Skip to main content

Posts

Showing posts from 2017

பாண்-சிறுகதை

பெயர் : நரேன் தொழில் : பாண் போடுவது தகுதி : இலங்கை அகதி தந்தை பெயர் : வல்லிபுரம் தொழில் : பாண்போடுவது உபதொழில் : கள்ளு அடிப்பது 0000000000000000000000000000 1997 ஆம் ஆண்டின் நடுப்பகுதி ஒன்றில் பிரான்சின் புறநகர் பகுதி ஒன் று காலை விடியலின் ஆரம்பத்தைக் காணத் தயாராகிக்கொண்டிருந்தது. வசந்த காலத்தின் மொக்கவிழ்க்கும் காலமாகையால் அந்த தொடர்மாடிக்குடியிருப்பின் முன்பு நின்றிருந்த அனைத்து மரங்களும் தங்கள் தவம் கலைந்து தங்களை பச்சை பூசி அலங்கரிக்கத் தொடங்கியிருந்தன. அவற்றின் மேலே இருந்த குருவிகள் வெளிச்சத்தைக் கண்ட சந்தோசத்தில் கிலுமுலு கிலுமுலு என்று துள்ளித்துள்ளி சத்தம் இட்டுக்கொண்டிருந்ததன. தூரத்தே தெரிந்த புகைபோக்கியினூடாக அந்த அதிகாலை குளிரைப் போக்க எரிந்த நெருப்பின் புகை வந்துகொண்டிருந்தது. நரேன் அந்த அதிகாலையின் பிறப்பை அணுவணுவாக அனுபவித்து தேநீர் அருந்திகொண்டிருந்தான். அவன் இரவு செய்த வேலையால் கண்முழித்ததால் கண்கள் சிவந்து இருந்தன. காலை வேலையால் வந்தவுடன் தனது அம்மா மீனாட்சிக்க

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள்-பத்தி-பாகம் 06

இண்டைக்கு விடிய காத்தாலை புஸ்பமாய் குளிச்சு நெத்தி முட்ட திருநூத்தை அள்ளி பூசிகொண்டு ஒரு சாம்பிராணி குச்சியும் கொழுத்திப்போட்டு கொம்பியூட்டரை திறந்து அதிலை சுப்பிரபாத்தை மெதுவாய் போட்டுக்கொண்டு ( இங்கையும் பக்தி கமழ வேணுமாம் ) பேப்பருகளிலை பூராயம் பாக்கத் தொடங்கினன். எல்லா பேப்பருகளும் ஒரு உழுந்தை வித்தியாசம் வித்தியாசமாய் அரைச்சு பலகாரம் பலகாரமாய் சுடுறாங்கள்.ஆனால் பாருங்கோ பலகாரத்துக்கு உப்பு புளி காணுமோ எண்டு ஒருத்தரும் வாயை திறக்கிறாங்கள் இல்லை.இண்டைக்கு சுறுக்கர் என்ன குளிரிலை பினாத்திறார் எண்டு எல்லாரும் கொடுப்புக்குள்ளை சிரிக்கிறது விளங்காமல் இல்லை. உதுகளுக்கெல்லாம் இந்த சுறுக்கர் மசியிற ஆள் இல்லை கண்டியளோ. நாலு வரியத்துக்கு பிறகு ஐரோப்பிய நீதிமானுகள் புலியளின்ரை தடையை நீக்கி இருக்கினமாம் எண்டது தான் இண்டையான் ஹொற் ரொப்பிக் கண்டியளோ. இந்த நீதிமானுகள் தான் கிட்ட முட்ட ஏழு வரியத்துக்கு முன்னாலை சனமெல்லாம் றோட்டிலை நிண்டு குழற கையை கட்டிக்கொண்டு பாத்துக்கொண்டு நிண்ட கோஸ்ரியள். ஒரு தமிழனாய் பிறந்த குற்றதுக்காய் டெய்லி சனங்களை வகைதொகையாய் போட்டுத்தள்ள அதிலை குளிர் காஞ்ச

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள்-பத்தி-பாகம் 05

வணக்கம் பிள்ளையள் கனகாலத்துக்கு பிறகு சுறுக்கன் வந்திருக்கிறன். இண்டைக்கு இருபத்தி நாலு வாரியத்துக்கு பிறகு யாழ்ப்பாணத்துக்கு யாழ்தேவி வந்துட்டுது எண்டு சனங்களும், இணையங்களும் ஒரே அல்லோலகல்லோலம். பாக்க பம்பலாய் இருக்கு. ஆனால் பாருங்கோ எனக்கு கொஞ்சம் டவுட்டுகள் மண்டையுக்கை டண்டணக்கா ஆடுது கண்டியளோ. அது என்னெண்டால் உண்மையிலை யாழ்ப்பாணம் சுதந்திர மண்ணாய் கிடக்கா எண்டு. இப்ப பாருங்கோ பாதுகாப்பு வலையங்கள் முழுக்க எடுபடேலை . நிழல் இராணுவ கெடுபெடியள் இன்னம் போகேலை . இப்பவும் மகிந்தர் வாற ரெண்டு நாளைக்கும் வெளி சனங்கள் எம் ஒ டி பாஸ் எடுக்கவேணும் எண்டு படிச்சன் . இன்னும் புலிவாசம் மணக்குதோ எண்டு மூக்கை நீட்டி கொண்டு திரியிறாங்கள் . ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலை கண்ணாய் இருக்கவேணும் எண்டமாதிரி , கிளிநொச்சியிலை நாடுகடந்த அரசாங்கம் வந்ததாய் மகிந்தர் கடுப்படிசிருக்கிறார் ( அடுத்த லிஸ்ட் றெடி ). இந்த பயங்கராவாத தடை சட்டம் என்னம் ரோட்டலாய் எடுபடேலை. அதோடை கொழும்புவாழ் டமில்சை குழுத்திப்படுத்த கல்கிசையிலை இருந்து யாழ்தேவி டிரக்ட்டாய் யாழ்ப்பாணம் வருகுது எண்ட நியூசையும் படிச்சன். உண்மையில

புலம்பெயர் நாடுகளில் குடும்ப வன்மூறை-பத்தி

இந்த பெண்கள் எப்பொழுதும் சொல்கின்ற ஓர் சுலபமான சொல்லாடல் ஆணாதிக்கம். ஆனால் இவர்கள் பெண்ணாதிக்கங்களை இருட்டடிப்பு செய்வதில் கில்லாடிகளாக இருப்பார்கள். ஆம்பிளையானவன் என்ன காரணத்துக்காக 2-3 வேலைகள் செய்கின்றான் ?? அவனுக்கென்ன வயித்து வலியா ?? இத்தினை பவுணிலை தாலிக்கொடியும்( கலியாணத்திலை கட்டினதை திருப்பி செய்ய ), பவியோன் வீடும் (தனி வீடு வளவுடன் கூடியது ) , பீ எம் டபிள்யூ காரும் , அவனா கேக்கிறான்?? இந்தப் பெண்மணிகள் தங்கள் இனிஷல் பிரச்சனைக்காக இங்கிருந்து கொண்டு தாயகத்தில் இருந்து மாப்பிள்ளை எடுத்து கலியாணம் கட்டுகின்றார்கள். அவனுக்குரிய மரியாதையை அவர்கள் கொடுக்கிறார்களா என்றால் அதன் விடை துயரமானது அவனை செல்லப்பிராணி போலத்தான் அவர்கள் பார்கின்றார்கள் . இதன் மூலம் இந்தப் பெண்மணிகள் மறைமுகமாக உணர்த்தும் செய்தி என்னவென்றால், புலத்தில் உனக்கு நான்தான் வாழ்வு கொடுத்தேன் என்பதே. ( இதுவும் ஒருவகையான உளவியல் வன்முறையே) இதற்கு பல உதாரணங்களை என்னால் தரமுடியும் அனால் சம்பந்தப்பட்டவர்களின் கௌரவப் பிரச்னை என்ற ஒன்று உள்ளது. பிரச்சனைகள் என்று வரும் பொழுது இந்தப் பெண்மணிகள் நடுநிலைமையுடன் சொல்வ

பரிசுகெட்ட ஊரிலை பரபரப்பு சந்திப்பு-பத்தி

நேற்று இரவு கொஞ்சம் வெள்ளன படுக்கவேணும் எண்டு யோசிச்சன். அதுக்கு ஒரு காரணமும் இருக்கு. இண்டைக்கு. பாரிசுக்கு போற புறநகர் கோச்சி எல்லாம் ஸ்ட்ரைக் செய்யிறாங்கள். அதோடை இப்ப ரெண்டு கிழமைக்குமேலை எயார் பிரான்ஸ் காறங்களும் ஸ்ட்ரைக் செஞ்சு கொண்டிருக்கிறாங்கள். வெள்ளன படுத்தால்தான் காத்தாலை எழும்பி முதல் கோச்சியை பிடிச்சு வேலைக்கு போகலாம். என்ரை யோசினையிலை மண் விழுந்த மாதிரி பக்கத்திலை இருந்த கைத்தொலை பேசி அடிச்சுது. மெதுவாய் ஒரு கள்ளக் குணத்திலை அதை எட்டி பாத்தன். சோபா சக்தியின்ரை பேர் மின்னீச்சுது. இந்த நேரத்திலை இவர் ஏன் எடுக்கிறார்?? “கோமகா… அவதானமாய் நடந்துக்கோ ராசா” எண்டு என்ரை மனம் ஸ்ட்ரிக் ராய் ஓர்டர் போட்டுது. நான் ரெலிபோனை எடுக்க , மற்றப்பக்கம் “அண்ணை நான் சோபாசக்தி கதைக்கிறன்.நாளைக்கு நீங்கள் வேலைமுடிய ஒருக்கால் லாச்சப்பலுக்கு வாங்கோ. உங்களுக்கு ஒராளை அறிமுகப்படுதவேணும்” எண்டுபோட்டு என்ரை அபிபிராயத்தை நான் சொல்ல முதல் அண்ணாத்தை டெலிபோனை கட் பண்ணிபோட்டார். எனக்கு பண்டிவிசர் வந்திது. நான் மாற்றாரை விடிய பாக்கலாம் எண்டு படுக்கப்போனன். நான் காத்தாலை மூண்டு மணிக்கே எழும்பி ப

கிளி அம்மான் - சிறுகதை

இன்று எனக்கு விடுமுறை நாள் என்ற பொழுதும் நித்திரை என்வசப்படவில்லை.இன்று கிளி அண்ணையின் நினைவு நாள் என்பதால் அவரின் நினைவுகளே என்மனமெங்கும் நிரம்பியிருந்தன. நான் அதிகாலையிலேயே எழுந்து விட்டிருந்தேன்.என் மனைவி இன்னும் எழுந்திருக்கவில்லை.வேலைக்கு செல்லும் அவளை நான் குழப்ப விரும்பவில்லை.நான் எழும்பியவுடன் முதல் வேலையாக குளித்துவிட்டு ஓர் சாம்பிராணிக்குச்சியை கிளி அண்ணையின் படத்துக்கு முன்னால் கொழுத்தி வைத்து விட்டு அவரின் முகத்தை தொடர்ந்து பார்க்க திராணியற்றவனாக எனக்கான தேநீரைத் தயாரித்துக்கொண்டு பல்கணிக்கு வந்தேன்.பல்கணியின் முன்னே இருந்த மரங்கள் யாவும் பச்சையத்தை தொலைத்து உறைந்து போய் இருந்தன.குளிர் எலும்பை சில்லிட வைத்தது.கீழே தரையில் பனி மூடி வெண்மையாக இருந்தது.நேர் எதிரே இரண்டு மாடிக்கோபுரங்களுக்கு இடையில் முழு நிலவு அப்பளமாக வானில் பரவியிருந்தது. சாதாரணமாக இந்தக் காட்சிகளில் நேரக்கணக்காக மயங்கி நின்று இருக்கின்றேன்.ஆனால் இன்று கிளி அண்ணையின் நினைவுகள் என் மனதை வலிக்கச்செய்தன.எனது கைகள் தன்னிச்சையாக சிகரட்டை எடுத்துப் பற்ற வைத்தன. 0000000000000 ஏறத்தாழ இருபத்து நான்கு

நானும் என்ரை வாத்திமாரும் - பத்தி

பிள்ளையள் வணக்கம், எல்லாரும் இண்டைக்கு ஆசிரியர் தினம் எண்டும் , அதுக்கு தங்களை படிப்பிச்ச வாத்திமாரை வாழ்த்த வேணும் எண்டும், இண்டைக்கு ஒரு மார்க்கமாய் கறணமடிச்சு வாழ்த்துறாங்கள். எனக்கு உதுகளிலை சொட்டுக்கும் விருப்பமில்லை கண்டியளோ . ஏனெண்டால் நாங்கள் படிக்கிற காலத்திலை வாத்திமாருக்கு எப்பிடி, எந்த றேஞ்சிலை ஆப்படிக்கலாம் எண்டு யோசிச்சு மண்டை காஞ்சு போவம்; முக்கியமாய் சைக்கிள் சில்லு காத்தை கழட்டி விடுறது, குண்டூசியாலை குத்துறது, சிலநேரம் இருட்டடி குடுக்கிறது, நல்ல வடிவான பட்டங்கள் வைச்சு மல்ரிபறல் அற்ராக் செய்து அவை உரு ஏறி கலைக்க நாங்கள் ஓடிறது, எண்டு செய்யாத அனியாயங்கள் எல்லாம் செய்தம். நெஞ்சிலை கையை வைச்சு சொல்லுங்கோ........ உண்மைதானே?? அனால் அவையளும் லேசுப்பட்ட ஆக்களில்லை. காத்தாலை தோட்டத்துக்கு தண்ணி மாறிப்போட்டு வீட்டிலை மனுசிமாரோடை றாட்டுப்பட்டுப்போட்டு பள்ளிகூடம் வந்து வகுப்பிலை எங்களோடைதான் டிக்கி புளிக்க அடிக்கிறது. பெட்டையளுக்கு முன்னாலை நக்ஸ் நையாண்டி செய்யிறது. மனுசிமாற்றை கோபத்தை மேசைக்கு கீழை குனிய விட்டு துவரங்கம்பாலை விளாசிறது எண்டு அவையளும் கேம் கேக்கேக்க

ஐடியா சின்னத்தம்பியர் – பத்தி

ஒரு ஊரிலை சின்னதம்பி எண்டு ஒரு பெரிய ஆள் இருந்தார் . அவரிட்டை இருக்கிற ஒரு குணம் என்னவெண்டால் தீராத பிரச்னை எல்லாத்தையும் தீர்க்கிறதிலை சின்னதம்பியர் தான் சிங்கன் . இப்பிடித்தான் ஒருநாள் ஒருதற்றை வீட்டு ஆட்டுக்குட்டி ஒண்டு விளையாட்டுதனமாய் தன்ரை தலையை ஒரு மண் குடத்துக்கை குடுத்துப்போட்டுது . எல்லாரும் அட்டுகுட்டியை மண் குடத்துக்குள்ளாலை எடுக்க ட்ரை பண்ணியும் எடுக்கேலாமல் போய் சின்னதம்பியரிட்டை போய் ஐடியா கேட்டினம். சின்னத்தம்பியர் எப்பவும் யானையிலை நேரை ஸ்பொட்டுக்கு போய் தான் ஐடியாக்களை குடுக்கிறது வழக்கம் . சின்னதம்பியரும் யானையிலை பிரச்னை நடந்த இடத்துக்கு போனார் . அவற்ரை கெட்டகாலம் அவர் வந்த யானை வீட்டு மதிலுக்குள்ளாலை போகேலாமல் போச்சுது . உடனை சின்னதம்பியர் கீழை இருந்த ஆக்களை பாத்து மதிலை உடைக்க சொல்லி சொன்னார் . இப்ப அவற்றை யானை வலு கிளீனாய் ஆட்டுக்குட்டி பிரச்னை பட்ட இடத்துக்கு போச்சுது. அங்கை ஆட்டுக்குட்டி மண் குடத்துக்கை தலையை குடுத்த வேதனையிலை கத்திது . சனம் சினதம்பியரை என்ன செய்யலாம் எண்டு ஐடியா கேட்டுதுகள் . அப்ப வலு விலாசமாய் சினதம்பியர் சொன்னார் , " ஆட்டுக்குடி

அவர்கள் அப்படிதான் – சிறுகதை

1985 ஆம் வருடம் அதிகாலை இருபாலை சோம்பலுடன் விழித்துக்கொண்டிருந்தது. கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு அருகே இருந்த அந்த முகாமும் சோம்பலுடன் இயங்கிக் கொண்டிருக்க உறுமலுடன் நுழைந்து கிரீச் என்ற ஒலியுடன் நின்றது இளம்பிறையன் வந்த டட்சன் பிக்கப். பிராந்தியப் பொறுப்பாளரின் தீடீர் வருகையால் முகாம் பொறுப்பாளன் சிவா உட்பட எல்லோருமே பரபரப்பானார்கள். அவர்களின் பரபரப்பை இளம்பிறையன் உள்ளர ரசித்தாலும் அதை வெளிக்காட்டாது விறைப்பாக முகாமின் உள்ளே நுழைந்தான். இளம்பிறையன் அந்த முகாமின் ஹோலில் இருந்த மேசையில் இருந்து முகாமின் தினக்குறிப்பேட்டை படித்துக்கொண்டிருந்தான். அவனுக்காக தயாரித்த தேநீரை நடுக்கத்துடன் கொண்டு வைத்தான் ஒரு போராளி. அவனைப் பார்த்துப் புன்னகை ஒன்றை தவழ விட்டபடியே தேநீரை எடுத்துக்கொண்டான் இளம்பிறையன். வெளிநாடு சென்றிருந்த ஒரு குடும்பத்தின் இரட்டை மாடி வீடு ஒன்று அவர்களின் முகாமாக மாறியிருந்தது.அந்த இரட்டை மாடி வீடு விஸ்தாரமாக பல அறைகளுடன் இவர்களுக்கு வசதியாகவே இருந்தது. முகாமின் நுழைவாயிலிலும் பின்பக்கமாகவும் மண் மூட்டைகள் அடுக்கி சென்றிப் பொயின்ருகள் இருந்தன. அந்த சென்ற