அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறம்கூறான் என்றல் இனிது. 181 அறநெறிகளைப் போற்றாதவனாகவும், அறச்செயல்களை செய்யாதவனாகவும் இருந்தாலும்புறம் கூறாதவன் என்று வாழ்வது நல்லது. எனது கருத்து: நீங்கள் ஒருத்ரிலை உண்மையான அன்பு வைச்சிருக்கிறியள் எண்டால், அவருக்கு ஒரு கஸ்ரம் எண்டால் உங்களை அறியாமல் கண்ணில தண்ணி வரவேணும். அவைதான் உண்மையான மனுசர். Though virtuous words his lips speak not, and all his deeds are ill. If neighbour he defame not, there's good within him still. Il est doux à celui qui ne pratique pas la vertu et qui commet même des péchés; de s’entendre dire: “ce n’est pas un calomniateur ” அறன்அழீஇ அல்லவை செய்தலின் தீதே புறன்அழீஇப் பொய்த்து நகை. 182 ஒருவனைக்க காணாத இடத்தில் இகழ்ந்து பேசிக், கண்ட இடத்து அன்புடையோர் போலப் பொய்யாக நடித்துச் சிரித்துப் பழகுதல் அறத்தை அழித்துப் பாவச் செயல்களைச் செய்தலினும் தீமையானது. எனது கருத்து: இதை இப்பிடியும் சொல்லலாம் " கண்டால் கட்டாடி காணாட்டில் வண்ணான்". ஆனால் இப்பிடிப்பட்ட கோஸ்ரியள் தான் இப்ப ...
எனது தளத்தில் வெளியாகும் ஆக்கங்களை எங்கும் பகிர்ந்து கொள்ளலாம்