Skip to main content

Posts

கதைகள் வெறுமனே கதைப்பதற்கு மட்டுமில்லை!-வாசிப்பு அனுபவம்-மதுசுதன் ராஜ்கமல்

புலம்பெயர் வாழ்வின் ஆழ அகலங்களை மிக விரிவாகவும் நுட்பமாகவும் பதிவு செய்திருக்கும் ஈழ இலக்கிய வரிசையில் முரண் சிறுகதை தொகுப்பு வித்தியாசமானதொரு கூறாக அமைந்திருக்கிறது.வடிவநேர்த்தியிலும் சொல் உத்தியிலும் சில முயற்ச்சிகளை இக்கதைகளில் கோமகன் கையாண்டு பார்த்திருக்கிறார்.அப்படியான முயற்ச்சிகள் எல்லா நேரத்திலும் பலிக்கும் என்று சொல்வதற்கில்லை ஆனால் சில கதைகளில் அது சாத்தியப்பட்டும் இருக்கிறது.நிஜத்தின் புற உருவை புனைவின் வழி பிரதிபலிக்க முயல்வதில்,அகத்தேடல் வாழ்வியல் போராட்டத்தைப் போலவே ஒரு முடிவில்லாத தொடர் போராட்டத்தை போன்றது,அந்த வகையில் சுறுக்கர் இன்னும் கூட பல உத்திகளை கையாளவேண்டும்.பரந்து கிடக்கும் நிலப்பரப்பில் வாழ்வலைச்சலின் கணங்கள் எப்படி ஒவ்வொருவருக்கும் பன்முகப்பட்டதோ அதுபோல எழுத்தும் அதனை வெளிப்படுத்தும் வகைமாதிரிகளும் பன்முகத்தன்மையானது தான்.அந்தவகையில் சுறுக்கர் ஒரு நெகிழ்வான போராளி என்பது நமது அசுவாசமாய் இருக்கிறது. இத்தொகுப்பின் பதினோரு கதைகளும் புலம்பெயர் வாழ்வை மையமாகக்கொண்டு நகர்பவைதான் எனினும் ஒவ்வொன்றும் அதன் தன்னியல்பில் தன்னிகரான கதைகளாக மிளிர்கிறது.அனேகமாக இத்தொக...

தெய்வானை-சிறுகதை-கோமகன்

நான்கு புறமும் அமைந்திருந்த சுற்று மதிலின் பின்னே நிரை கட்டியிருந்த கமுகம் பிள்ளைகளும் பாளை தள்ளிய தென்னை மரங்களும் ஆங்காங்கே இருந்த பப்பா மரங்களும் முற்றத்தின் மத்தியிலே சடைத்து நின்ற அம்பலவி மரமும் அதிலே துள்ளி விளையாடிய அணில் பிள்ளைகளும் என்று ஐந்து பரப்பில் அமைந்திருந்த அந்த நாற்சாரவீட்டில் சிங்கராயர் குடும்பத்தின் பவிசுகளைச் சொல்லி நின்றன. அந்தக்காலத்தில் ஊரில் நாற்சார வீடுகள் வைத்திருப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த வீட்டின் தென்கிழக்கு மூலையில் மால் ஒன்று இருந்தது. அந்த மாலின் அகன்ற சுவர்கள் மண்ணினால் கட்டப்பட்டு, இடையில் வெளிச்சமும் காற்றும் வருவதற்காகப் பனை மட்டை வரிச்சுக்களால் கிராதி அடித்துப் பின்னர் மேலே எழும்பிய சுவர் பனையோலையினால் நன்கு வேயப்பட்டிருந்த கூரையைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தது. மாலின் உட்புறமாக இருந்த பாரிய வட்டத்தின் குறுக்குப்பாடாக சாமான்களை போட்டு வைப்பதற்கான களஞ்சிய அறை இருந்தது. அதற்கு நேர் எதிராக அமைக்கப்பட்டிருந்த புகட்டில் மூன்று கண்களைக் கொண்டு சுட்ட களிமண்ணினால் வனையப்பட்டிருந்த நான்கு சூட்டடுப்புகள் இருந்தன. அதில் ஒன்றின் மீத...

முகநூலின் "ஓசை .........."-பத்தி

இன்று மதியம் ஒரு அலுவலாக லா பேட்டைக்கு (லாச்சப்பல்) செல்ல வேண்டியிருந்தது. காரியத்தை எனது நண்பர் மனோவின் அச்சத்திலேயே செய்ய வேண்டியிருந்தது. காரியம் முடிந்த பின்னர் எனக்கும் மனோவிற்கும் இடையில் தேநீர் குந்திக்கொள்ள, உரையாடல் தேநீரின் ஆவியுடன் கலந்து மேலெழுந்தது. நீண்டநாட்கள் இருவரும் சந்திக்காதபடியால் உரையாடலும் தேநீர் ஆவியைப் போல் சுற்றிச்சுழன்றது. எமது பேச்சுக்கள் சமகால இலக்கிய செல்நெறிகள், புதிய வருகைகள் என்று பலதையும் பிரித்து மேய்ந்து முகநூலில் வந்து நின்றது. நான் மனோவினது முகநூற்செயற்பாடுகள் குறித்த எனது ஆதங்கத்தை முன் வைத்தேன். அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. முன்னர் மனோ ஒரு பெரிய இலக்கியத்தளத்தின் செயற்பாட்டாளர். ஒன்றிற்கு இரண்டு இலக்கிய சஞ்சிகைகளுக்கு ஆசிரியராக இருந்தவர். இன்று அவர் பொதுவெளியில் மௌனமாக இருப்பது எனக்கு உடன்பாடான விடயமல்ல. அப்பொழுது அவர் சொன்னார் , "கோமகன் நீங்கள் தவறாக புரிகின்றீர்கள். எனக்கு முகநூல் ஒரு பெரிய நாவலை வாசிக்கின்ற உணர்வை தினமும் ஏற்படுத்துகின்றது. நீங்கள் ஒரு நாவலை எழுதும்பொழுது அதற்கு வேண்டிய கதைமாந்தர்களை உங்கள் பார்வையிலேயே வடிப்பீர்க...

வேலை நிறுத்தமும் பயணிகளும்

பிரான்ஸின் போக்குவரத்துப் பணிநிறுத்தம் மார்கழி 05 இல் தொடங்கி முற்றுப்புள்ளி இல்லாது தொடர்கின்றது. குறிப்பாக பாரிஸ் நடைமுறை வாழ்வியலை இழந்து போய் விட்டது. தினமும் 20 மில்லியன் யூரோக்கள் அரசுக்கு வருமானமிழப்பு. குறிப்பாக சுற்றுலாத்துறை அதல பாதாளத்தை நோக்கி செல்கின்றது. இந்த வருமானமிழப்பை அரசு பின்னர் இதே பணிநிறுத்தம் செய்பவர்களிடமிருந்தும் பொது மக்களிடமிருந்தும் வரியாக மீட்டுக்கொள்ளும். அப்படியானால் இந்த பணிப்புறக்கணிப்பு யாருக்காக ? இதன் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் ? என்ற பல மில்லியன் பெறுமதியான கேள்விகள் எழுகின்றன. பணிநிறுத்தத்தில் ஈடுபடும் போக்குவரத்து துறை போக்குவரத்துப் பயணிகளை ஆட்டு மந்தைகளைப்போல் நடாத்துகின்றார்கள். ஒரு மனித உயிரிக்கு கொடுக்க வேண்டிய அடிப்படை உரிமைகளை கூட தர மறுக்கின்றார்கள் . உதாரணமாக மின் தூக்கிகளை நிறுத்தி வைத்தல் , எஸ்கலேட்டர்களை நிறுத்தி வைத்தல் , பயணிகளை 10/15 மிட்டர் உயரத்தில் இருக்கும் சம தளத்திற்கு படிக்கட்டுகளால் ஏறவிடல். உப்புச்சப்பில்லாத நேரத்தில் நிலக்கீழ் தொடருந்தை இயக்குதல் .எல்லாத்திலும் கொடுமையாக பயணிகளை அடைத்து வைத்து பின் கூட்டமாக தொடர...

பிரான்சின் பொதுவேலை நிறுத்தம் தொடருமா இல்லையா ?

கடந்த 05 ஆம் திகதியில் இருந்து இன்று வரை பொதுவேலை நிறுத்தம் பிரான்சின் பலபாகங்களிலும் தேசிய அளவில் முன்னெடுக்கப்படுகின்றது . அரசின் அனைத்து துறைகளும் ஏறத்தாழ 97 வீதமான பிரெஞ் மக்கள் அரசின் புதிய ஓய்வூதியத் திட்டடத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் இன்று பிரதமர் எடுவார்ட் பிலிப் அரசின் புதிய ஓய்வூதியத்திட்டத்தை முன்னெடுத்து அரசின் நிலைப்பாடுகளை நாட்டு மக்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார். அதன்படி 1975 ஆம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்கள் நடைமுறையில் இருக்கும் ஓய்வூதிய திட்டத்திலும் 1975 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பிறந்தவர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். அதன்படி 1975 ஆண்டிற்குப் பின்னர் பிறந்தவர்களது ஓய்வூதியத்திற்கான உச்ச வயதெல்லை 64 ஆகின்றது. மற்றயவர்களுக்கு 62 வயதாகின்றது. போக்குவரத்து துறையை சேர்ந்த தொழிலாளர் குறிப்பாக தொடருந்ததை செலுத்துபவர்கள், போக்குவரத்து அலுவலக பணியில் இருப்பவர்கள் பல சலுகைகளை அனுபவித்தவாறே 52 ஆவது வயதிற்குப் பின்னர் ஓய்வூதியம் எடுக்க முடிகிறது. ஆனால் மற்றைய துறைகளை சேர்ந்தவர்கள் போக்குவரத்து துறையின் சலுகைகளும் தமது வருமானத்தைக் கொடு...

வேங்கையின் மைந்தன் - புதினம் - பாகம் 1-17

கூடத்தின் கதவைத் திறந்துகொண்டு அவனும் வந்தியத் தேவரும் உள்ளே நுழைந்தபோது, அதற்குள் மூன்று பெண்மணிகள் இருந்தனர். ஒவ்வொருவராக அந்த மூவரையும் உற்றுப் பார்த்தான் இளங்கோ. அவர்களில்ஒருத்திகூட அந்த மாயமோகினியைப்போல் இல்லை. “முன்பு இதற்குள் எத்தனை பேர்கள் இருந்தார்கள் தெரியுமா?” என்றுகேட்டார் வல்லவரையர். “வெளியில் நின்று கொண்டே அவளைப் பிடித்துத் தள்ளினேன், தாத்தா! நான் உள்ளே நுழைந்து சென்று பார்க்கவில்லையே?” என்று பதறினான் இளங்கோவேள். அங்கிருந்த மூவரில் ஒருவர் பட்டமகிஷி என்பது அவளுடைய தோற்றத்தால் விளங்கியது. அரசிக்கு உரிய ஆடை அணிகள் அவரை அலங்கரித்திருந்தன. குனிந்த தலை நிமிராமல் சோகமே உருவாகக் கண்ணீர்உதிர்த்துக் கொண்டிருந்தார் அவர். வல்லவரையரையும் இளங்கோவையும்அவர் ஏறிட்டுக்கூடப் பார்க்கவில்லை. பட்டமகிஷியின் காலடியில் உட்கார்ந்து தலைவிரி கோலமாக அழுது புலம்பிக் கொண்டிருந்தாள் மற்றொரு மாது. மகிஷியைப் போலவே நடுத்தர வயதிருக்கும் அவளுக்கு. அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குரிய அலங்காரங்கள் ஏதும் அவளிடம் இல்லை. முகத்தைத் தூக்கி வெறுப்புடன் அவள் இளங்கோவை ஒரு முறை பார்த்துவிட்டு உடனே திரும்பிக் கொண...

வேங்கையின் மைந்தன் - புதினம்- பாகம் 1-16

இளங்கோவின் குதிரை கோட்டை வாயிலை நெருங்குவதற்கு முன்பே அதை நன்றாக இழுத்து மூடிவிட்டார்கள். வல்லவரையர் வந்தியத்தேவர் நெருப்புப் பொறி பறக்கும் கண்களோடு அங்கு நின்றுகொண்டே வீரர்களுக்குப் பற்பல விதமான கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தார். “ஓடுங்கள்! அரண்மனையின் எல்லா வாயில்களையும் மூடச்சொல்லுங்கள்!” என்றார் சிலரிடம். “எதிரிகள் எங்கு தென்பட்டாலும் அவர்களை வளைத்துக் கொண்டு காவலில் வையுங்கள்!” என்றார். இன்னும்சிலரிடம், “நிலவறைப் பாதைகள், ரகசிய வழிகள், தப்பிச் செல்வதற்கான மார்க்கங்கள் எங்கேயாவது தென்படுகின்றனவா என்று தேடிப் பாருங்கள்!”என்றார் மேலும் சிலரிடம். வல்லவரையரிடம் நெருங்கிப் பேசுவதற்கே அச்சமாக இருந்தது இளங்கோவுக்கு. நெருக்கடி மிகுந்த இந்த நேரத்தில் வாயில் கதவுகளைத் திறக்கச் செய்வாரா அவர்? வீரர்களின் மத்தியில் புகுந்து தயங்கிக்கொணடேபோய் அவர் முன்னால் குதிரையிலிருந்து கீழே இறங்கினான் இளங்கோ. “நீ எங்கு இங்கே வந்தாய்?” என்று வியப்புடன் கேட்டார் வல்லவரையர். “மகிந்தரின் மகனை யாரோ குதிரைமேல் தூக்கி வைத்துக் கொண்டு இந்த வழியாகச் சென்றார்கள். நம்முடைய வீரன் என்று நம்பி ஏமாந்து போய்விட்ட...