அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும் தவாஅப் பிறப்புஈனும் வித்து. 361 எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் தொடர்ந்து வருகின்ற பிறவி என்னும் துன்பத்தைத் தருகின்ற வித்து அவா என்று கூறுவர் . என்கருத்து : வயசானவை உயிர் போறநேரத்திலை சேடம் இழுத்துக் கொண்டு இருப்பினம் . ஏதாவது முடியாத ஆசையள் இருக்கும் பாலை ஊத்திவிடுங்கோ எண்டு எங்கடை பெரிசுகள் சொல்லுவினம். மனிசனிலை இருக்குற ஆசையள் எண்ட விதை தானாம் திரும்பவும் ஒருத்தரை பிறக்கப்பண்ணும் எண்டு படிச்ச பெரியாக்கள் சொல்லுவினம். The wise declare, through all the days, to every living thing. That ceaseless round of birth from seed of strong desire doth spring. La cause génératrice de la naissance, pour tous les êtres, en tous les temps, est le désir. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை ; மற்றது வேண்டாமை வேண்ட வரும். 362 ஒருவன் ஏதாவது ஒன்றை விரும்புவதானால் பிறவாமையை விரும்பவேண்டும் . அது ஆசை அற்ற நிலையை (விரும்பாமை) விரும்பினால்த்தான் உண்டாகும் . என்கருத்து : ஒருத்தர் திரும்பி பிறக்க வேண்டாம் எண்ட நிலமைக்கு வாறதெண்டால் ஆசையை இல்லாமல் பண்ணவேணும். ஆனானப்பட்ட மு
எனது தளத்தில் வெளியாகும் ஆக்கங்களை எங்கும் பகிர்ந்து கொள்ளலாம்