Skip to main content

Posts

Showing posts with the label நடுதல் வாசிப்பனுபவம்

கோமகனின் 'தனிக்கதை ' -அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அண்மையில் நடத்திய வாசிப்பு அனுபவப்பகிர்வில் சமர்ப்பிக்கப்பட்ட நயப்புரை

கோமகனின் ஒவ்வொரு கதையும் புனையப்பட்டதாக தெரியவில்லை. நடந்த நிகழ்வுகளின் பதிவாகவே தோன்றுகிறது. குறும்படமோ திரைப்படமோ தயாரிக்கத்தக்க கதைகள். 0000000000000000000000000 இந்த 16 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பில் பெரும்பாலான சிறுகதைகள், சமூKomakan Book Coverகப் பிரச்சினைகள், அரசியல் பிரச்சினைகள், சாதிப் பிரச்சினைகள் இவற்றின் பிரதிபலிப்பாகவே அமைந்துள்ளன. சமூகத்தின் அவலங்களை அப்படியே தத்ரூபமாக தனக்கே உரிய பாணியில் எழுதியுள்ளார். இவர் பயன்படுத்தும் கிராமிய வட்டார வழக்குச் சொற்கள் இன்றைய இளையதலைமுறையினர், குறிப்பாக புலம்பெயர்ந்து பல திசைகளில், வெளிநாடுகளில் சிதறியிருக்கும் அம்மண்ணுக்குச் சொந்தங்கள் அறிவார்களா? ஒவ்வொரு கதையும் புனையப்பட்டதாக தெரியவில்லை. நடந்த நிகழ்வுகளின் பதிவாகவே தோன்றுகிறது. அதற்கு கோமனின் கிராமிய மண்வாசனை கலந்த வார்த்தைகளின் அழகும், அதில் அவர் புகுத்தியிருக்கும் உணர்வுகளின் அழுத்தமும் மிகப் பெரிய காரணிகளாக இருக்கின்றன. ‘சின்னாட்டி’ கதையின் நாயகன், சின்னாட்டி ஒரு கீழ்ச்சாதிக்காரன், பறையடிப்பதில் வில்லாதி வில்லன். ஊரில் சாவு விழுந்தால் நடக்கும் சடங்குகள்

நிலவு குளிர்சியாக இல்லை -திறனாய்வு நோயல் நடேசன்

கனடா எழுத்தளர் மாரக்கிரட் அட்வூட்‘ மற்றவர்கள் கதைகளை நாம் படிப்பதன் மூலம் நாங்கள் நல்ல கதை சொல்லிகளாக மாறுகிறோம்’ என்றார். கதை சொல்வது காலம் காலமாக ஒவ்வொரு சமூகத்திலும் இருந்தது. அச்சு எழுத்துகள் வருவதற்கு முன்பு கதை சொல்லலே எமது ஊடகம். சிறுகதை ஒரு இலக்கியவடிவமாக வரும் போது அங்கு பாத்திரம், மொழி ,உணர்வு, மற்றும் நோக்கம் என பல விடயங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது சாதாரணமான குடிசையாக இருந்தது அழகியவீடாக வருவதற்கு ஒத்தது. நமது சமூகத்தில் சிறுகதை எழுத்தாளர் அதிகம் காரணம் சிறுகதைகளை உடனே படித்துவிடுவது வாசகர்களுக்கு மடடுமல்ல,அவற்றை பிரசுரிக்கும் மாத,வாரப்பத்திரிகைகளுக்கும் இலகுவானது. இந்த இலகு தன்மையையே இந்த வகையான இலக்கியத்தை உருவாக வழி வகுத்தது. மற்ற நாடுகளில் சிறுகதை இலக்கியம புகழ் பெற்றாலும் அமரிக்காவே தாய்நாடு என்கிறார்கள். தற்போது பல சஞ்சிகைகள் சிறுகதையை பிரசுரிப்பதில்லை. ஆனால் இன்னமும் உலகத்தின் சிறந்த சிறுகதைகள் மொழிபெயர்ப்பு செய்தும் நியோக்கர் சஞ்சிகையில் பிரசுரிக்கப்படும். சமீபத்தில் அமரிக்கா சென்றபோது ஒரு நியூக்கர் சஞ்சிகையை வாங்கிப் வாசித்தபோது அதில் இஸ்ரேலி

அவுஸ்திரேலியா - மெல்பனில் (05-12-2015) நான்கு நூல்களின் வாசிப்பு அனுபவப்பகிர்வு லெ .முருகபூபதி

கல்லிலிருந்து கணினி வரையில் அனைத்து மொழிகளும் பயணித்துக்கொண்டிருக்கின்றன. இனிவரும் யுகத்தில் மொழிகள் எதில் பதிவாகும் எனக்கூறமுடியாது. ஆனால் மொழிகள் வாழும். மறையும். வாசகர்களிடத்தில்தான் மொழியின் வாழ்க்கை தங்கியிருக்கிறது. அதனால்தான் வாசிப்பு மனிதனை முழுமையாக்கும் என்று எமது முன்னோர்கள் சொன்னார்கள். ஆனால், இந்த நூற்றாண்டில் மக்கள் வாசிப்பதற்காக தேர்ந்தெடுத்துள்ள சாதனங்கள் இலகுவாகிவிட்டது. அவற்றில் படிக்கலாம். பார்க்கலாம். ரசிக்கலாம். சிரிக்கலாம், கோபிக்கலாம். உடனுக்குடன் பதில்களையும் பதிவேற்றலாம். ஆயினும் அச்சில் வெளியாகும் படைப்புகளுக்கும் பத்திரிகை இதழ்களுக்கும் மதிப்பு இன்னமும் குறையவில்லை. இணையத்தளங்கள் , வலைப்பூக்கள் வந்தபின்னரும் அவற்றில் எழுதுபவர்கள், பின்னர் நூலுருவாக்குவதற்கு விரும்புவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. இன்றும் கணினி அறிவு அந்நியமாகியிருக்கும் வாசகர்களுக்கு, குறிப்பாக முதியவர்களுக்கும் மூத்ததலைமுறையினருக்கும் அச்சுப்பிரதிகள்தான் வாசிப்புத்தாகத்தை தணித்துவருகின்றன. தமிழ் சமூகத்தில் புத்தகசந்தைகள் - கண்காட்சிகள் நடப்பது போன்று ஆங்கிலேயர்கள் உட்பட வேறு இனத

குணா கவியழகனின் விடமேறிய கனவு - வாசிப்பு அனுபவம்

அண்மையில் பாரிஸில் வெளியிடப்பட்ட குணா கவியழகனின் "விடமேறிய கனவு" நாவல் வாசித்தேன் .நாவல் சொல்ல வந்த செய்தி , "இறுதி யுத்தத்தில் ஓர் போராளி சரணடைந்து அதன் தொடராக ஓமந்தை, செயின் ஜோசெப் படைத்தளம், மெனிக் பார்ம் முகாம்களில் நடைபெற்ற சித்திரவதைகளையும் ,அங்கிருந்த அவனைப் போன்ற சிறைக்கைதிகளின் வாழ்வு நிலை பற்றியும் நாவல் விபரிக்கின்றது. சிறுவயதில் தமிழகத்தைச் சேர்ந்த ரா.கி ரங்கராஜன் மொழி பெயர்த்த "பட்டாம் பூச்சி" (Papillon ) என்ற பிரெஞ் நாவல் இரண்டு முறை படித்திருக்கின்றேன். இது பிரெஞ் நாவலாசிரியரான ஹென்றி ஷாறியே (Henri Charrière) என்பவரால் 1969 ஆம் ஆண்டு எழுதப்பட்ட சுயசரிதை நாவலாகும். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலக்கியம், மானுடத்தின் கௌரவம் என்ற கருவை பட்டாம் பூச்சி அதிகம் பேசியது. மனிதனின் தாக்கு பிடிக்கும் ஆற்றலுக்கும், விடா முயற்சிக்கும், சுதந்திர தாகத்திற்கும் ஒரு மகோன்னதமான வாழும் எடுத்து காட்டாக இந்தக் கதையை அப்பொழுது வாசித்து உணர்ந்தேன். பின்னர் இந்த "பட்டாம்பூச்சி" நாவல், அமெரிக்காவை சேர்ந்த பிறாங்கிளின் ஜே .ஷஃபைனர் ( Franklin J. Schaf

சாத்திரியின் பார்வையில் கோமகனின் "தனிக்கதை"

கோமகனின் தனிக்கதை என்கிற சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பதினாறு சிறு கதைகளை உள்ளடக்கி 157 பக்கத்தில் மகிழ் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது.இப்போதெல்லாம் ஒரு புத்தகத்தை படிக்காமலேயே அதனை எழுதியவரை மட்டும் மனதில் வைத்து விமர்சனங்கள் எழுதித் தள்ளுகின்ற காலகட்டத்தில் நான் படித்துவிட்டு எனது பார்வையை வைக்கிறேன். இந்த சிறுகதைத்தொகுப்பானது பெரும்பாலானவை ஒருவன் தனது சொந்த மண்ணிலிருந்து சொந்த பந்தங்களையும் சொத்துக்களையும் விட்டு ஊரையும் விட்டு வேரோடு பிடுங்கி வேறொரு தேசத்தில் எறியப்பட்டு அவன் அங்கே மீண்டும் பதியமாகி அனைத்தையும் இழந்த அகதியாக பதிந்த வலியை தொட்டுச் செல்கிறது. வெளிநாட்டில் அதியுயர் வாசனை திரவியத்தை தடவினாலும் மண்ணின் வாசத்தை சுவாசிக்கத் துடிக்கும் நேசம் .அதுக்காகவே அவர் பெரும்பாலான கதைகளில் கோப்பி குடித்தும் சிகரெட்டை பற்றவைத்து அதன் புகையை ஆழ உள்ளே இழுத்து ஆகாயத்தை நோக்கி விட்டு தன்னை ஆறுதல்படுத்திக் கொண்டிருக்கிறார். சமுக ஆர்வலர்கள் யாராவது சூழல் மாசடைதல் ஓசோனில் ஓட்டை என்று வழக்கு போடாதவரை அவரால் தொடர்ந்து எழுத முடியும் . புலம்பெயர் வாழ்வின் சிக்கல்களை அதன் வேதனைகளை

கோமகனின் "தனிக்கதை " முன்னுரை -தாட்சாயணி

எழுத்து என்பது எப்படி சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது? எழுத்தை நேசிப்பவர்கள் வாசிப்பின் மூலம் தம் நேசத்தைக் காட்டுபவர்களாகவும், எழுதுவதன் மூலம் அதை வசப்படுத்துபவர்களாகவும் இருக்கின்ற வேளைகளில் எழுத்து சிலரை இளம் பருவத்தில் ஆகர்சித்துக் கொள்வதாகவும், சிலருடைய வாழ்வில் நடுப்பகுதியில் வந்தமர்வதாகவும், இன்னும் சிலருக்கு அவர்களின் ஓய்வுக்காலத்தில் அவர்களது உணர்வுகளுக்கு வடிகாலாவதாகவும் அமைந்து விடுகின்றது. சிறு சோம்பலுணர்வு, எழுத்துச்சூழலின் கிறுக்குத்தன்மை பல பேனாக்களுக்கு ஓய்வு கொடுத்ததுண்டு. எழுதாத பேனாக்கள் இன்னுமிருக்கின்றன.எழுதக்கூடாத பேனாக்கள் எழுதிக் கொண்டுமிருக்கின்றன. எவ்வகையிலோ எழுத்துக்கள் நகர்கின்றன. தக்கன நிலைக்கின்றன. அல்லன காலப்போக்கில் காணாமல் போகின்றன. இவ்வகையிலேயே கோமகனின் எழுத்துக்கள் அவரது நடுவயதில் அவரைத் தேடி வந்து சேர்ந்திருக்கின்றன. வாழ்க்கையில் போராடி ஈழத்தின் யுத்தச் சூழலுக்குள் அலைக்கழிந்து, புலம் பெயர் தேசமொன்றில் கரையேறிய அவரது உணர்ச்சிப் பெருக்குகள் சொற்சித்திரங்களாகியிருக்கின்றன. கோமகனை நான் முதலில் அறிந்து கொண்டது அவரது வலைப்பூக்கள் வழியாகத்தான். இயற்கை

கோமகனின் "தனிக்கதை " மதிப்பீடு

கோமகனின் தனிக்கதை சிறுகதைத்தொகுப்பில் பதினாறு சிறுகதைகள் அடங்குகின்றன. ஈழத்து வட்டார வழக்குடன் வழமையான ஈழத்து எழுத்தாளர்களின் கற்பனை நுட்பத்துடன் கோமகனின் தனிக்கதைகள் இடம் பிடித்துள்ளது. பெரும்பாலும் எழுத்தென்பது வாழ்வின் சிக்கலானபோக்கை, அதன் தடுமாற்றங்களை இயல்பான போக்குடன் வாசகனுக்கு கொண்டு செல்வதினை  அடிப்படையாக கொண்டிருக்கவேண்டும். வாசகனின் வழமையான எதிர்பார்ப்புக்களை தகர்த்து நுட்பமாக பயணிக்கவேண்டும். நல்ல கதையென்பது படித்துமுடித்த பிற்பாடு வாசகனை அக்கதை சிறிதுநேரம் யோசிக்கவைக்கும். அதன் பாதிப்புக்கள் வாசகனைவிட்டு நீங்காமல் சிலநேரம் தொந்தரவு கொடுக்கவேண்டும். கோமகனின் இத் தொகுப்பில் சிலசிறுகதைகள் அதற்கான தன்மையை கொண்டிருகின்றன. வழமையாக ஈழஎழுத்தாளர்கள் எழுதும் கதையின் களங்கள் ஒரேமாதிரியான தன்மையில் இருக்கும். இந்திய இராணுவத்தின் வருகைக்காலம், புலம்பெயர்வுக்காலம், புலம்பெயர்வின்பின் அவர்களின் வருகைக்காலம் என்ற சட்டத்தில் பொருத்தக்கூடிய வகையிலிருக்கும். கோமகனின் கதைகளும் ஏறக்குறைய அவ்வாறான ஒத்தியல்பு தன்மைகளுடன் பொருந்துகின்றன. சுயபுனைவியல்(Auto fiction) தன்மையுடன் சிலகதைகளும்

மழைக்காலக் குறிப்புகள்

பட உதவி : கருணாகரன் மழைக்காலம் என்பது ஓர் சமூகத்தின் வசந்தகாலம். இந்த மழைக்காலத்திலேயே ஓர் சமூகம் தமது இருத்தலுக்கு வேண்டிய அனைத்து வேலைகளையும் செய்யும். விவசாய நிலங்கள் மழையினால் மீண்டும் எழுச்சி பெறும். மாந்தர்களிடையே காதல், காமம், ஊடல், கூடல், இனப்பெருக்கம் என்று உச்சம் பெறும் காலமே மழைக்காலம். அதுவும் கோடை வெய்யில் காலத்தில் வெக்கை வாட்டி எடுக்க, திடீரென வானம் கருமையாகி சிறிய துளிகளாகத் தொடங்கி சோவென்று மழைத்துளிகள் நிலத்தை அணைக்கும் அடைமழையை யாருமே விரும்பாமல் இருக்க மாட்டார்கள். மழையின் ஆரம்பத்தில் மூக்கை அடைக்கும் புழுதிவாசமும், மழை விட்டதன் பின்னர் வரும் தவளைகளின் ஒலியும், ஈசல்களின் படையெடுப்பும், நுளம்புக்கு போடும் வேப்பங்கொட்டைப் புகையும், நிலத்திலே வெள்ளம் வடிந்து அந்த ஈரலிப்பான மண்ணில் நெளியும் சரக்கட்டைகளும், நாக்கிளிப் புழுக்களும், கம்பளிப் பூச்சிகழும், என்று கோடை காலத்தின் இறுதி பகுதிகளில் இந்த உணர்வுகள் அத்தனையையுமே கொண்டு வரும் மழைக்காலத்தை யாருமே விரும்பாதவர்கள் இருக்கமாட்டார்கள். இப்படிப்பட்ட ஓர் மழைக்கால வேளையொன்றில் வேலணையூர் தாஸ் எழுதிய "மழைக்காலக் குறிப

பதினொரு பேய்கள் கடந்து வந்த பாதை

ஈழத்தின் முடிசூடா மன்னன் பேராசிரியர் கைலாசபதியினால் இலக்கிய உலகுக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம் அ.முத்துலிங்கம் ஐயா என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து எதுவும் இல்லை .பல சிறுகதை தொகுதிகளையையும், கட்டுரைதொகுப்புகளையும் வாசகருக்கு வழங்கிய  முத்துலிங்கம் ஐயாவின் எழுத்துக்களில் மயங்கியவர்களில் அடியேனும் ஒருவன். அண்மையில் அ.முத்துலிங்கம் ஐயாவின் "பதினொரு பேய்கள்" சிறுகதை வாசிக்கக் கிடைத்தது. அந்தக்கதையில் இருந்து நான் என்ன கிரகித்துக்கொண்டேன் என்பதனை பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகின்றேன். அ.முத்துலிங்கம் ஐயா ஈழத்துக்கதை சொல்லிகளில் ஓர் உன்னதமான இடத்தை தக்கவைத்துக்கொண்டவர்.அதே வேளையில் அவரின் எழுத்துக்கள் ஓர் தவறான புரிதலை வாசகர்களுக்கு ஏற்படுத்துமாயின், அதை சுட்டிக்காட்டுவதும் எனது கடமையாகின்றது. ஓர் படைப்பானது பொது வெளியில் வரமுன்பு அதன் எழுத்தும், படைப்பும் ஆக்கியவருக்கே சொந்தமாகின்றது. அனால் அந்தப் படைப்பு பொதுவெளியில் வந்த பின்னர் அது வாசகர்களின் சொந்தமாகின்றது. அப்பொழுது எழுகின்ற சர்ச்சைகள் ஓர் எல்லைக்கு மேல் போகும் பொழுது, படைப்பாளி அதுசார்ந்த தன்னிலை விளக்கம் வாசகர்களுக்க

என் பார்வையில் ஃ -ஆயுத எழுத்து - வாசிப்பு அனுபவம்

"உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை.அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம்"? என்று ஓர் கேள்வியை நான் எழுதிய " சின்னாட்டி " என்ற சிறுகதையில் எழுப்பியிருந்தேன். நாங்கள் எப்பொழுதுமே உண்மையைவிடக்  கற்பனையில்  மிகுந்த ஆர்வம் காட்டிக்கொண்டிருக்கின்றோம் . உண்மையைவிடப் பொய்தான்  மிகவும்  உண்மையாகத் எங்களுக்குத் தெரிகிறது. கற்பனைகள் என்றுமே  பலவகைகளில்  எங்களுக்கு திருப்தியைக் கொடுக்கின்றன .எங்களுடைய கற்பனைகள்  எங்கள் அகங்காரத்திற்கு  திருப்தியை  அளித்துக் கொண்டிருகின்றது. இன்றைய இலக்கிய  வெளியில் பெரும்பாலானவர்கள் உண்மைகளை பேசாது விடுகின்றனர். உண்மை பேசுவோர் பேசுவது உண்மை என்று தெரிந்திரிந்தும், இந்தப் பெரும்பாலானவர்கள் வெறும் கற்பனை வடிவங்களுக்கே   முண்டு கொடுக்கின்றனர் . இவர்கள் உண்மைகளைப் பேசுவோரை கள்ளத்தனமாக ரசித்து அவர்களை  ஓர் செப்படிவித்தைக்காரர்கள் போல் பார்க்கின்றார்கள். ஆனால் உண்மை பேசுவோரை ஓர் பேசுபொருளாக இவர்கள் அங்கீகாரம் கொடுக்கத்தயாரில்லை. இந்த உண்மைகள் பேசுவோரை பெரும்பாலானவர்கள் இழிசனங்களாக, தீட்டுப்பட்டோராக கருத