Skip to main content

Posts

Showing posts with the label அடுத்தவீட்டு வாசம்- புதினம்

வேங்கையின் மைந்தன்-பாகம் 2- 9- இனி நண்பனல்ல!

அரண்மனை அந்தப்புரத்தில் இளங்கோவை அவன் அன்னையார் ஆதித்த பிராட்டி அத்தையார் வீரமாதேவி, பாட்டியார் பெரிய குந்தவை இவர்கள் அனைவரும் சூழ்ந்து கொண்டு தங்களது ஆனந்தக் கண்ணீரால் குளிப்பாட்டினார்கள். அருள்மொழியின் தங்கை அம்மங்கையோ அவன் மீது தன் பரிகாசச் சொற்களைச் சரமாரியாகப் பொழியத் தொடங்கினாள். “ஒரே ஒரு போர்க்களத்துக்குச் சென்று ஒரே ஒரு விழுப்புண்ணோடு திரும்பியிருக்கிறார் இவர். இவரைப் போய் எல்லோரும் வீராதி வீரர், சூராதி சூரர் என்கிறார்கள். இவருக்குப் புகழ் தேடிக் கொள்ளவே தெரியவில்லை. சின்னஞ்சிறு விழுப்புண் தழும்புகள் ஐம்பது அறுபதாவது உடலில் இருக்கவேண்டாமா?’’ “நீ சற்று நேரம் சும்மா இருக்கமாட்டாயா?’’ என்று தமது மகளை அதட்டினார் வீரமாதேவி. “போங்களம்மா! கவசம் போட்டுக்கொள்ளாமல் இப்படியா போய்ப் பகைவன் கையில் அகப்பட்டுக் கொள்வது. ஒரு சாண் ஆழம், இரண்டு சாண் அகலத்துக்கு அவன் இவர் தோளைப் பிளந்து தள்ளியிருக்கிறானே! இதைப்போல் இரண்டாவது விழுப் புண்ணைத் தேடிக்கொண்டிருந்தால் இவர் கதிஎன்ன?’’ “உனக்குக் கவசம் போட்டுவிடுகிறேன். அதோடு சுனைக்குள் இறங்கி நீந்திச் செல்கிறாயா?’’ என்று கேட்டான் இளங்கோ. “எனக்கு நீந்தத் த

வேங்கையின் மைந்தன்-பாகம் 2 , 8. தந்திரம் வெல்லுமா?

வீரமல்லன் மதுரை மாநகரை விட்டுத் தஞ்சைத் தலைநகருக்குப் புறப்பட்ட அன்று பெரும்பிடுகு முத்தரையரின் மகள் திலகவதியிடம் சென்று விடைபெற்றுக்கொண்டு வந்ததோடல்லாமல், அவள் வாயிலாக அவள் தந்தைக்கும் கூறிவிட்டு வந்தான். அவன் அப்படிச் செய்ததற்குப் பல காரணங்கள் இருந்தன. திடீரென்று அவன் மதுரையைவிட்டு மறைந்து போனால் திகலவதி வீணாகச் சந்தேகப்படுவாள். அவளுடைய சந்தேகம் அவள் தந்தைக்குப் பரவாமல் இருக்காது. வீரமல்லன் இதைச் சிறிதும் விரும்பவில்லை. பெரும்பிடுகு முத்தரையர் சுந்தரபாண்டியரின் சேனாபதியாக இருந்தாலும் அவர் வீரமல்லனின் குலத்தைச் சேர்ந்தவர்; அவனும் ஒரு முத்தரையன் என்பதாலேயே அவனை எளிதில் நம்பியவர். அவருடைய நம்பிக்கை, சுந்தரபாண்டியரிடம் அவனுக்குப் பரிச்சயம் ஏற்படுத்தி வைக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டதை நினைத்து வீரமல்லன் வியப்படைந்தான். முத்தரையரைப் பகைத்துக் கொள்ளவும் அவனுக்கு எண்ணமில்லை; தான் ஓர் ஒற்றன் என்று காட்டிக்கொள்ளவும் அவன் விரும்பவில்லை. மேலும் அவருக்கு ஓர் அழகான அசட்டுப் பெண் இருந்தாள். பெண்களுக்கு அறிவு தேவை என்று அப்போது வீரமல்லன் நினைக்கவில்லை. அவளிடம் அழகு இருந்தது; கண்கவரும் பேரழகுடன் அவள்

வேங்கையின் மைந்தன்-பாகம் 2 , 7. மலர் தூவிய மங்கையர்

  அவள் சென்று மறைந்த இருள்வெளியைப் பார்த்துக் கொண்டு நின்ற இளங்கோ, சட்டென்று படிகளில் ஏறிக் கரையோரமாக நடந்தான். இனம் புரியாத வேதனையால் அவன் மனம் புழுங்கத் தொடங்கியது. விரும்புகிறேன் என்று ஒரே ஒரு சொல் அவள் சொல்லிவிட்டுப் போகக்கூடாதா? வெறுப்பையாவது அவனால் ஒருவகையில் தாங்கிக் கொள்ள முடிந்தது. விருப்பும் வெறுப்புமற்ற சூனியத்தை எப்படித் தாங்குவது? ஒன்று சொர்க்கத்தில் மிதக்க வேண்டும். அல்லது நரகத்தில் உழல வேண்டும். சொர்க்கமும் நரகமுமற்ற ஓர் அந்தரத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டுப் போய்விட்டாளே! குனிந்த தலை நிமிராமல் அவன் நடந்து கொண்டிருந்த போது, “இளங்கோ’ என்று குரல் கேட்டுத் திடுக்கிட்டான். குளத்தங்கரைச் சுவரில் ஓர் உருவம் சாய்ந்து கொண்டு நின்றது. “யாரது?’’ “பாவம்! குரல்கூட உனக்கு மறந்துவிட்டது. இந்த ஏழை நண்பனை நீ அதற்குள்ளாக மறந்திருக்க முடியாது இளங்கோ!’’ வீரமல்லனின் கரம் உரிமையோடு இளங்கோவின் தோளை வளைத்துக் கொண்டது. இளங்கோவுக்கு அது பிடிக்கவில்லை. மெதுவாக அவன் கரத்தைத் தன்னிடமிருந்து எடுத்துவிட்டுக் கொண்டே, “ஓ, நீயா?’’ என்று ஏதோ கனவிலிருந்து விழித்துக் கொண்டவனைப் போலக் கேட்டான். “ஆமாம்! நான்தா

வேங்கையின் மைந்தன் பாகம் 2 , 6. கூண்டுக் கிளியின் குரல்!

  குளத்தின் மத்தியில் முளைத்தெழுந்த ஒளித் தீவான நடுவர் ஆலயத்தைப் பார்த்தவண்ணம் இளங்கோவும் ரோகிணியும் குளத்தங்கரைப் படிக்கட்டில் அமர்ந்திருந்தனர். சந்திப்பு நிகழ்ந்தவுடன் வெடித்துக் கிளம்பிய பேச்சு அப்படியே பாதியில் அறுந்துவிட்டது. அதை மீண்டும் ஒட்டவைத்து உரையாடலை முன்போலத் துவங்க வேண்டும். முதலில் யார் பேசுவது? அவள் பேசுவாள் என்று அவன் எதிர்பார்த்தான், அவன் பேசுவான் என்று அவள் எதிர்பார்த்தாள். ரோகிணிக்கு வாயைத் திறப்பதற்கு அச்சமாயிருந்தது. அவனுக்கோ அவளுடைய மௌனத்தின் காரணம் தெரியவில்லை. பேசக்கூடாதென்று அழுத்தம் செய்கிறாளா? பொறுத்துப் பார்த்தான் இளங்கோ. ரோகிணியின் மௌனத்தை அவனால் மேலும் பொறுக்க முடியவில்லை. குளத்துக்குள் குனிந்து படியருகில் குவிந்திருந்த ஒரு தாமரையை வெடுக்கெனக் கிள்ளித் தண்ணீரில் வீசிவிட்டு, கோபத்துடன் எழுந்தான், திரும்பி நடந்தான். “எங்கே போகிறீர்கள்?’’ என்று கத்தினாள் ரோகிணி. “என்னை விரும்புகிறவர்கள் யாரோ அவர்களிடம் போகிறேன். மாமன்னர் என்னை விரும்புகிறார்; வல்லவரையர் என்னை விரும்புகிறார்; இன்னும் இந்த நாட்டில் எனக்குத் தெரிந்தவர்களும் தெரியாதவர்களுமாக லட்சோப லட்சம் பேர்க

வேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 5. தென்னாடு உடையாய் போற்றி!

மாடமாளிகைகளும், கூடகோபுரங்களும், பூம்பொழிற் சோலைகளும், நிழல் தரும் சாலைகளுமாக விளங்கியது அந்தக் காலத்துத் திருவாரூர். கமலாலயத் திருக்குளத்தில் கமல மலர்க் கூட்டத்தையும், தாமரை இலைகளான மரகதத்தட்டுக்களையும் காணமுடியுமே தவிர, கண்ணீரைக் காண்பது அரிது. ஒரே மலர்க்காடு, இலைக்கூட்டம், கொடிப்பந்தல். திருக்குளத்தின் மையத்திலுள்ள தீவுக்குச் செல்ல வேண்டுமானால் பக்தர்கள் ஓடங்களில் செல்வார்கள். அந்த ஓடங்களும் மலர்களின்மீது மிதப்பவைப்போல் தோன்றுமே தவிர நீரைக் கிழித்துக் கொண்டு செல்வதாகத் தோன்றமாட்டா. கமலாலயக் கரையிலிருந்த சோழ மாளிகையில் அனைவரும் வந்து இறங்கியிருந்தார்கள். படிக்கட்டுக்கு அருகே இருந்த ஒரு பெரிய கூடம் மகிந்தரின் குடும்பத்தாருக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. மாளிகையின் மத்தியில் தங்கியது மாமன்னரது பரிவாரம். சக்கரவர்த்தியும் இளங்கோவும் மேன்மாடக்கூடத்தில் தனித்திருந்தனர். சோர்வும் களைப்பும் மிகுந்தவனாக இளங்கோ சுருண்டுபோய் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தான். இராஜேந்திரருக்குக் காரணம் விளங்கவில்லை. கப்பலில் அவன் அவர் பார்வைக்குத் தட்டுப்படாமல் தப்பிக் கொண்டிருந்தான். கரைக்கு வந்த பிறகு அவனால் அவரிடம

வேங்கையின் மைந்தன் பாகம் 2 , 4. அகந்தைக்கார அழகி

இராஜேந்திரசோழப் பெரிய உடையார் தமது பரிவாரங்கள் புடைசூழ நாகப்பட்டினத்தை விட்டுப் புறப்பட்டு, அருகில் இருந்த ஆனைமங்கலம் சோழ மாளிகையில் அன்றிரவுப் பொழுதைக் கழித்தார். ஜனத்திரளின் பெரும்பகுதி ஆனைமங்கலத்துக்கு அவரைப் பின்பற்றி வந்தது. ஆனைமங்கலத்தின் வரவேற்பு நாகப்பட்டினத்தின் வரவேற்பையும் மிஞ்சிவிட்டது. தெருக்கள் தோறும் குலை தள்ளிய வாழை மரங்களைக் கட்டியிருந்தார்கள். வீடுகள் தோறும் மாவிலைத் தோரணங்களும், மாவிலைக் குருத்துத் தோரணங்களுமாகத் தொங்கிக் கொண்டிருந்தன. வீட்டுக்கு வீடு நெல் குவித்து, அதன் மேல் முளைக்குடம் வைத்து, சுற்றிலும் தீபச் சுடரொளி பரப்பியிருந்தார்கள். பெண்டிரின் கைவண்ணம் அற்புதம் அற்புதமான மாக்கோலங்களாகத் தெருக்களில் மலர்ந்திருந்தன. மல்லிகை நிற மாவினால் புள்ளிக் கோலங்கள் தீட்டி, தாமரை நிறச் செம்மண்ணால் அவற்றுக்குக் கரை கட்டியிருந்தார்கள்.கோலப் புள்ளிகளின் மேலே பறங்கிப் பூக்களும், செவ்வல்லிகளும் சிரித்துக் கொண்டிருந்தன. ஆடுவோர், பாடுவோர், சிலம்பம் விளையாடுவோர், கும்மியடித்துக் குரல் எழுப்புவோர், இப்படியாக ஆனை மங்கலமே ஆனந்தமங்கலமாக விளங்கியது. வாணவேடிக்கைகளால் ஆகாயமே நந்தவனமாக மா

வேங்கையின் மைந்தன்-பாகம் 2- 3-வெறுப்புத்தானா?

எத்தனை நாழிகை ரோகிணி அதே இடத்தில் ஆடாத அசையாத சிலையாக நின்று கொண்டிருந்தாளோ, அவளுக்கே தெரியாது. கடற்காற்றில் அவளது கருங்குழலின் திவலைகள் நெற்றியில் படர்ந்து துடித்தன. மேலாடை கதிரொளியில் மினுமினுத்துப் பின்னோக்கிப் பறந்தது. கொடி மரத்தை வளைத்துக் கொண்டிருந்த பட்டுக் கயிறுபோல், அவள் துவண்டுபோன பசலைக் கொடியாக அங்கு நின்று கொண்டிருந்தாள். அதே மேல் தளத்தில் மறுகோடியில், ஒரு தங்கக் கட்டிலில் சாய்ந்துன் கொண்டு கிடந்தான் இளங்கோ. அவனால் ஓரளவுக்கு எழுந்து நடமாட முடிந்ததே தவிர, அவனுடைய உடல் நலம் பழைய நிலைக்கு இன்னும் திரும்பவில்லை. வேல் பட்ட காயம் வெளிப்புறம் ஆறிக்கொண்டு வந்தாலும் உள்ளே வேதனையைக் கொடுத்துக் கொண்டுதான் இருந்தது. வைத்தியர் ஏதோ தைலம் தடவிய துணியைக் காயத்தின்மேல் போட்டு வைத்திருந்தார். அதைப் பிய்த்து எடுத்துக் கடலில் வீசி எறியவேண்டும் போல் இருந்தது. நோய்ப் படுக்கை விவகாரமே அவனுக்குப் பிடிக்கவில்லை. சிற்சில சமயங்களில் காயத்தின் தொல்லை தாங்காதபோது வேல் எறிந்து தொலைத்தவன் இன்னும் சிறிது வேகமாக எறிந்திருக்கக் கூடாதா? மணிமுடிப் பேழையை மாமன்னரிடம் கொடுத்தவுடன் இந்த உயிர் உடலை விட்டுப் போயிர

வேங்கையின் மைந்தன் -பாகம் 2 - 02-பாசம் வளர்த்த பகை

  ஆமாம்! வீரமல்லனின் கண்களைக் கவர்ந்த அழகு மோகினி மன்னர் மகிந்தரின் அருமைப் புதல்விதான்; ரோகணத்து இளவரசிதான். ரோகிணி எப்படி இங்கு வந்தாள்? ஈழநாட்டை விட்டு அவள் ஏன் சோழ வளநாட்டுக்கு வந்து சேர்ந்தாள்? கடல் கடந்து நாம் திரும்பவும் ஈழத்துக்குச் செல்லவேண்டும். காடுகளையும் மலைகளையும் கடந்து ரோகணத்துக்குள் நுழையவேண்டும். கப்பகல்லகம் அரண்மனையில், மாமன்னர் இராஜேந்திரரின் அன்புப் பிடியில் அகப்பட்டு, தன் தந்தைக்காகத் துடிதுடித்த ரோகிணியைக் காணவேண்டும். இதோ, அவள் நீதியின் சிகரமான இராஜேந்திர மாமன்னர் மீது சீறிவிழுகிறாள். உணர்ச்சி வயப்பட்ட சிறு புயலென அவரைச் சாடுகிறாள். அன்பும் கருணையும் கொண்ட அவர்மீது ஆத்திரச் சுடுசொல் வீசுகிறாள். “சக்கரவர்த்திகளே! இது அநீதி! அநீதி!’’ என்று குமுறினாள் ரோகிணி. “முடியை என்னிடமே திருப்பிக் கொடுத்தீர்கள்; நாட்டைத் திருப்பிக் கொடுப்பதாய் வாக்களித்தீர்கள். இப்போது இரண்டையும் தாங்களே திரும்பப் பெற்றுக்கொண்டீர்கள். சொன்ன சொல் தவறுவது நியாயமா? நிர்க்கதியாக வந்திருக்கும் என் தந்தையாரைச் சிறையிலிட்டுச் சோழ நாட்டுக்கு இழுத்துச் செல்வது தர்மமா சக்கரவர்த்திகளே! இது அநீதி!’’ என்ற
அரச அன்னம் ஒன்று தனது பரிவாரங்கள் புடைசூழக் கம்பீரமாக மிதந்து வருவதுபோல் மாமன்னர் இராஜேந்திர உடையாரது மரக்கலம் கடல்நீரை இரு கூறாகக் கிழித்த வண்ணம் நாகைத் துறைமுகத்தை நாடிப் பாய்மரச் சிறகடித்து விரைந்தது. கரை காண்பதற்காக மரக்கலத்திலிருந்தவர்களது இருதயம் துடித்த துடிப்பை தும்பைப் பூ நிறத்திலான அதன் பாய்மரச் சேலைகள் வெளியிட்டுக்கொண்டிருந்தன. மரக்கலத்தின் மையத்தில் நின்றதோர் உயர்ந்த கம்பத்தின் உச்சியில் புலிக்கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தது. கப்பல்கள் மிதந்துவந்த காட்சி கண்கொள்ளாக் காட்சி. இராஜேந்திரபூபதியின் முதற்கப்பல் கரையோரமாக நங்கூரம் பாய்ச்சிக் கொண்டிருந்த நேரத்தில், கடைசிக் கப்பல் அடிவானத்தின் அடிவயிற்றிலிருந்து முத்தைப் போல் முளைத்தெழுந்து பளபளத்தது. வெற்றியோடு திரும்பிவரும் தமிழ்மகனைச் சுமந்து வந்த ஆனந்தத்தைக் கீழைக் கடலால் தாங்க முடியவில்லை போலும், தனது ஆயிரமாயிரம் அலைக்கரங்களால் ஆர்ப்பரித்து அது ஆனந்த நடனம் புரியத் தொடங்கியது, கோடிக்கணக்கான வெண்முத்து நீர்த்திவலைகளைக் கரையில் வாரி இறைத்து விளையாடியது. “வாழ்க!’’ “வாழ்க!’’ என்று வாழ்த்தொலி எழுப்பியது கடல். “வெல்க! வெல்க!’