதியுடன் ஆண் பறவை திடீரெனத் தோன்றி இலை உதிர்ந்த மரங்களின் உச்சாணிக்கிளைகளிலோ அல்லது மின் கம்பங்களிலோ அமர்ந்து பாட ஆரம்பிக்கும். முதலில் சுருதி சுத்தமற்று நாராசமாகக் கிளம்பும் சுரங்கள் போகப்போக காதுக்கினிய கீதங்களாக மாறும். சுருதி சுத்தமான கீதம் கிளம்பிய சில நாட்களுக்குள் இசையில் மயங்கிய பெண் குருவி தோன்றும். அவை ஒன்றையொன்று துரத்திப் பிடித்து விளையாடி பின்னர் கலவியில் ஈடுபடும். இரு ஆண் குருவிகள் சண்டையிடுவதும் அடிக்கடி நடக்கக்கூடிய ஒன்றே.
http://ta.wikipedia....்ணாத்திக்குருவி
000000000000000000000
20 மாங்குயில் அல்லது மாம்பழக்குருவி-Eurasian golden oriole- golden oriole-Oriolus oriolus
மாங்குயில் உடலில் மஞ்சள் நிறமும் இறக்கையில் கறுப்பு நிறமும் கொண்ட பறவை. இதன் அறிவியல் பெயர் ஓரியோலசு ஓரியோலசு (Oriolus oriolus). கண்ணருகேயும் கறுப்புத் திட்டுகள் இருக்கும். ஏறாத்தாழ 22-25 செமீ(9-10 அங்குலம்) நீளமுடைது. வீட்டுக் குருவியை விடப் பெரியது. சற்றேறக்குறைய மைனா அளவினது. இது மாமரத்தில் காணப்படுவதாலும், மாம்பழம் போல் மஞ்சளால் இருப்பதாலும் மாங்குயில் எனப்படுகின்றது. இதன் குரல் இனிமையாக இருக்கும் .
மாங்குயில் முட்டைகள் வெளிரிய இளம் பழுப்பு நிறத்தில் கரும்புள்ளிகளுடன் இருக்கும். கூட்டில் 3-4 முட்டைகள் இருக்கும். இதன் குஞ்சுகள் இளம்பச்சை நிறத்தில் இருக்கும். குஞ்சுகளின் தொண்டை , நெஞ்சுப்பகுதிகளும் அடிப்பகுதிகளும் வெள்ளை நிறத்தில் இருக்கும் அடர்ந்த நிறத்தில் கோடு கோடாக இருக்கும்.
தலையில் கறுப்பாக உள்ள மாங்குயில் வேறு இனம், அதன் பெயர் கருந்தலை மாங்குயில் (அறிவியல் பெயர் ஓரியோலசு காந்தோமசு Oriolus xanthomus). ஓரியோலசுக் குடும்பத்தைச் சேர்ந்த இவை தவிர மாங்குயில் போலவே தோற்றம் அளிக்கும் அமெரிக்க மஞ்சக்குயில்களும் ஆங்கிலத்தில் ஓரியோல் (Oriole) என்னும் அதே பெயரால் அழைக்கப்பட்டாலும் அவை முற்றிலும் வேறு பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தவை. அமெரிக்க மஞ்சக்குயில்கள் அறிவியல் வகைப்பாட்டின்படி இக்டேரசு (Icterus) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவை .
http://ta.wikipedia....wiki/மாங்குயில்
March 01, 2013
Comments
Post a Comment