Skip to main content

Posts

Showing posts with the label நடுதல்-குறுநாவல்.

வாடாமல்லிகை - பாகம் 05

நாங்கள் பதிவு செய்திருந்த மகிழூந்து  எங்கள் அருகில் வந்து நின்றது. வண்டி சாரதி பவ்வியமாக இறங்கி வந்து எமது பயணப் பொதிகளை வாங்கி கார் டிக்கிக்குள் வைத்தான். அவன் சிங்களவனாக இருக்க வேண்டும் என்று அனுமானித்துக்கொண்டென். மகிழூந்தில்  குறைந்த கட்டணம் ஐம்பது ரூபாவில் இருந்து தொடங்கியது. மகிழூந்து எங்களை ஏற்றிக்கொண்டு பம்பலப்பிட்டி பிளட்ஸ் நோக்கி வழுக்கியது .  மகிழூந்து ஓடத்தொடங்கிய சிறிது நேரத்திலேயே வழக்கமான பாதையில் செல்லாது அதிவிரைவு பாதையில் செல்லத் தொடங்கியது . அந்த பாதை மகிந்த சிந்தனையில் உதித்து சீனத்தின் உதவியுடன் சமீபத்தில் திறக்கப்பட்ட அதி வேகப்பாதை என்று ரக்சி சாரதியுடன் கதைத்த பொழுது அறியக்கூடியதாக இருந்தது. ஏறத்தாழ இருபது நிமிடங்களை விழுங்கி விட்டு அந்த  மகிழூந்து கொழும்பு நகரினுள் நுழைந்தது. அதிகாலையில் கொழும்பு அரை அவியல் முட்டை நிலையில் இருந்தது. ஆங்காங்கே மக்கள் தங்கள் நாளை தொடங்குவதற்கு ஆயத்தமாக பஸ் நிலையங்களில் காத்திருந்தனர். வீதிகளில் சோதனை சாவடிகளோ வீதி தடைகளோ காணப்படவில்லை. எந்த இடத்திலும் விளம்பரத் தட்டிகளில் நாட்டைக் காத்த மகிந்த ஒரு மந்தகாசப் புன்னைகையுடன் காண

வாடாமல்லிகை - பாகம் - 04

தரையை விட்டு சாய்வு கோணத்தில் மேலே எழும்பிய அந்த இயந்திரப்பறவை சிறிது நிமிடங்களை விழுங்கி விட்டு நேர்கோட்டில் தன்னை நிலை நிறுத்தி விரைவு படுத்தியது. வெளியே எங்கும் அந்தகாரக் கரும் இருள் அப்பியிருந்தது. அங்காங்கே நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருந்தன. அவைகளை விட வேறு எதையும் வெளியில் என்னால் பார்க்க முடியவில்லை. இப்பொழுது அந்த விமானத்தில் முக்கால் வாசிபேர் இலங்கையரே நிரம்பியிருந்தனர். அவர்கள் எல்லோருமே சவுதி அரேபியாவை வளப்படுத்த வந்த கடைநிலை ஊழியர்கள். அரேபிய ஷேக்குளின் ஷோக்குகளுக்காக வீடுகளையும் தொழில் நிலையங்களையும் பராமரிக்கவென்று குறைந்த தினார்களில் கூலிக்கு அமர்த்தப்பட்டவர்கள். அவர்களை நான் அவதானித்த அளவில் அவர்களுக்கு எழுத வாசிக்க தெரிந்திருக்கவில்லை. விமானத்தில் வழங்கப்பட்ட குடிவரவு விண்ணப்பங்களை நிரப்புவதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு சிலர் எல்லோருக்கும் விண்ணப்பப் படிவங்களை நிரப்பிக் கொடுத்து கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் சந்தைக்கடை போல இருந்த அந்த விமானத்தை, அமைதி தன் பிடியினுள் படிப்படியாகத் தன்வசம் கொண்டு வந்தது. மரங்கள் கூதல் காலத்தில் தங்கள் இலைகளை உதிர்த்த

வாடாமல்லிகை - பாகம் 03

தரை தட்டிய விமானத்தில் உள்ள அரேபியர்களில் முக்கால் வாசியினர் ஐரோப்பிய நவநாகரீக உடைகளில் இருந்து விடுதலை அடைந்து, ஓர் வெள்ளை நிற நாலுமுழ வேட்டி போன்று உயர்த்திகட்டியும், வெறும் உடலின் மேல் வெள்ளை நிறத்திலான ஓர் போர்வையுடனும் வெறும் கால்களுடனும் நின்றிருந்தார்கள். இந்தக் காட்சியானது பட்டிக்கு வழிமாறி வந்த ஆட்டுக்குட்டியின் நிலையையே எனக்கு ஏற்படுத்தியது. மேற்கு நாடுகளுக்கு உல்லாசம் அனுபவிக்க வரும் இவர்கள் தங்கள் மண்ணை மிதிக்கும் பொழுது மட்டும் சட்டங்களினால் கட்டாயப்படுதப்பட்ட வாழ்வுநிலையை ஏற்றது எனது மனதை நெருடவே செய்தது. எல்லோரும் இறங்குவதற்கு முண்டியடித்தனர். ஆனாலும் அத்தனை சுலபமாக அவர்களால் இறங்க முடியவில்லை. அதற்கான காரணத்தை நாங்கள் வெளியே போகும் பொழுது தான் அறிந்து கொண்டோம். விமானம் , விமானநிலயத்துடன் இணைக்காது தொலை தூரத்தில் நின்றது. அதில் படிக்கட்டுகள் இணைக்கப்பட்டிருந்தன. அதன் வழியே உடல் பெருத்த அரேபியர்கள் இறங்குவதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். விமான நிலையத்துக்கு குளிரூட்டிய பேரூந்துகள் பயணிகளை கொண்டு சென்று கொண்டிருந்தன. எல்லோருமே குழந்தயை கிணத்துக்கட்டில் விட்டு விட

வாடாமல்லிகை - பாகம் 02

நாங்கள் பயண வேலைகளை செய்துகொண்டிருந்த பொழுது ஒருநாள் மாலை கனடாவில் இருந்து மனைவியின் அண்ணை எங்களுடன் தொடர்பு கொண்டார். அவர் எங்களை சந்தோசப்படுத்துகின்றேன் பேர்வழி என்று கனேடிய தபால் சேவை மூலம் ஒரு ஐ பாட் தங்கைக்கு அனுப்பிருந்தார். தான் அனுப்பி ஒருமாதத்துக்கு மேல் என்றும் அவர் எம்மை எடுக்கசொன்ன செய்தியானது எமது பயணம் நெருங்கிய வேளையில் எனது வயிற்றில் புளியை கரைத்துக் கொண்டிருந்தது. ஏனெனில் அது கனடாவுக்கும் பிரான்சுக்கும் இடையில் தொங்குபறி நிலையில் நின்று கொண்டிருந்தது. இதனால் எனக்குப் பதட்டம் கூடியதே ஒழிய குறையவில்லை. ஆனாலும் எனது​ பதட்டங்களை வெளிக்காட்டாது எனது வேலைகளில்  மூழ்கினேன். நான் வேலை செய்கின்ற உல்லாசவிடுதி மீள்கட்டுமானப்பணி முடிவடைந்த நிலையில் அண்மையிலேயே மீண்டும் வாடிக்கையாளர்களுக்காக திறக்கப்பட்டது. நான் வகிக்கின்ற பதவி காரணமாக விடுமுறையில் செல்வதற்கு முன்பே நான் பல ஆயுத்தங்களை எனது உதவியாளர்களுக்கு செய்யவேண்டியிருந்தது. அது தந்த உடல் களைப்பு எனக்கு மேலும் எப்பொழுது எனது பயண நாள் வரும் என்ற மன ஓட்டத்தினை அதிகரித்தவண்ணமே இருந்தது. ஒருவழியாக மாசி மாத இறுதிப்பகுதி எம்மை

வாடாமல்லிகை - பாகம் 01

கார்த்திகை திங்கள் 2013 ஒரு நாள் மதிய வேளையில் அலுத்துக் களைத்து வீடு திரும்பும் பொழுது எனது மனம் வழமைக்கு மாறாக ஊரைச் சுற்றியே ஊசலாடிக் கொண்டிருந்தது. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. கடந்த மூன்று வருடங்களாக அரிதார முகங்களையும், அவற்றால் வரும் ஓட்டில்லாத சிரிப்புகளையும் பார்த்துச் சலித்த எனக்கு ஒரு மாற்றம் வேண்டும் என்ற ஓர் எண்ணம் சடுதியாக என் மனதில் சடுகுடு விளையாடியதில் வியப்பு ஏதும் இல்லை. மனதில் எழுந்த எண்ணத்தை செயலாக்கும் முடிவில் வீடு வந்த நான், என் எண்ணத்தை பள்ளியறையில் மஞ்சத்தில் ஆற அமர இருக்கும்பொழுது எனது மனைவியிடம் பகிர்ந்தேன். அவளும் எனது மன ஓட்டத்தில் இருந்தாளோ என்னவோ எனது எண்ணத்துக்கு பச்சைக்கொடி காட்டினாள். இருவரும் ஒன்றிணைந்து வருடாந்த விடுமுறையை நாம் வேலைசெய்யும் இடத்தில் கொடுக்கும் முடிவிற்கு வந்த பொழுது உடல் அலுப்பினால் தூக்கம் தானாகவே எம்மை அரவணைத்துக்கொண்டது. நான் எமக்கான விடுமுறையை கொடுத்து விட்டு விமானப்பயணத்துக்கு வேண்டிய பதிவுகளை செய்ய கணணியை நோண்ட ஆரம்பித்தேன். எனது வீக்கத்துக்கு எயார் சவுதியா என்முன்னே என்னை எடு என்று அடம் பிடித்தது. ஆனால் நான் அதி

நெருடிய நெருஞ்சி-25

பஸ் மட்டுநிறுத்தியதும் எனக்கும் முகத்தில் கலவரரேகைகள் என் முகத்தில் எட்டிப்பார்க்கக் கொடுக்குக் கட்டின . நான் அணிந்திருந்த கருங்கண்ணாடி அவைகளை ஓரளவு மறைத்துக் கொண்டிருந்தது . பஸ்சினுள் ஏறிய படைவீரன் , எல்லோரையும் இறங்கி சோதனைச்சாவடிக்குப் போகச்சொல்ல முதலே , நானும் மனைவியும் எமது முக்கிய கோப்புகளை எடுத்துக்கொண்டு பஸ் நடத்துனருடன் சோதனைச் சாவடியை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.அங்கே அடையாளத்தைத் தொலைத்தவர்களிடம் அடையாளம் பார்பதற்காக பச்சை உடைகள் இருந்தார்கள் . மக்கள் வரிசைகட்டி நின்றார்கள் . ஒருவேளை இவர்களுக்கு வரிசைகட்டி நின்று பழகிவிட்டதோ . மக்கள் வரிசை சிற்ரெறும்பாக ஊர்ந்தது . எனக்கு வெய்யில் வெக்கையும் , மனவெக்கையும் , சேர்ந்து உடல் கொதித்தது . எங்களை ஏற்றி வந்த பஸ் சோதனைச் சாவடியின் மறுபக்கம் போய் , வவுனியா போகும் பக்கம் தனது முகத்தைத் திருப்பியவாறு நின்றது . எங்கள் முறை வந்ததும் என் மனைவி தனது எம்ஓடி பாஸ் ஐக் காட்டிவிட்டு பாதுகாப்பு சோதனைக்குப் போய்விட்டா . நான் எனது கடவுச்சீட்டையும் , எம்ஓடி பாஸ் ஐயும் கொடுத்தேன் . அந்த அதிகாரி எனது கடவுச்சீட்டை நோண்டுவதிலேயே குறியாக இருந்த

நெருடிய நெருஞ்சி-24

கடற்கரையின் கூதல் காற்று அந்த பஸ்ராண்டை நிரவியிருந்தது . சுற்றியிருந்த தேநீர்கடைகளில் இருந்து சுட்ட வடையின் வாசமும் , சீர்காழியின் பக்திப் பாடலுமாகக் கலந்து வந்தன . பஸ் வெளிக்கிடுவதற்கு நேரமிருந்ததால் நானும் மச்சானும் தேநீர்கடைக்குள் உள்ளட்டோம் . எங்களைக் கண்டதும் கடைப் பெடியன் எமது வழமையான இஞ்சித் தேத்தண்ணியையும் , கடலை வடையையும் கொண்டு வைத்தான் . வடையில் சூடு ஆறாது மொறுமொறுப்பாக இருந்தது . எதிரே இருந்த மீன் சந்தைக்கு மீன்கள் முனையிலிருந்து வரத்தொடங்கியிருந்தன . அவற்றைக் கும்பி கும்பியாகக் குவித்து வைத்திருந்தனர் . சிறிது சிறிதாக அந்த இடம் அமைதியை இழந்தது . நாங்கள் இருவரும் தேத்தண்ணியைக் குடித்து விட்டு ஆளுக்கொரு சிகரட்டைப் பற்ற வைத்துக் கொண்டு பஸ்சை நோக்கி நடையைக் கட்டினோம் . தூரத்தே மாமா மனைவியுடன் கதைத்துக் கொண்டிருந்தார் . நாங்கள் பஸ்சை அண்மித்தபொழுது ஓரளவு பஸ்சினுள் கூட்டம் சேர்ந்திருந்தது . நான் மாமவிடம் சொல்லி விட்டு பஸ்சினுள் ஏறி அமர்ந்து கொண்டேன் .பஸ் சாரதி தனது இருக்கையில் ஏறி இருந்து கொண்டு இறுதியாக கோர்ணை அடித்து பஸ்சைக் கிளப்பினார் . மாமாவும் மச்சானும் எங்களை வ