வாசுதேவனை ஏன் தெரியக்கூடாது ? வாசுதேவன் இலக்கியவாதியாக இதுவரையும் அறியப்படவில்லை என்ற அர்த்தத்தில் இந்தக் கேள்வி எழுந்துள்ளதாகவே கருதுகின்றேன். இது ஒரு வகையில் சரியான கேள்வியே. தமிழ் இலக்கிய உலகு விசித்திரமானது. அது தனக்கென எழுதாத சில விதிகளைக் கொண்டுள்ளது. இலக்கியராக ஒருவர் வெளிப்பட வேண்டுமானால் அவரை “மேடையேற்றுவதற்குச்” சில நபரேனும் தேவைப்படுகிறார்கள். ஆனால் அந்தச் சில நபர்கள் உங்களிடம் சில சமரசக் கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். இங்கே “சமரசம்” என்ற சொல்லு முக்கியமானது. அவர்கள் தங்களைப் போன்று நீங்களும் ரசிக்கவேண்டும் என்று நிபந்தனையிடுகிறார்கள். அவர்களின் இலக்கிய அரசியலுக்கு நீங்கள் “கட்டுப்படவேண்டும்”, துணைபோகவேண்டும். நீங்கள் உங்களுக்கான ஒரு சிந்தனைத் தனித்துவத்தைப் பேணுவதை அவர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். கூட்டாகவன்றி, தனித்துவமாக இருக்கும் யாரையும் சமகாலத் தமிழ் இலக்கிய உலகம் சகித்துக்கொள்வதில்லை. அவ்வாறனவர்களை ஓரங்கட்டுவதிலும், இருட்டடிப்புச் செய்வதிலும் அது மிகுந்த கரிசனை கொள்கிறது. குறிப்பாகத் தமிழ் இலக்கிய உலகில் இது ஒரு நோயாகவே மாறிவிட்டிருக்கிறது. தமிழ் இலக்கிய உலகில் தன...
எனது தளத்தில் வெளியாகும் ஆக்கங்களை எங்கும் பகிர்ந்து கொள்ளலாம்