‘மலைகள்’ இணைய இதழில் தோழர் லக்ஷ்மி சரவணகுமார் எழுதியுள்ள ‘ரகசியத்தின் அரூப நிழல்கள்’ என்ற சிறுகதை கலாச்சார அதிர்வுகளுக்கு பின்னால் அளவுகோல்களுடன் ஓடித்திரிகின்ற “பொறுப்புமிக்க சமூக காவலர்கள்” என்று சுயபிரகடனம் செய்துகொண்டவர்கள் அனைவரினது முகத்திலும் ஓங்கி அறைந்ததுபோல வெளிவந்திருக்கும் தரமான படைப்பு. ஆணின் உடல்வேட்கையை மாத்திரம் கலவியின் ஆதிக்கப்புள்ளியாக தொடர்ந்தும் பிரகடனப்படுத்திவருகின்ற தமிழ் சமூகத்தில் பெண்களின் இரகசியமான வேட்கைகளையும் அவற்றின் நம்பமுடியாத அந்தரங்க கொதிப்புக்களையும் தனது மொழி வழியாக விளையாடித்தீர்த்திருக்கிறார் லக்ஷ்மி. சமூகத்தில் வெளிப்படையாக பேசப்படவேண்டிய இதுபோன்ற விடயங்களும் – ஆபாசம், சபலம், கலாச்சர கலவரம் என்றெல்லாம் வெங்காயத்தனமாக தொடர்ந்தும் இரகசியம் பேணுவதன் அத்தனை மொண்ணைத்தனங்களும் – இந்த கதையில் பெரும் சேதத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. இதே ‘மலைகள்’ இணையத்தில் கடந்த வருடம் ‘இவளதிகாரம்” என்ற எனது சிறுகதைக்கு வெளிவந்த படுபாதகமான எதிர்வினைகளை இப்போது எண்ணி இன்புற்றிருக்க விரும்புகிறேன். பெண்ணின் உடல்வேட்கைக்காக வாடகை ஆண்களை அழைத்து இன்புற்றுக்
எனது தளத்தில் வெளியாகும் ஆக்கங்களை எங்கும் பகிர்ந்து கொள்ளலாம்