மன்னர் மகிந்தரும் வல்லவரையர் வந்தியத்தேவரும் தனித்தமர்ந்து பேசிக்கொண்டிருந்த வேளையில் மாமன்னர் அங்கு வருவதாக வாயிற்காவலன் அவர்களிடம் வந்து செய்தி கூறினான். இதைக் கேள்வியுற்றவுடன் மகிந்தரின் முகம் வெளுத்தது. அதற்குள் ராஜேந்திரரே அங்கு வந்து சேர்ந்துவிட்டார். மாமன்னருக்கு முகமன் கூறி மகிந்தர் அவரை வாய்ச் சொல்லால் வரவேற்றாரே தவிர, அவரது மனம் வரவேற்புக்குச் சித்தமாக இல்லை என்பதை அவர் முகம் காட்டியது. புன்னகை பூத்துக்கொண்டே சக்கரவர்த்தி மகிந்தரின் முகத்தில் தம் விழிகளைப் பாய்ச்சினார். அந்தப் பார்வையைத் தாங்க முடியாமல் மகிந்தர் தவித்த தவிப்பு மாமன்னரை வியப்புறச் செய்தது. காவலனைக் கண்டுவிட்ட கள்வனைப்போல் மாமன்னரைக் கண்டு மகிந்தர் ஏன் மிரள்கிறார்? ‘நெஞ்சில் உரமற்ற கோழை! நேர் பார்வைகூடப் பார்க்காமல் ஏன் தவிக்கவேண்டும்?’ என்று நினைத்துக்கொண்டு வல்லவரையர் பக்கம் திரும்பினார் சக்கரவர்த்தி. உணர்ச்சியை உள்ளடக்கிய செப்புச்சிலையாகக் காணப்பட்டார் வந்தியத்தேவர். “மகிந்தர் அவர்களே! சோழ சாம்ராஜ்யத்தின் சாமந்த நாயகர் தங்களிடம் யாவற்றையும் தெளிவாக விளக்கியிருப்பாரென்று நம்புகிறேன்’’ என்று வெண்கலக்குரலில்
எனது தளத்தில் வெளியாகும் ஆக்கங்களை எங்கும் பகிர்ந்து கொள்ளலாம்