Skip to main content

Posts

பல விடயங்களைத் துறக்கும் துணிவற்றவர்களால் முழுமையான படைப்பாளிகளாக மாறுவது சாத்தியமில்லை- வாசுதேவன்

வாசுதேவனை ஏன் தெரியக்கூடாது ? வாசுதேவன் இலக்கியவாதியாக இதுவரையும் அறியப்படவில்லை என்ற அர்த்தத்தில் இந்தக் கேள்வி எழுந்துள்ளதாகவே கருதுகின்றேன். இது ஒரு வகையில் சரியான கேள்வியே. தமிழ் இலக்கிய உலகு விசித்திரமானது. அது தனக்கென எழுதாத சில விதிகளைக் கொண்டுள்ளது. இலக்கியராக ஒருவர் வெளிப்பட வேண்டுமானால் அவரை “மேடையேற்றுவதற்குச்” சில நபரேனும் தேவைப்படுகிறார்கள். ஆனால் அந்தச் சில நபர்கள் உங்களிடம் சில சமரசக் கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். இங்கே “சமரசம்” என்ற சொல்லு முக்கியமானது. அவர்கள் தங்களைப் போன்று நீங்களும் ரசிக்கவேண்டும் என்று நிபந்தனையிடுகிறார்கள். அவர்களின் இலக்கிய அரசியலுக்கு நீங்கள் “கட்டுப்படவேண்டும்”, துணைபோகவேண்டும். நீங்கள் உங்களுக்கான ஒரு சிந்தனைத் தனித்துவத்தைப் பேணுவதை அவர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். கூட்டாகவன்றி, தனித்துவமாக இருக்கும் யாரையும் சமகாலத் தமிழ் இலக்கிய உலகம் சகித்துக்கொள்வதில்லை. அவ்வாறனவர்களை ஓரங்கட்டுவதிலும், இருட்டடிப்புச் செய்வதிலும் அது மிகுந்த கரிசனை கொள்கிறது. குறிப்பாகத் தமிழ் இலக்கிய உலகில் இது ஒரு நோயாகவே மாறிவிட்டிருக்கிறது. தமிழ் இலக்கிய உலகில் தன

பொருட்பால்-அரசியல்-வலி அறிதல்-The Knowledge of Power-Discernement de la force-471-480

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்  துணைவலியும் தூக்கிச் செயல். 471 செயலின் வலிமையையும் , தன் வலிமையையும் , பகைவனின் வலிமையையும் , துணை செய்பவர்களின் வலிமையையும் நன்கு ஆராய்ந்து அச்செயலைச் செய்யவேண்டும் . என்கருத்து: "எதுக்கும் நாலுவளத்தாலையும் யோசிச்சு செய்யுங்கோடாப்பா எண்டு இந்த பெரிசுகள் எப்பவும் சொல்லுவினம் ". அது இப்பத்தான் எனக்கு விழங்குது. The force the strife demands, the force he owns, the force of foes, The force of friends; these should he weigh ere to the war he goes.  Considérer d'abord les difficultés de l'entreprise, peser ses propres forces, celles de, l'ennemi et celles des alliés ; agir ensuite. ஒல்வது அறிவது அறிந்துஅதன் கண்தங்கிச்  செல்வார்க்குச் செல்லாதது இல். 472 தன் சக்தியால் என்ன செய்யமுடியும் என்பதையும் எப்படிச் செய்யவேண்டும் என்பதையும் அறிந்து செயல்பாட்டில் தளராமல் இருந்து முயல்கிறவர்களுக்கு முடியாத பொருள் எதுவும் இல்லை. என்கருத்து: எண்ணிய காரியம் சிதறாது எண்டு சொல்லுவினம். ஆனால் ஒருத்தன் என்னதான் ஆள்ளணியள் துணையோடை பக்காவாய் ஒரு பிளா

பொருட்பால்-அரசியல்-தெரிந்துசெயல்வகை-Acting after due Consideration-Manière d'agir en connaissance de cause. 460- 470

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்  ஊதியமும் சூழ்ந்து செயல். 461 ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன், அச்செயலைச் செய்வதால் நன்மை, தீமைகளையும் செய்து முடித்தபின் வரும் பயன்களையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.  எனது கருத்து: சிலபேரை பாத்தியள் எண்டால் எடுத்தன் கவுட்டன் எண்டு வேலையளை செய்யிறது. பேந்து அதிலை பிரச்சனையள் வரேக்கை கிடந்து முழிக்கிறது. முதலே பிளான் பண்ணி செய்தால் எடுத்த காரியம் வெற்றிதான். எப்பிடி அமெரிக்கா ஒரு அனியாயமான விசையத்திக்கு மற்றவையை தன்ரை பக்கம் கொண்டுவந்து ஈராக்கை அடிச்சுதோ , அப்பிடி செய்யவேணும் பாருங்கோ. Expenditure, return, and profit of the deed In time to come; weigh these- than to the act proceed. Peser d'abord les conséquences désastreuses d'une entreprise, puis les avantages, enfin le profit qui peut résulter de ceux-ci et agir. தெரிந்த இனத்தொடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு  அரும்பொருள் யாதுஒன்றும் இல். 462  ஒருசெயலைச் செய்வதற்கு முன் அறிவுடையவரோடு கலந்து ஆராய்ந்து செய்யின் அவர்க்குப் பெறுவதற்கரிய பொருள் யாதொன்றும் இல்லை.  எனது கருத்து: ஐயா எல்லாம் பக்காவாய் ப

பொருட்பால்-அரசியல்-சிற்றினம் சேராமை-Avoiding mean Associations-La non-fréquentation des gens Vils-Fréquentation des gens-45-460

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்  சுற்றமாச் சூழ்ந்து விடும் 451 பெரியோர் சிற்றினத்தைக் கண்டு அஞ்சி ஒதுங்குவர்: சிறியோர் அதையே சுற்றமாகக் கருதித் தம்முடன் சேர்த்துக் கொள்வர் . எனது கருத்து : இந்தக் குறளைப் பாக்க எனக்கு சிரிப்பாய் வருகுது . எப்பிடியெண்டால் படிச்சவன் பண்பானவன் செத்தாலும் குள்ளப் புத்தி உள்ள ஆக்களோடை சேரமாட்டான் அவையை எட்டத்திலைதான் வச்சிருப்பான் . ஆனால் இவை என்ன செய்வினம் அவன்தான் ராசா எண்ட கணக்காய் அவனுக்கு சாமரம் வீசிக்கொண்டிருப்பினம் .  The great of soul will mean association fear The mean of soul regard mean men as kinsmen dear.  La Grandeur redoute la Vileté. La Bassesse s'apparente à la Vileté. நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு  இனத்தியல்ப தாகும் அறிவு. 452  நீர் , தான் நிலத்தின் இயல்புக்கு ஏற்பத் தன் இயல்பு திரிந்து அந்நிலத்தின் தன்மையுடையதாகும் . அதுபோல மக்களுக்கு அறிவு ,அவர்கள் சேர்ந்த இனத்தின் இயல்புக்கு ஏற்ப அமையும்  எனது கருத்து : இடம் அறிந்து சேர் எண்ட ஒரு சொலவடை இருக்கு. ஒரு தண்ணி நிலத்திலை சேரேக்கை தன்ரை குணத்தை நிலத்துக்கு ஏத்தமாதிரி ம

பொருட்பால்-அரசியல்-பெரியாரைத்துணைக்கோடல்-Seeking the Aid of Great Men-Soutien des Grands-441-450

அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை  திறன்அறிந்து தேர்ந்து கொளல். 441 அறத்தின் தன்மைகளை ஆராய்ந்து தன்னைவிட மூத்த ( சிறந்த ) அறிவுடையவர்களின் நட்பைக் கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ளவேண்டும் . எனது கருத்து : அப்பிடி போடுங்கோ ஐயன் .  As friends the men who virtue know, and riper wisdom share, Their worth weighed well, the king should choose with care.  Que (le Roi) recherche l'amitié des hommes intelligents plus âgés que lui et qui connaissent le prix de la vertu, en connaissance de la valeur de cette amitié et des moyens de l'obtennir. உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்  பெற்றியார்ப் பேணிக் கொளல். 442  வந்த துன்பத்தை நீக்கி , இனித் தன்பம் வராதபடி காக்கவல்ல தகுதியுடைய பெரியோர்களைத் துணையாக்கிக் கொள்ள வேண்டும் .  எனது கருத்து :  ஓ..... அப்ப இதைத்தான் டிப்பளொமெசி எண்டு சொல்லுறதோ ஐயன்?  Cherish the all-accomplished men as friends, Whose skill the present ill removes, from coming ill defends.  Qu'il accorde toute satisfaction, à ceux qui sont capables de guérir les maux pré

பொருட்பால்-அரசியல்-குற்றம் கடிதல்-The Correction of Faults-De la repression des défauts-431 -440

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்  பெருக்கம் பெருமித நீர்த்து. 431  ஆணவமும் ( மதமும் ) , வெகுளியும் , அற்பத்தன்மையும் ஆகிய குற்றங்கள் இல்லாத அரசரது செல்வம் மேம்பாட்டுத் தன்மையை உடையது . எனது கருத்து: ஒருத்தர் எப்பிடியும் செல்வாக்காய் இருக்கலாம். ஆனால் அவருக்கு மண்டைக்கனம் , தொட்டதுக்கெல்லாம் சுடுதண்ணி ஊத்தின நாய் மாதிரி கோபப்படுகிறது , பொம்பிளை விசயங்களிலை அப்பிடி இப்பிடி இருக்கிறது , இவ்வளவும் இருந்தால் அவற்றை செல்வாக்கு செல்லாக்காசாய் போடும் பாருங்கோ. Who arrogance, and wrath, and littleness of low desire restrain,  To sure increase of lofty dignity attain.  la prospérité (du Roi) qui n'a pas d'arrogance, de colère et de luxure, va en florissant. இவறலும் மாண்புஇறந்த மானமும் மாணா  உவகையும் ஏதம் இறைக்கு. 432 ஈயாத லோபமும் , மாட்சியில்லாத மானவுணர்வும் , தகுதியில்லாத மகிழ்ச்சியும் அரசனுக்குக் குற்றமாகும் .  எனது கருத்து:  நீங்கள் சிலபேரை பாத்தியள் எண்டால் , தனக்கு சகுனப்பிழையெண்டாலும் எதிரிக்கு மூக்குடைஞ்சால் சரி எண்டு இருப்பினம் . அதோடை தன்ரைவயசிலையும் அனுபவத்திலையும் மற்றவன்

பொருட்பால் - அரசியல் - அறிவுடைமை-The Possession of Knowledge -De l'entendement- 421 -430

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்  உள்ளழிக்க லாகா அரண். 421 அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும் , மற்றும் பகைவரால் அழிக்கமுடியாத உள் அரணும் ( கோட்டை ) ஆகும். எனது கருத்து : இதிலை வாழ்க்கைப் படிப்பும் ஏட்டுப்படிப்பும் ஒருத்தனுக்கு சேந்து இருந்தால் தான் , தன்னை சுத்தி இருக்கிற நல்லது கெட்டதுகளை அறியேலும் . தனிய ஏட்டுப் படிப்பு இருந்தால் அவன் படிச்ச கோமாளி. அவனுக்கு வலு சிம்பிளாய் ஆப்பு அடிக்கலாம். True wisdom wards off woes, A circling fortress high; Its inner strength man's eager foes Unshaken will defy.  L'entendement est l'arme qui protège contre la ruine, la forteresse que les ennemis ne peuvent prendre d'assaut. சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ  நன்றின்பால் உய்ப்ப தறிவு. 422  மனத்தை அதுபோன போக்கில் போகவிடாமல் தடுத்து , தீமைகளிலிருந்து விலக்கி , நன்மையில் செல்ல விடுவதே அறிவாகும் .  எனது கருத்து :  இதை எங்கடை பெரிசுகள் "மதி இழந்தாலும் மந்தி கொப்பிழக்காது" எண்டு சொல்லுவினம். ஆனால் பெரிய ஹைரெக் குற்றவாளியளை பாத்தமெண்டால் நல்லாய் படிச்சிருப்பங்கள்