பிரான்ஸின் போக்குவரத்துப் பணிநிறுத்தம் மார்கழி 05 இல் தொடங்கி முற்றுப்புள்ளி இல்லாது தொடர்கின்றது. குறிப்பாக பாரிஸ் நடைமுறை வாழ்வியலை இழந்து போய் விட்டது. தினமும் 20 மில்லியன் யூரோக்கள் அரசுக்கு வருமானமிழப்பு. குறிப்பாக சுற்றுலாத்துறை அதல பாதாளத்தை நோக்கி செல்கின்றது. இந்த வருமானமிழப்பை அரசு பின்னர் இதே பணிநிறுத்தம் செய்பவர்களிடமிருந்தும் பொது மக்களிடமிருந்தும் வரியாக மீட்டுக்கொள்ளும். அப்படியானால் இந்த பணிப்புறக்கணிப்பு யாருக்காக ? இதன் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் ? என்ற பல மில்லியன் பெறுமதியான கேள்விகள் எழுகின்றன. பணிநிறுத்தத்தில் ஈடுபடும் போக்குவரத்து துறை போக்குவரத்துப் பயணிகளை ஆட்டு மந்தைகளைப்போல் நடாத்துகின்றார்கள். ஒரு மனித உயிரிக்கு கொடுக்க வேண்டிய அடிப்படை உரிமைகளை கூட தர மறுக்கின்றார்கள் . உதாரணமாக மின் தூக்கிகளை நிறுத்தி வைத்தல் , எஸ்கலேட்டர்களை நிறுத்தி வைத்தல் , பயணிகளை 10/15 மிட்டர் உயரத்தில் இருக்கும் சம தளத்திற்கு படிக்கட்டுகளால் ஏறவிடல். உப்புச்சப்பில்லாத நேரத்தில் நிலக்கீழ் தொடருந்தை இயக்குதல் .எல்லாத்திலும் கொடுமையாக பயணிகளை அடைத்து வைத்து பின் கூட்டமாக தொடருந்து மேடைக்கு திறந்து விடல் என்று இவர்களது மனிதாபமற்ற செயல்கள் பட்டியல் போட்டு மாளாது. இத்தனைக்கும் பயணிகளது காசிலேயே சகல வசதி வாய்ப்புகளையும் அனுபவித்தவறே பயணிகளுக்கு எதிராக செயல்படும் போக்குவரத்து துறையை என்னவென்று சொல்ல ?
அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் . பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின...

Comments
Post a Comment