சர்வதேச மகளிர் தினத்தையொட்டி எனது மனதில் தோன்றிய சில எண்ணசிதறல்களைப் பகிரலாம் என எண்ணுகிறேன். முதலில் இந்த விடயத்தை அலச முதல் பெண் விடுதலை அல்லது பெண்ணியம் தொடர்பாக நான் நேர்காணல் செய்த புலம்பெயர் இலக்கிய ஆளுமைகள் பதிவு செய்த கருத்துக்களைப் பார்வையிடலாம். 000000000000000000000000000 " எங்கள் நாடுகளில் மட்டுமல்ல, உலகளாவிய எல்லா நாடுகளிலுமே, பெண்களுக்கான முழு உரிமைகளோ, அங்கீகாரங்களோ இன்னும் கிடைக்கவேயில்லை. கொஞ்ச நாட்களுக்குமுன், அமெரிக்க இராணுவப் பிரிவில் உயர் பதவிகளில் இருக்கும் பெண்கள் சிலர் வெளியிட்ட,தகவல்கள் எல்லோரையும் அதிர்வடையச் செய்தன. இந்தப் பெண்களுக்கு மேலான பதவிகளில் இருக்கும் ஆண்அதிகாரிகளால் பாலியல் சீண்டுதல்களுக்கு ஆளானதை அவர்கள் பகிரங்கமாக வெளியிட்டனர். மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் என்று இன்னும் என்னென்னவோ சொல்லிப் பெண் என்ற காரணத்துக்காகப் பெண்கள் பலவழிகளிலும் கொடுமைப்படுத்தப்பட்டு, அடிமைப்பட்டுக் கிடப்பது தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. இன்னமும் பலநாடுகளில் பெண்களின் கல்வி மறுக்கப்பட்டு ஒரு மூலைக்குள் வைக்கப்படும் அநியாயமும் தன்பாட்டில் கேட்பாரி...
எனது தளத்தில் வெளியாகும் ஆக்கங்களை எங்கும் பகிர்ந்து கொள்ளலாம்