அண்மையில் ஊடறு அமைப்பினர் கிழக்கிலங்கையில் ஏற்பாடு செய்திருக்கும் பெண்நிலை சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் நிகழ்வு தொடர்பான அழைப்பிதழ் பார்க்க கிடைத்தது. அதுதொடர்பான வாதப்பிரதி வாதங்களும் சமூகவலைத்தளங்களில் அவதானிக்க முடிந்தது. இதைப்பார்த்த பொழுது எனக்குச் சில எண்ணங்கள் தோன்றின. அவை சில வேளைகளில் பெண்ணியவாதிகளின் பார்வையிலோ அல்லது நிகழ்வின் ஏற்பாட்டு குழுவினரது பார்வையிலோ தவறாகத் தெரியலாம். இல்லாது போனால் சரியாகவும் படலாம். ஆனால் இந்தப்பகிர்வின் மூலம் ஒரு புதிய பார்வைகள் கிடைக்குமானால் சந்தோசமே! இல்லாதுவிடின் ஒரு பொல்லாப்பும் இல்லை. அதேவேளையில் இந்தப்பதிவை "ஆண்மையவாதச் சிந்தனைச்சிதறல்களின் தொடர்ச்சி" என்ற குடுவையினுள் பூட்டி வைக்காது பொதுவாக உரையாடுவது சிறந்தது என எண்ணுகின்றேன். எமது முன்னைய அரசர்கள் மற்றும் சக்கரவர்த்திகள் தங்கள் அந்தப்புரத்துக் காவலுக்கு ஆண் காவலாளிகளை நம்பாது அவர்கள்மீது சந்தேகக்கண் கொண்டு, அவர்களுக்குப் பதிலாகத் திருநங்கையரை காவலாளிகளாக வைத்திருந்தார்கள். இதிலிருந்து அன்றைய கால கட்டத்தில் திருநங்கையரின் சமூக இருப்பு எத்தகைய இழிநிலையில...
எனது தளத்தில் வெளியாகும் ஆக்கங்களை எங்கும் பகிர்ந்து கொள்ளலாம்