Skip to main content

Posts

Showing posts from September, 2018

செய்ன் மிஷேல் (SAINT MICHEL) -கோமகன்-பிரான்ஸ்

1995 ல் இதமான வெய்யிலை கண்ட ஓர் அதிகாலை நேரம் அலாரம் சிவாவினது நித்திரைக்கு உலை வைத்தது. சிவா வழக்கமாகவே பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே அலாரத்தை வைப்பதுண்டு. இந்த ஏற்பாட்டினால் அவன் தனது பூனைத் தூக்கத்தை மைதிலியின் அணைப்பில் அனுபவிப்பதுண்டு. அவனது கை கட்டிலின் மறுபுறம் துழாவியபோது அந்த இடம் வெறுமையாகவே இருக்க” இந்த நேரத்தில் மைதிலி எங்கே போய்விட்டாள்”? என்று நினைத்தவாறே கட்டிலில் இருந்து விசுக்கென்று எழுந்தான். வீட்டின் ஹோலுக்குள் வந்தபொழுது,மைதிலி முழுகிவிட்டு பல்கனியில்த் தனது தலையைத் துவட்டிக்கொண்டிருப்பது கண்ணாடி ஜன்னலுக்கால் அவனுக்குத் தெரிந்தது. அந்தக்காலை வேளையில் அவளது நீண்டகருமையான கூந்தல் கருநாகம் போல அவளதுமுதுகில் பரவியிருந்தது. அவள் அவனுக்காகத் தயாரித்திருந்த கோப்பி ஆவிபறந்தபடி குசினிக்குள் காத்திருந்தது. சிவா கோப்பியை எடுத்துக் கொண்டு பல்கணியில் மைதிலிக்குப் பக்கத்தில் நின்று கொண்டான். மைதிலி முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு தனது வேலையில் ஈடுபாட்டுடன் இருந்தாள். நேற்று இரவு இருவரும் வாயால் சண்டைபிடித்தது மனதில் வந்து அவனை அலைக்கழித்தது க்கொண்டிருந்தது. ஒருப...

குதிரை இல்லாத ராஜகுமாரன் -ஒரு நோக்கு -கோமகன்

ஓர் சிறுகதைத்தொகுதியை வாசிக்கும் பொழுது அதன் ஊடாக வருகின்ற புரிதல்கள் /கிரகிப்புகள் வாசகனுக்கு வாசகன் வேறுபடும் அந்தவகையில் அண்மையில் கனடாவில் வதியும் ராஜாஜி ராஜகோபாலனின் “குதிரை இல்லாத ராஜகுமாரன் ” சிறுகதைத்தொகுதி என்னுள் ஏற்படுத்திய அலைகளை பதியலாம் என எண்ணுகின்றேன்.ராஜகுமாரன் என்றாலே வெண்புரவி அல்லது கரும்புரவியில் ஓர் கம்ரபீமான தோற்றத்துடன் ராஜபாட்டையில் குளம்பொலியுடன் கடுகி விரைவார். அனால் இங்கு குதிரையே இல்லை.இந்த ராஜகுமாரன் எப்படி இருக்கப்போகின்றாரோ என்ற ஐயப்பாட்டுடன் சிறுகதைத்தொகுதியில் உலா வந்தேன்.இந்த சிறுகதைத்தொகுப்பில் மொத்தம் பதினைந்து சிறுகதைகள் பல்வகை ரசங்களுடன் வெளியாகி இருக்கின்றன. நிகழ்காலத்தில் தொலைந்ததை பிடிக்க ஓடிக்கொண்டிருக்கும் நாங்கள் எமது வாழ்க்கையின் அனுபவங்களைச் தொலைக்கச்செய்கின்றோம் ஆனால் யாருமற்ற தனிமையில் இருக்கும் பொழுது அந்தத் தொலைந்த அனுபவக் குப்பைகளைக் கிளறிப் பார்த்தால், காலமாற்றங்களினால் தூக்கிப் போட்ட கனவுகளும், இழந்துவிட்ட உண்மையான நம்முடைய முகங்களும், இழந்துவிட்ட வாய்ப்புகளும், வலிகளும், வேதனைகளும், காதலும், தோல்வியும், சந்தோஷங்களும் இருக்க...

‘ஓர் கவிஞன் எதுவாக இருக்கின்றானோ அவ்வாறே அவனது கவிதைமொழியும் அமையும்”-இளவாலை விஜேந்திரன்-நோர்வே

ஈழத்தின் வடபுலத்தின் இளவாலை மண்ணுக்குச் சொந்தக்காரரான இளவாலை விஜயேந்திரன் ஈழத்துக் கவிகளில் தனக்கென்று தனிமுத்திரையைப் பதித்தவர். எனது பதின்மவயது காலத்தில் இவரது கவிதைகள் ஈழத்தின் அனைத்து சஞ்சிகைகளிலும் இடம்பிடித்திருந்தன. இவரது கவிதைகள் போர்க் குணாம்சம் கொண்டவை. வாசகனின் நாடிநரம்புகளை முறுக்கேற்றும் வல்லமை கொண்டவை. உதாரணமாக, தனது ” ஆண்ட பரம்பரைக்கு ” என்ற கவிதையில் இவ்வாறு குறிப்பிடுகின்றார் ………….. எமதூரின் மன்னவரை எங்கேனும் கண்டீரோ? வான முகட்டில் வழி தெரியாச் சேனைப் புலத்தில் காடுகளில் ஊர்ப் புறத்துத் திண்ணைகளில் அவருலவும் அந்தப் புரங்களில். பாவம், ஊர் முழுக்கக் குலுங்கியதில் ஒப்பாரி வைத்தழுது பிறகும், வீசுகிற எலும்புக்காய் விழுந்தெழுந்து ஓடி அலுப்புற்றும் சாகாமல் உயிர் வாழ்ந்தார். கோடிப் புறமிருக்கும் குதிரை லாயங்களில் இரவுகளில் வந்து தங்குவாரோ? பிடியும், சேணம் இட்டுவையும். தொலைநீளக் கடற்பரப்பில் நீந்தித் தொலைத்தாரோ? மறுகரையில், இன்னும் ஒருதடவை அழுது தொலைத்தாரோ? பொழுதின் இர...

உயிரணை – நூல் விமர்சனம்

ஈழத்தில் போர்க்காலப் படைப்புகள் பல வந்தன / வந்து கொண்டிருக்கின்றன. இவைகள் பல சுயவிமர்சனங்களையும் சுய பரிசோதனைகளையும் மேற்கொண்டன . இந்தப்படைப்புகளை படைத்தவர்கள் எல்லோருமே மிக முக்கியமாக “உண்மைகளை எடுத்து சொல்கின்றோம்” என்று போரியலைத்தளமாகக் கொண்ட படைப்பாளிகளால் முன்நிலைப்படுத்தப்பட்டன.போரியல் படைப்பாளிகளை மக்கள் சந்தேகக்கண் கொண்டு பார்த்தனர். இதற்கு மிக முக்கிய காரணியாக அவர்களில் பலர் இறுதி போரில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வாழ்வு பெற்று வெளியே வந்தவர்கள். இந்தப் போரியற்படைப்பாளிகள் கூறிய சங்கதிகளை தமிழ்த்தீவிர தேசிய உபாசகர்களும் அவர்சார் படைப்பாளிகளும் மறுதலித்து, இல்லையில்லை அவைகள் எல்லாம் உண்மைக்குப் புறம்பானவை. இவைதான் உண்மை என்று தங்கள் தரப்புப் படைப்புகளின் ஊடாக வாசகர் முன்னே வைத்தனர். ஆக இங்கு “உண்மை” என்பது இரண்டு பக்கமும் அல்லாடியது எனலாம் . அந்தவகையில் நேசக்கரம் சாந்தியின் “உயிரணையும் ” உண்மைநிலையை எடுத்து சொல்வதாக சொல்லி நிற்கின்றது . இலக்கியத்தில் உண்மை நிலை பற்றி தத்துவமேதை ஹெகல் பின்வருமாறு வரையறை செய்கின்றார் “உண்மை” என்பது அகம் சார்ந்தது .மனிதனின...

“கலை என்பது அதுசார்ந்த சமூகத்தின் பிரதிபலிப்பாகவே இருத்தல் வேண்டும்” – நேர்காணல் -ஷாலினி சாள்ஸ்

ஈழத்தின் வடபுலத்தில் உள்ள சாவகச்சேரியைப் பிறப்பிடமாக கொண்டு யாழ்நகரில் வசித்துவரும் ஷாலினி சார்ல்ஸ், வளர்ந்துவருகின்ற இளைய தலைமுறைப் படைப்பாளிகளில் மிகவும் குறிப்பிடத்தக்க பன்முக ஆளுமையுடையவராக எம்மிடையே அடையாளப்படுத்தப்பட்டவர். திரைப்பட நெறியாட்கை,குறும்படத்தயாரிப்பு,சமூக சேவை,யாழ்என்ரர்ரெயிமென்ற் ,மற்றும் யாழ் அறக்கட்டளை ஸ்தாபகர் என்று பலதுறைகளில் தனி முத்திரை பதித்து இருக்கின்றார். இவரே தொடர்ச்சியாக திரைப்படங்களைத் தந்துகொண்டிருக்கின்ற ஈழத்தின் முதல் பெண் இயக்குனர் என்ற தகமையையும் பெறுகின்றார். இவரது “உயிர்வலி” குறும்படம் விருதை தட்டிச்சென்றது குறிப்பிடத்தக்கது. திரைப்படம் ,சமூகம், அரசியல் என்று தனது எண்ணப்பாடுகளை ” வல்லினம் ” இலக்கிய சஞ்சிகை வாசகர்களுடன் ஷாலினி சார்ல்ஸ் மனம் திறகின்றார். கோமகன் 00000000000000000000000 உங்களை எப்படியாக தெரிந்து கொள்வது ? அடிப்படையில் நான் மிகவும் சாதாரணமானவள்.என்னைப்பற்றி நான் சொல்வதைவிட மற்ரவர்கள் நான் யார் ? எனது செயல்கள் என்ன ? என்று சொல்வதையே நான் அதிகம் விரும்புகின்றேன். இளைய வயதினராகிய உங்களை திரைப்படத்துறை எப்படியா...