Skip to main content

Posts

அறத்துப்பால்- இல்லறவியல் நடுவு நிலைமை- Impartiality-La droiture-111-120

தகுதி எனஒன்று நன்றே பகுதியால் பால்பட்டு ஒழுகப் பெறின். 111 அறவழி நின்று பகை , நட்பு , நொதுமல் ( அயலவர் ) ஆகிய மூவிடத்திலும் வேறுபாடு இன்றி நடத்தலே நடுவுநிலைமையின் பயனாகும். எனது கருத்து : இப்ப உள்ள நிலைமையில நடுநிலைமை என்றாலே பெரிய சர்ச்சைகுரிய விசையம். இந்த நடுநிலைமை மட்டும் எங்கடை இருண்ட வாழ்கையில வெளிச்சம் தரப்போகுதா என்ன ? If justice, failing not, its quality maintain, Giving to each his due, -'tis man's one highest gain. La vertu appelée droiture est la seule bonne Elle s’acquiert par l’accomplissement des devoirs, sans considération d’ennemis, d’étrangers ou d’amis.  செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவு இன்றி எச்சத்திற் ஏமாப்பு உடைத்து. 112 நடுநிலையிலிருந்து தேடி வைத்த செல்வம் இடையில் அழிந்து போகாமல் அவன் வழியினர்க்கும் உறுதியாக நன்மை தரும். எனது கருத்து : நேரிய வழியில உழைச்சு வாற செல்வம் தான் நிண்டு நிலைச்சு அவற்ரை அடுத்த பரம்பரைக்கும் பயன்படும் எண்டு ஐய்யன் சொல்லுறார் . The just man's wealth unwasting shall endure, And to

அறத்துப்பால்- இல்லறவியல்- செய்நன்றி அறிதல்-The Knowledge of Benefits Conferred: Gratitude- Reconnaissance des bienfaits-101-110

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது 101 தனக்கு ஓர் உதவியும் செய்யாதிருக்கும் போது ஒருவன் பிறருக்குச் செய்த உதவிக்கு இம்மண்ணுலகமும் விண்ணுலகமும் ஒப்பாதல் இயலாது . எனது கருத்து : முன்பின் தெரியாத ஒரு ஆள் எங்களுக்கு சின்ன உதவி செய்தாலும் , அந்த இடத்தில் அது எங்களுக்கு பெரிசாய் தெரியும் . அதின்ரை பெறுமதிக்கு இந்த மண்ணையும் விண்ணையும் கூட ஒப்பிட ஏலாது எண்டு ஐயன் இந்த முதல் குறளிலேயே தெளிவாச் சொல்லுறார் . Assistance given by those who ne'er received our aid, Is debt by gift of heaven and earth but poorly paid. Le Ciel et la terre ne peuvent être la juste récompense du bienfait (provenant) de celui qui n’en a pas reçu. காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. 102 தக்க காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறியதாக இருந்தாலும் , அதன் தன்மையை ஆராய்ந்தால் உலகத்தை விட மிகப் பெரியதாகும். எனது கருத்து: எங்கேயோ பிறந்து வளர்ந்து இலட்சியத்தாலை ஒன்றிணைஞ்சு தேவைப்பட்ட காலத்தில எங்களை பாதுகாத்த ( உதவி ) எங்கள் மண்ணின

அறத்துப்பால்- இல்லறவியல் இனியவைகூறல்- The Utterance of Pleasant Words- Douceur de language- 91- 100

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். 91 செம்மையான பொருளை அறிந்தவர்களின் வாய்ச்சொற்கள் , இனிய சொற்களாய் , அன்பு கலந்ததாய் , வஞ்சம் இல்லாததாய் இருக்கும் . எனது கருத்து : இனிய சொல்லு எண்டால் என்ன ? ஒருத்தர் கதைக்கிற கதை , வஞ்கமில்லாததாயும் , உண்மையானதாகவும் , அன்பாய் , பண்பாய் இருந்தால் , அதுதான் இனியசொல்லு எண்டு வடிவாய் ஐயன் விளக்கம் தாறார் ஆனால் , இப்பிடியெல்லாம் கதைச்சுத் தானே எங்களைக் கவுட்டுக் கொட்டினவங்கள் . Pleasant words are words with all pervading love that burn; Words from his guileless mouth who can the very truth discern. Les paroles douces sont celles des hommes qui abordent affablement et qui pratiquent la vertu de parler sans dissimulation. அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். 92 முகமலர்ந்து இன்சொல் உடையவனாய் இருக்கப் பெற்றால் , மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையை விட நல்லதாகும் . எனது கருத்து : நீங்கள் எந்தநேரமும் சிரிச்சமுகத்தோடை அன்பாய் பண்பாய் கதைப்பிங்கள் எண்டால் ( ஒருத்

அறத்துப்பால்- இல்லறவியல் விருந்தோம்பல்- Cherishing Guests-L’hospitalité-81-90

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. 81 மனைவியோடு வீட்டில் இருந்து பொருள்களைக் காப்பாற்றி வாழும் வாழ்க்கையெல்லாம் வந்த விருந்தினரை உபசரித்து அவர்களுக்கு உபகாரம் செய்வதற்காகத்தான் . எனது கருத்து : வீட்டில புருசனாய் இருக்கிறவன் நாலு பொருள் பண்டம் சேர்க்கவேணும் . அது கட்டாயம் செய்யவேணும் . அது ஏன் எண்டால் வாற விருந்தாளியளை வரவேற்று உபசரிக்கத் தான் . All household cares and course of daily life have this in view.Guests to receive with courtesy, and kindly acts to do. C’est pour bien accueillir les hôtes et leur être utiles, que l’on vit avec son épouse dans la maison familiale et que l’on converse les Biens. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. 82 ஒருவன் தான் உண்பது சாவாமைக்குக் காரணமாகிய அமிழ்தமேயானாலும் விருந்தினர் புறத்தே இருக்கத், தான் மட்டும் தனித்து உண்ணல் விரும்பத்தக்கது ஆகாது . எனது கருத்து : நீங்கள் வீட்டில நஞ்சைத் தான் தின்னுங்கோ . ஆனால் விருந்தளியள் இருக்கேக்கை , கூடவே க

அறத்துப்பால்-இல்லறவியல்-அன்புடமை-The Possession of Love-L’affection-71 - 80

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும். 71 அன்புக்கு அடைத்து வைக்கும் தாழ் ஏதேனும் உண்டோ ? அன்புடையாரின் சிறிதளவு கண்ணீரே அவர் அன்பைப் பலர் அறிய வெளிப்படுத்திவிடும் எனது பார்வை: நாங்கள் ஒருத்தரிலை அன்பு வைத்தால் அந்த அன்புக்கு வானமே எல்லையாயிருக்கும் . அப்படிப்படவருக்கு வாழ்கையில ஏதாவது சந்தோசமோ துன்பமோ நடந்திதுதெண்டால் எங்களை அறியாமலே கண்ணில தண்ணி வந்து வந்து எங்கடை அன்பை மற்றவைக்குக் காட்டிக்கொடுத்துப்போடும் . And is there bar that can even love restrain? The tiny tear shall make the lover's secret plain. Y a-t-il une targette pour cacher l’affection? Les douces larmes de ceux qui aiment (en voyant la douleur de l’être chéri) révèlent l’affection intérieure. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. 72 அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரிமையாக்கிக் கொண்டு வாழும் தன்னலக்காரராய் இருப்பர் . அன்புடையவரோ தம் உடம்பையும் பிறர் நலத்திற்காக ஈந்து மகிழும் இயல்புடையவராக வாழ்வர் எனது பார்வ

ஈழத்து சிந்தனைவெளி மீதான கலகச் செயல்-நேர்காணல்-மிஹாத்

அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாக கொண்ட மிகாத் இடதுசாரிய சிந்தனையாளர்களில் ஒருவர். அத்துடன் தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதிக்கொண்டிருக்கும் ஒரு படைப்பாளி. அடிப்படையில் இவர் ஓர் தேர்ந்த விமர்சகராகவே இனங்காணப்பட்டுள்ளார். வயதில் இளையவரான இவரது இலக்கிய ,அரசியல் நுண்அறிவு வியக்க வைக்கின்றன. இவர் ஒரு கால கட்டத்தில் கிழக்கிலங்கையின் ‘பெருவெளி’ குழுமத்தின் செயற்பாட்டாளர்களில் முக்கியமானவராகக் கருதப்படுகின்றார். இவருடன் கவிஞர் மஜீத், றியாஸ் குரானா, றபியூஸ், அப்துல் ரஸாக், காலித், றிஜால்டீன், பர்ஷான் போன்றவர்களும் ‘பெருவெளி’ குழுமத்தில் செயற்பட்டிருக்கின்றார்கள். நான் செய்துகொண்ட நேர்காணலில் மிகவும் நீண்ட நேர்காணல் இவரது நேர்காணலாகும். கோமகன் 000 நிந்தாவூரில் இடம்பெற்ற எனது நேர்காணல் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வில் உங்களை முதன் முதலில் சந்தித்திருக்கின்றேன். நீங்கள் தான் “குரலற்றவரின் குரல்” நேர்காணல் தொகுப்பிற்கான நூல்விமர்சனத்தை வைத்திருந்தீர்கள். அனாலும் உங்களை பற்றி என்னால் பெரிதாக அறிய முடியவில்லை ………? 1987 ல் இருந்து சில புரிதல்களைப் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன். பொதுவ