Skip to main content

Posts

சமகாலத்தில் திருநங்கைகளின் இருப்பு

அண்மையில் ஊடறு அமைப்பினர் கிழக்கிலங்கையில் ஏற்பாடு செய்திருக்கும் பெண்நிலை சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் நிகழ்வு தொடர்பான அழைப்பிதழ் பார்க்க கிடைத்தது. அதுதொடர்பான வாதப்பிரதி வாதங்களும் சமூகவலைத்தளங்களில் அவதானிக்க முடிந்தது. இதைப்பார்த்த பொழுது எனக்குச் சில எண்ணங்கள் தோன்றின. அவை சில வேளைகளில் பெண்ணியவாதிகளின் பார்வையிலோ அல்லது நிகழ்வின் ஏற்பாட்டு குழுவினரது பார்வையிலோ தவறாகத் தெரியலாம். இல்லாது போனால் சரியாகவும் படலாம். ஆனால் இந்தப்பகிர்வின் மூலம் ஒரு புதிய பார்வைகள் கிடைக்குமானால் சந்தோசமே! இல்லாதுவிடின் ஒரு பொல்லாப்பும் இல்லை. அதேவேளையில் இந்தப்பதிவை "ஆண்மையவாதச் சிந்தனைச்சிதறல்களின் தொடர்ச்சி" என்ற குடுவையினுள் பூட்டி வைக்காது பொதுவாக உரையாடுவது சிறந்தது என எண்ணுகின்றேன். எமது முன்னைய அரசர்கள் மற்றும் சக்கரவர்த்திகள் தங்கள் அந்தப்புரத்துக் காவலுக்கு ஆண் காவலாளிகளை நம்பாது அவர்கள்மீது சந்தேகக்கண் கொண்டு, அவர்களுக்குப் பதிலாகத் திருநங்கையரை காவலாளிகளாக வைத்திருந்தார்கள். இதிலிருந்து அன்றைய கால கட்டத்தில் திருநங்கையரின் சமூக இருப்பு எத்தகைய இழிநிலையில...

உச்சமும் உச்சுக்கொட்டல்களும்- அனோஜன் பாலகிருஷ்ணனின் எதிர்வினைக்கு மறுவினை

இந்தக் கிழமை அம்ருதாவில் வெளியாகிய தெய்வீகனின் "உச்சம்" சிறுகதைக்கு அனோஜன் பாலகிருஷ்ணன் எழுதிய விமர்சனம் வாசிக்கக் கிடைத்தது. அதை வாசித்த பொழுது எனது மனம் கிரகித்துக் கொண்ட விடயங்களைப் பகிரலாம் என எண்ணுகின்றேன்.     "ஓடுவது எப்பெடியென்று சொல்லும் முடவன் தான் விமர்சகன்" என்று இலக்கியப்பழமான லெ முருகபூபதி ஐயா எனக்களித்த நேர்காணலில் சமகாலத்து  விமர்சன முறமையை வரையறை செய்கின்றார்.  அனோஜனின் விமர்சனத்தை நான் வாசித்த பொழுது மேற்கண்ட வரையறையே எனது நினைவுக்கு வந்தது. பிரதியைப் பிரதியாகப் பாராது எழுதியவரின் ஊடாகப்  பிரதியைப் பார்த்து தனது மன அரிப்புக்களை உச்சுக் கொட்டியிருக்கின்றார் அனோஜன். ஒரு ஆக்கத்தை யாரும் விமர்சிக்கலாம். அதுதான் முறையுங்கூட. ஆனால் அதற்கொரு நேர்மைத்தன்மையும் அதிஉயர் மனப்பக்குவமும் வரவேண்டும். ஜெயமோகனின் முகாமில் இருந்து பேதி போவதானாலும் அதில் ஒரு ஒழுக்கம் இருத்தல் வேண்டும் என்று பயங்கரமாக நம்புகிறவர் அனோஜன். "உச்சம் " சிறுகதையில் எந்தவொரு சரியான விடயங்களும் இல்லை என்று எடுத்த எடுப்பிலேயே -  'உச்சம்’ சிறுகதை(?) எந்த இலக்கியக் கூ...

குப்பியும் ப தெய்வீகனும்

சற்று முன்னர்தான் ப தெய்வீகன் எழுதிய "சயனைடு" சிறுகதை வாசித்திருந்தேன். முதலில் அங்கு இங்கு என்று அலைய விடாத தெளிவான கதை நடைக்கு வாழ்த்துகள். சாதாரண வாழ்வில் தற்கொலைகளைப் பொலிடோல் குடித்தல், தூங்கி சாதல், என்ற குறியீடுகளிலேயே ஈழத்துச் சமுதாயம் இதுவரைக்கும் பார்த்து வந்துள்ளது. ஆனால் சயனைடு மூலமும் ஒரு சாதாரண வாழ்வில் இருப்பவர் தற்கொலை செய்யலாம் என்பதை சொல்லிநிற்கின்றது இந்த சிறுகதை. தற்கொலைகளுக்கான உத்திகளில் இதுவும் ஒன்று, இதில் என்ன புதுமை இருக்கின்றது என்று மேம்போக்காக யோசிக்கலாம். நாங்கள் கடந்துவந்த விடுதலைப் போராட்டத்தில் இந்த "சயனைடு"-வின் பார்வையும் அர்த்தப்படுத்தலும் வேறுவிதமாகவே ஒரு தற்கொலையை நியாயப்படுத்தி இருந்தன. ஏன் அந்த வேளையில் அது சரியாகவும் கூட இருந்தது. இந்த கலாச்சாரம் பொன் சிவகுமாரன் மூலம் வெளிச்சத்திற்கு வந்த பொழுது ஒரு பெரிய உளவியல் தாக்கத்தை சனங்களிடம் கொடுத்தது. ஆனால் அதே குறியீடு சாதாரண வாழ்வில் பிரயோகிக்கும் பொழுது பலத்த வாதப்பிரதிவாதங்களைக் கொண்டு வருகின்றது. சிறுகதையின் இயல்பே தனிய ஒரு தளத்தில் சுழராது பல்வேறு தளத்தில் சென்று...

றியாஸ் குரானாவின் இலக்கிய அறம்

இன்று றியாஸ் குரானாவின் "ஆளுமை - விருது" தொடர்பான ஒரு கட்டுரை வாசிக்க கிடைத்தது. இந்தக்கட்டுரை என்னைப்போன்றவர்களுக்கும் சரி இலக்கிய அறத்தில் நேர்பார்வை கொண்டவர்களுக்கும் ஒரு சில சங்கதிகளை சூசகமாக எடுத்துச் சொல்கின்றது. இந்தக்கட்டுரையின் பிரதான பேசுபொருள் கவிஞர் சோலைக்கிளி. எனக்குத்தெரிந்து பொதுவெளியில் கவிஞர் சோலைக்கிளிக்கும் றியாஸ் குரானாவுக்கும் இணக்கமான பார்வைகளோ சூழலோ இருந்ததில்லை. இருவருமே வெவ்வேறு பாதைகளில் பயணிக்கின்றவர்கள். இவர்களிடம் இணக்கப்பாடுகள் வருவதென்பது எண்ணிப்பார்க்க முடியாத விடயம். ஆனால் இலக்கியச்செயற்பாட்டில் நேர்மைத்தன்மையும் பண்பட்ட உள்ளமும் இருந்தால் எதுவும் சாத்தியமே என்பதற்கு இந்தக்கட்டுரை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பொதுவெளியில் ஒருவரைப்பற்றி எமக்கு விமர்சனங்கள் இருக்கலாம். அதில் தவறில்லை. ஆனால் இலக்கியம் தொடர்பாக முக்கியமான விடயங்களின் பொழுது காய்த்தல் உவத்தல் இல்லாத எமது பார்வைகளை ஒருவர் மீது வைக்கின்ற உளப்பாங்கு இப்பொழுது இலக்கியவாதிகளிடம் அருகி வரும் வேளையில் றியாஸ் குரானா போன்ற இளம் வயதுடைய இலக்கிய செயற்பாட்டாளர்களிடம் அது மூர்க்கம்...

"போரியலை தளமாகக் கொண்டிருக்கும் படைப்பாளர்களை மக்கள் சந்தேகக் கண்ணுடனேயே நோக்குகின்றனர் "- நேர்காணல் - கோமகன்.

வடபகுதியில் கோப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட கோமகன், தனது இளமைக்காலத்திலேயே நாட்டின் சூழ்நிலைகளினால் பிரான்சுக்குப் புலம்பெயர்ந்து நீண்டகாலமாக அங்கு வசித்து வருகின்றார். தமிழ் எழுத்துப் பரப்பில் வேகமாக வளர்ந்துவரும் படைப்பாளிகளில் கோமகனும் ஒருவர். சட்டகங்களில் குறுக்காத இவரது படைப்புகள் எளிமையான சொல்லாடல்களுடன் பலதரப்பு வாசகர்களை வசப்படுத்துவது இவரது பெரிய பலமாகும். தமிழ் எழுத்துப்பரப்புக்குக் கோமகனின் "தனிக்கதை " என்ற சிறுகதை தொகுதி கடந்த வருடம் இவரால் கிடைக்கப் பெற்றுள்ளது . அடுத்த கட்ட முயற்சியாக தான் இதுவரை செய்த நேர்காணல்களை தொகுப்பாக்கி ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். இவர் பிரான்சில் இருந்து வெளியாகும் "நடு" இலக்கிய மின் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராவார். அண்மையில் தாயகம் வந்திருந்த கோமகனை எமது பத்திரிகை குழு வாசகர்களுக்காக நேர்காணல் செய்திருந்தது . 000000000000000000000000000000 இலக்கியத் துறையில் தங்களின் ஈடுபாடு தொடர்பாக ….....? சிறுவயது முதல் வாசிப்புப் பழக்கம் இருந்தது. மூத்த சகோதரர் வடகோவை வரதராஜன் ஓர் எழுத்தாளராக இருந்...

நான் எறிந்த கேள்வியும் நீங்கள் பிடித்த பதிலும்-இறுதி பாகம்

01 மிகப்பழங்கால தமிழ் நாகரித்தை அறிய உதவும் நூல் எது ? தொல்காப்பியம். 02 சமுத்திர குப்தனால் சிறை பிடிக்கப்பட்ட பல்லவ அரசன் யார் ? விஷ்ணுகோபன். 03 முறையான எழுத்து முறை எதில் உருவானது? சுமேரிய நாகரீகம். 04 சாக்கிய முனி என அழைக்கப்பட்டவர் யார்? கௌதமபுத்தர். 05 கவுடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரம் எத்தனை பகுதிகளைக் கொண்டது? 15 பகுதிகள். 00000000000000000000000 01 நந்திக்கலம்பகதின் பாட்டுடைத் தலைவன் யார் ? 3ஆம் நந்திவர்மன். 02 தமிழின் மறுமலர்ச்சிக்காலம் எது ? 19 ஆம் நூற்றாண்டு. 03 நூலகத்தின் மறு பெயர்கள் எவை ? ஏடகம், சுவடியகம் ,பண்டாரம் . 04 தீக்கோழி மணிக்கு எத்தனை கிலோ மீற்றர் வேகத்தில் ஒடக்கூடியது? 74 கி .மீ. 05 எறும்புகளில் எத்தனை வகைகள் உள்ளன ? 14000 வகைகள். 0000000000000000000000000000 01 குறுந் தொகையை யார்தொகுத்தார் ? பூரிக்கோ. 02 இலக்கியத்தில் “கவரி வீசியகாவலன் ” எனப் போற்றப்படும் மன்னன் யார்? சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை. 03 ஒருவருக்கு “பிரச்னை ” என்கின்றோம் .ப...

நான் எறிந்த கேள்வியும் நீங்கள் பிடித்த பதிலும்-பாகம் 2

01 உவமைத் தொகை என்றால் என்ன ? உதாரணம் தருக . உவமைக்கும் உவமேயத்திற்கு இடையே போன்ற “போல”, “போன்ற”, “அன்ன” என்ற உவம உருபுகள் மறைந்து வருவது உவமைத்தொகையாகும். உதாரணம் மதிமுகம் , கனிவாய் 02 உரிச்சொல் என்றால் என்ன ? உதாரணம் தருக . உரிச்சொல் பெயருக்கும் வினைக்கும் அடையாக வருவதோடு அவற்றின் பண்பையும் விளக்கி நிற்பதால் (அவற்றிற்குரிய சொல்லாக இருப்பதால்) உரிச்சொல் . உதாரணம் : நனி பேதை , சாலத் தின்றான் , கடி மலர் . 03 சைவ வைணவ சமயங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியங்கொண்ட நூலாக கருதப்படுவது எது? முக்கூடற்பள்ளு. 04 புத்த மதத்திற்கும் சமண மதத்திற்குமான பொதுவான அம்சம் யாது? அ .வேதங்களின் கருத்துக்களை மறுத்தது ஆ. சடங்குகளை மறுத்தது இ. விலங்குகள் கொல்லப்படுவதை எதிர்த்தது 05 நாலறிவு கொண்ட உயிரினங்கள் எவை ? நண்டு, தும்பி, வண்டு. 0000000000000000000000 01 ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவியை கொண்ட நாடு எது ? சுவிட்சர்லாந்து. 02 உலகிலேயே மிகவும் வெப்பமான இடம் இடம் எது ? சாவுப் பள்ளத்தாக்கு கலிபோர்னியா ( Death Valley, California. A remarkable ...