Skip to main content

Posts

வேங்கையின் மைந்தன் -புதினம் -பாகம் 1 -22

க ண்ணகி என்ற கற்புக்கரசியின் கணவனைக் கள்வனென்று கூறித் தண்டனை விதித்த காரணத்தால், உண்மை உணர்ந்தபின், “யானோ அரசன்? யானே கள்வன்!” என்று அரற்றி, மறுகணமே மாண்டு மடிந்த நீதிமுறை வழுவாக நெடுஞ்செழியன் ஆண்ட மதுரைமாநகரத்தில் இராஜேந்திரரின் கட்டளைப்படி மாபெரும் புதுமாளிகை ஒன்று உருவாகத் தொடங்கியது. பாண்டிப் பகுதி மாதண்ட நாயகர் சேனாபதி கிருஷ்ணன் ராமன் தாமே முன்னின்று மாளிகை வேலைகளைக் கவனித்தார். இந்தச் செய்தியைத்தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு மூன்று பாண்டியர்களும் மக்கள் மனத்தில் வெறுப்பைக் கிளறிவிட முற்பட்டனர். ‘வட தேசத்துச் சோழமன்னர் தென்பாண்டி மக்களை அடிமைப் படுத்துவதற்காகப் புது மாளிகை எழுப்பி வருகிறார். பாண்டியர்களிடமிருந்து அதிகாரத்தைப் பறிப்பதற்காக அவர் செய்யும் சூழ்ச்சியின் முதல்படி இது!” தஞ்சைத் தலைநகரிலிருந்து அந்தப்பகுதியின் மாதண்ட நாயகர் ஈராயிரம் பல்லவரையரை மதுரைக்கு அழைத்திருந்தார் சேனாபதி கிருஷ்ணன்ராமன். இருவரும் கலந்து மக்களிடையே பரவி வரும் வெறுப்பு உணர்ச்சியைத் தடுப்பதற்காக ஆலோசனை செய்து கொண்டிருந்தனர். சோழப்பேரரசின் பழைய மாளிகையில் மந்திராலோசனை நடைபெற்றது. “பல்லவர...

வேங்கையின் மைந்தன் - புதினம்- பாகம் 1 -21

க ப்பலே கவிழ்ந்து விட்டதைப்போல் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு கப்பல்லகம் கல்யானைக்குப் பக்கத்தில் உட்கார்ந்து விட்டான் இளங்கோ. ரோகிணி கொண்டு வந்து மறைத்து வைத்து பேழையை அவள் எடுத்துக் கொண்டு போகவில்லை, அது அவனுக்கு நன்றாகத் தெரியும். வேறு யார் எடுத்திருப்பார்கள்? அப்போது கறுத்த போர்வை ஒன்றைப் போர்த்துக் கொண்டு ஓர் உருவம் அவனை நெருங்கி வந்து தன் போர்வையை மெதுவாக அகற்றியது. “தாத்தா!” “அட! நீ அப்போதிருந்து விழித்துக்கொண்டா இருக்கிறாய்? கண்கொட்டாமல் பலமாகக் காவல் காத்து வருகிறாய் போலிருக்கிறதே!” “தாத்தா! நீங்கள் உறங்கிப்போய் ஏமாந்துவிட்டீர்கள், நான் விழித்துக்கொண்டிருந்தும் ஏமாந்து விட்டேன்.” “எதற்கெடுத்தாலும் ஏன் இப்படி ஏமாற்றமென்று சொல்கிறாய்? இப்போது உனக்கு என்ன வந்து விட்டது? இளங்கோ! அந்தப் பெண்ணைப் பார்த்ததிலிருந்து உன்னுடைய மனமே ஒரு நிலையில் இல்லை. இப்படி ஏங்கிப் போய் உட்காரலாமா?” அவர் பேச்சை அவன் காதில்போட்டுக் கொள்ளாமல், “கைக்கு எட்டிய பொருளை கை நழுவ விட்டு விட்டேன் தாத்தா!” என்றான் பரிதாபமாக. “பாவம்! யாரை நழுவ விட்டாய்? ரோகணத்து இளவரசியையா?” வல்லவரையரின் கண்கள் அவ...

வேங்கையின் மைந்தன்-புதினம் -பாகம் 1-20

ரோ கணத்துப் பெண் எலி, தான் எந்த வளைக்குள்ளே புகுந்து வெளியேறப் பார்த்ததோ, அதே வளைக்குள் மீண்டும் நுழைந்து உள்ளே போக முயன்றது. “என் பின்னால் வாருங்கள்” என்று இளங்கோவை அழைத்துக் கொண்டே மதிலுக்கு அருகில் சென்று மண்டியிட்டு உட்கார்ந்தாள். “நூலேணியில் ஏறிப் போகலாம், வா! என்றான் இளங்கோ. “இந்த வழியில் போனால் என்ன?” “வேண்டாம்; நீ முன்னே சென்றாலும் தொல்லை; பின்னால் வந்தாலும் தொல்லை. முன்னே சென்றால் எங்காவது இருளுக்குள் மறைந்து விடுவாய். பின்னால் வருவதும் நிச்சய மில்லை. இந்த நேரத்தில் நீ ஓடுவதும் நான் பிடிப்பதுமாக இருந்தால் நன்றாக இருக்காது. பேசாமல் நான் சொல்வதைக்கேள்.” “இன்னும் என்னிடம் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லையே?” என்றாள் ரோகிணி. “எப்படி நம்புவது? நீ எங்கே புறப்பட்டாய் என்ற கேள்விக்கு இன்னும் உன்னிடமிருந்து மறுமொழி கிடைக்கவில்லை. உன் வரையில் நீ சாமர்த்தியமாக இருக்கும்போது என்னை மட்டும் ஏமாறச் சொல்லுகிறாயா?” “நீங்கள் ஒன்றும் என்னிடம் ஏமாற வேண்டாம்!” என்று சிணுங்கிக்கொண்டே அவனோடு சென்று அவன் சுட்டிக் காட்டிய நூலேணியில் மளமளவென்று ஏறினாள். இளங்கோவும் அவளைப் பின்பற்றினான். “ஆமாம்! நேர...

வேங்கையின் மைந்தன் - புதினம் - பாகம் 1-19

வி ண்மீன்கள் சிந்திய ஒளிக்கலவையினால் அமாவாசை இரவுகூட ஒருவகையில் அழகாகத்தான் இருந்தது. ஆனால் அந்த அழகைக் கண்டுகளிக்கக்கூடிய மனநிலையில் அப்போது வந்தியத்தேவர் இருக்கவில்லை. இருளில் அவர் கண்ட காட்சி முதலில் அவரைத் திடுக்கிட வைத்தது; பின்னர் வியப்புறச் செய்தது. அவருடைய கண்கள் பின்னோக்கி நகர்ந்தன. சந்தடியின்றி ஒரு மறைவிடத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு தம் கண்களுக்கும் செவிகளுக்கும் வேலை கொடுக்கத் தொடங்கினார். அங்கே நின்று கொண்டிருந்தவன் வேறு யாருமில்லை. அவருடைய அருமைப் பேரன் இளங்கோ. மூடப்பட்ட வாயிற்கதவுகள் மூடியபடி இருக்க, அவன் அங்கே எப்படி வந்திருப்பான் என்று ஒருகணம் யோசித்தார். சிறிது நேரத்துக்கு முன்பு மாடத்தின்மேல் எழுந்த சத்தம் அவர் நினைவுக்கு வந்தது; இப்போது அவருடைய தலைக்கு மேல் நூலேணி தொங்கிக் கொண்டிருந்தது. இரண்டுக்கும் முடிச்சுப்போட்டு நடந்ததைத் தெரிந்து கொண்டார் வந்தியத்தேவர். அந்தப் பெண்பிள்ளை பயத்தினால் எழுப்பிய கூச்சலைக் கேட்டவுடன் இளங்கோவும் முதலில் பயந்துவிட்டான். அவளது கீழுதட்டைத் தாங்கிக் கொண்டிருந்த அவனுடைய உடைவாளின் முனை நடுங்கியது. அவசரம் அவசரமாக அதை உறைக்குள் போட்டுக்...

பார்த்திபன் கனவு - புதினம் -77 - மூன்றாம் பாகம் - அத்தியாயம் 40 -கனவு நிறைவேறியது

நல்ல சுபயோக, சுப லக்கினத்தில் விக்கிரமன் சோழ நாட்டின் சுதந்திர அரசனாக முடிசூட்டப்பட்டான். அவ்விதமே சுப முகூர்த்தத்தில் விக்கிரமனுக்கும் குந்தவிக்கும் திருமணம் விமரிசையாக நடந்தேறியது. திருமணத்துக்குப் பிறகு விக்கிரமன் நரசிம்மப் பல்லவரிடம் சென்று அவருடைய ஆசியைக் கோரியபோது, சக்கரவர்த்தி, "குழந்தாய்! எக்காலத்திலும் பார்த்திப மகாராஜாவின் புதல்வன்' என்னும் பெருமைக்குப் பங்கமில்லாமல் நடந்துகொள்வாயாக, அதற்கு வேண்டிய மனோதிடத்தைப் பகவான் உனக்கு அருளட்டும்" என்று ஆசீர்வதித்தார். அவ்விதமே குந்தவி அருள்மொழித் தேவியை நமஸ்கரித்தபோது, "அம்மா! உனக்குச் சகல சௌபாக்கியங்களும் உண்டாகட்டும். 'நரசிம்ம சக்கரவர்த்தியின் திருமகள், பார்த்திப மகாராஜாவின் மருமகள்' என்னும் பெருமைக்கு உரியவளாக எப்போதும் நடந்துகொள்" என்று ஆசி கூறினாள். விக்கிரமனும், குந்தவியும் உறையூர் சிங்காதனத்தில் வீற்றிருந்த போது, சோழ வளநாடு எல்லாத் துறைகளிலும் செழித்தோங்கியது. மாதம் மும்மாரி பொழிந்து நிலங்கள் மூன்று போகம் விளைந்தன. கிராமந்தோறும் சிவாலயங்களும் விஷ்ணு ஆலயங்களும் நிர்மாணிக்கப்பட்டன. சிற்பம், சித்திர...

வேங்கையின் மைந்தன்-புதினம் -பாகம் 1-18

அ ந்தப்புரத்துப் பெண்களுக்காக அனுப்பப்பெற்ற உணவைப் பட்டமகிஷியும் பணிப்பெண்ணும் முதலில் உண்ண மறுத்துவிட்டார்கள். அவர்களைக் கட்டாயப்படுத்தி உண்ணச் சொல்லிவிட்டுத் தானும் தாராளமாக அதில் பங்கெடுத்துக் கொண்டாள் அந்த ஒன்றரைக் கண் அழகி. வந்தியத்தேவர் பட்டமகிஷியிடம் சென்று ஆறுதல் கூறி அச்சத்தை விலக்க முயன்றார். “எப்போதும்போல் தாங்கள் அந்தப்புரத்துக்குள் நடமாடலாம். தங்களுடைய ஏவலுக்கு ஆட்கள் வேண்டுமானால் தடையின்றிக் கேளுங்கள். அந்தப்புரத்தைச் சுற்றியிருந்த காவலை இப்போது அறவே அகற்றிவிட்டோம். தங்களுக்கு ஒரு குறையும் வராமல் பார்த்துக் கொள்கிறோம்” என்றார். பட்டமகிஷி மறுமொழி ஒன்றும் கூறவில்லை. ‘காவலை அறவே அகற்றிவிட்டோம்’ என்ற வல்லவரையரின் வார்த்தைகளை மாறுவேடத்திலிருந்த பெண்மணி உற்றுக் கேட்டுக் கொண்டாள். அவளுடைய சிரத்தையை வல்லவரையரும் புரிந்துகொண்டார். உரத்த குரலில் வீரர்களுக்கு உத்தரவுகள் பிறந்தன. “அந்தப்புரத்தை என்னிடம் விட்டு அரண்மனையின் பிரதான வாயில்களுக்குச் செல்லுங்கள்” என்று காவலர்களுக்குக் கட்டளையிட்டு, ‘இளங்கோ! நீயும் அரண்மனைக்குள் போய்விடு!” என்று கண்களால் ஏதோ சமிக்ஞை செய்தார் வந்தியதேவர்....

தோழர்களும் பெண்மையவாதிகளும், 'தராசில்' ஒரு நிறுப்பு- கோமகன்

ப தெய்வீகன் எழுதி தமிழினியில் வெளியாகிய 'தராசு' என்ற சிறுகதை வாசிக்கக் கிடைத்தது. சிறுகதை ஆரம்பத்தில் தெளிந்த நீரோடை போலப்பாய்ந்து பின்னர் வேகமெடுத்து தோழர்களையும் பெண்மையவாதிகளையும் புரட்டிப் புரட்டி அடித்து செல்கின்ற கதை, சில இடங்களில் எல்லோரும் பாவிக்கின்ற பொழுது இண்டர்நெட் எப்படி மெதுவாக சுழலுமோ அப்படி சுழலுகின்றது. லண்டனில் சத்தியராணியின் பெண்விடுதலை ஆர்வத்தை மேலும் மெருகேற்றி அங்கதத்தை இன்னும் தெளித்திருக்கலாமோ என்று தோன்றுகின்றது. அதே போல் வேழினிக்கும் பூட்டிக்குமான நெருக்கம் இரவில் ஓடுகின்ற நெட் போல் செல்கின்றது. பிரதான கதை சொல்லியான ஆறுமுகச்சாமிக்கு மெல்பேர்னில் வழக்கு போட்டு அவரை மெல்பேர்னுக்கு வழக்கு நடக்கும் இடத்துக்கு அழைக்கின்ற அளவுக்கு ஆறுமுகச்சாமி பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை என்றாலும், முன்பொருமுறை அவர் தனது சாமானை காட்டியதால் ஒரு குடும்பமே தொலைந்தது என்ற லொஜிக்கில் பெண்மையவாதம் கதையை தூக்கி நிமிர்த்துகின்றது. அதே போல் கதையின் முடிவாக, 'போகும்போது பனம்பாத்திய ஒருக்கா பாத்திட்டுப்போவமே?' என்ற முனை, ஆறுமுகச்சாமியை தூக்கி சாப்பிடுகின்றது. ஆக மொத்தத்தில...