Skip to main content

Posts

நான் எறிந்த கேள்வியும் நீங்கள் பிடித்த பதிலும்-இறுதி பாகம்

01 மிகப்பழங்கால தமிழ் நாகரித்தை அறிய உதவும் நூல் எது ? தொல்காப்பியம். 02 சமுத்திர குப்தனால் சிறை பிடிக்கப்பட்ட பல்லவ அரசன் யார் ? விஷ்ணுகோபன். 03 முறையான எழுத்து முறை எதில் உருவானது? சுமேரிய நாகரீகம். 04 சாக்கிய முனி என அழைக்கப்பட்டவர் யார்? கௌதமபுத்தர். 05 கவுடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரம் எத்தனை பகுதிகளைக் கொண்டது? 15 பகுதிகள். 00000000000000000000000 01 நந்திக்கலம்பகதின் பாட்டுடைத் தலைவன் யார் ? 3ஆம் நந்திவர்மன். 02 தமிழின் மறுமலர்ச்சிக்காலம் எது ? 19 ஆம் நூற்றாண்டு. 03 நூலகத்தின் மறு பெயர்கள் எவை ? ஏடகம், சுவடியகம் ,பண்டாரம் . 04 தீக்கோழி மணிக்கு எத்தனை கிலோ மீற்றர் வேகத்தில் ஒடக்கூடியது? 74 கி .மீ. 05 எறும்புகளில் எத்தனை வகைகள் உள்ளன ? 14000 வகைகள். 0000000000000000000000000000 01 குறுந் தொகையை யார்தொகுத்தார் ? பூரிக்கோ. 02 இலக்கியத்தில் “கவரி வீசியகாவலன் ” எனப் போற்றப்படும் மன்னன் யார்? சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை. 03 ஒருவருக்கு “பிரச்னை ” என்கின்றோம் .ப...

நான் எறிந்த கேள்வியும் நீங்கள் பிடித்த பதிலும்-பாகம் 2

01 உவமைத் தொகை என்றால் என்ன ? உதாரணம் தருக . உவமைக்கும் உவமேயத்திற்கு இடையே போன்ற “போல”, “போன்ற”, “அன்ன” என்ற உவம உருபுகள் மறைந்து வருவது உவமைத்தொகையாகும். உதாரணம் மதிமுகம் , கனிவாய் 02 உரிச்சொல் என்றால் என்ன ? உதாரணம் தருக . உரிச்சொல் பெயருக்கும் வினைக்கும் அடையாக வருவதோடு அவற்றின் பண்பையும் விளக்கி நிற்பதால் (அவற்றிற்குரிய சொல்லாக இருப்பதால்) உரிச்சொல் . உதாரணம் : நனி பேதை , சாலத் தின்றான் , கடி மலர் . 03 சைவ வைணவ சமயங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியங்கொண்ட நூலாக கருதப்படுவது எது? முக்கூடற்பள்ளு. 04 புத்த மதத்திற்கும் சமண மதத்திற்குமான பொதுவான அம்சம் யாது? அ .வேதங்களின் கருத்துக்களை மறுத்தது ஆ. சடங்குகளை மறுத்தது இ. விலங்குகள் கொல்லப்படுவதை எதிர்த்தது 05 நாலறிவு கொண்ட உயிரினங்கள் எவை ? நண்டு, தும்பி, வண்டு. 0000000000000000000000 01 ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவியை கொண்ட நாடு எது ? சுவிட்சர்லாந்து. 02 உலகிலேயே மிகவும் வெப்பமான இடம் இடம் எது ? சாவுப் பள்ளத்தாக்கு கலிபோர்னியா ( Death Valley, California. A remarkable ...

ஈஸி ஜெட்டில் ஈசியில்லா பயணம்

போன மாசம் வியாழன் மாறினது மற்றாக்களுக்கு நல்லதோ கூடாதோ எண்டது எனக்கு சிவசத்தியமாய் தெரியாது. ஆனால் நான் இந்த ஒருநாள் லண்டன் பயணத்தாலை எனக்கு வந்த குளறுபடியளை உங்களுக்கு சொல்லுறன் கண்டியளோ. ஒருநாள் என்ரை மனுசி எனக்கு சொன்னா ‘இஞ்சரப்பா நியூசிலாந்திலை இருந்து என்ரை கூட்டாளி குடும்பம் லண்டனிலை இருக்கிற அவையின்ரை தமக்கை வீட்டை வருகினமாம். எங்களை லண்டனிலை வந்து பாக்க சொல்லி கேக்கினம். ஒருக்கால் போட்டு வருவமே ‘எண்டு கேட்டுது. சரி என்னட்டை பெரிசாய் ஒண்டும் கேட்டு அரியண்டம் பண்ணாத மனிசி கேக்கிறாதாலை சரி போவம் எண்டு சொன்னன். நான் பேந்து வேலை பிராக்கிலை உதுகளையெல்லாம் அயத்து போனன். ஒருநாள் நான் வேலை முடிஞ்சு தும்பாகி போய் வர , என்ரை மனுசி கையிலை லண்டனுக்கு போக ரிக்கற்ரோடை நிண்டா. என்ன ஏது எண்டு வாங்கி பாத்தன். அந்த ரிக்கற் எனக்கும் சேத்து மனுசி ஈசி ஜெட்டிலை போறதாய் இருந்துது. எனக்கு கண்டியளோ நாடி விழுந்து போச்சுது . ஏற்கனவே என்ரை கூட்டாளி ஒருத்தன் இந்த ஈசி ஜெட்டிலை போய் நொந்து நூடில்ஸ் ஆன கதை மண்டையிலை லைட் அடிச்சுது .நான் மனுசியை கேட்டன் ‘கட்டாயம் இதிலை போகவேணுமோ ? யூறோ ஸ்ராறாலை போகேலாதோ...

ஆக்காட்டி

திருமணம் செய்த தம்பதிகளுக்கும் காதலர்களுக்கும் இனிமையாக இருந்துவந்த தொலைபேசி நான் புலம் பெயர்ந்த நாட்களில் இருந்து எனக்கு ஒவ்வாமையாகவே இருந்து வந்திருக்கின்றது. அன்பு பாசம் என்பதைத் தவிர்த்து இழப்புகளையும் சோகங்களையும் காசுப்பிரச்சனைகளையும் அமிலமாக அது என் நெஞ்சில் இறக்கியிருக்கின்றது. எப்பொழுதும் நான் என்னை மறந்த ஆழ்ந்த நித்திரையின் அதிகாலைப் பொழுதுகளிலேயே அது என் அறையின் வாசல் கதவை தட்டியிருக்கின்றது. 90ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியின் ஒருநாளான இன்றும் அப்படித்தான் காலை மூன்று மணிக்கு அலார்ம் அடிக்க முதலே தொலைபேசி ஒலித்தது. அரக்கப்பரக்கப் பதறி எழுந்து ‘யாரை இழக்கப்போகின்றேன் அல்லது யாருக்குப் பஞ்சாயத்து பண்ணப்போகின்றேன்’ என்ற சிந்தனையோட்டத்தில் “ஹலோ ” என்று அனுங்கியவாறே ரிசீவரை காதுக்கு அருகில் வைத்தேன். ” டேய் மச்சான் கதிர் ! நான் குமணன். கொட்டிவாறிலை (Côte d’Ivoire) இருந்து கதைக்கிறன். என்னை உங்கை அனுப்பி விடுறாங்கள். நீதான் வந்து என்னை கூட்டி கொண்டு போகவேணும். நான் உனக்கு பேந்து எடுக்கிறான்”. என்று சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திராமல் தொலைபேசியின் எதிர்முனை அடங்கியது. ...

சுந்தரி

வேம்படியில் வாழ்ந்த வந்த தங்க வேலாயுதத்தாருக்கும் தெய்வானைபிள்ளைக்கும் மூத்த மகளாக பிறந்த கனக சுந்தரிக்கு நண்டும் சிண்டுமாக நான்கு தம்பிகளும் மூன்று சகோதரிகளும் இருந்தார்கள். தங்க வேலாயுதம் ஆசிரியர் தொழிலுடன் பதினைந்து பட்டி தோட்டமும் செய்துவந்ததால் அந்தப் பெரிய குடும்பம் ஓரளவு வசதியாக இருந்து வந்தாலும், யுத்தத்தின் கோரப்பிடியினுள் சிக்கிய அந்தக் குடும்பம் படிப்படியாக அதன் வளங்களை இழக்கத் தொடங்கியது. தங்க வேலாயுதத்துக்கு பிள்ளைகளின் எதிர்காலம் அவரை பயமுறுத்தியது. கனக சுந்தரி பல்கலைக்கழகப் பட்டப் படிப்பும் முடித்து கலியாண வயதையும் எட்டி விட்டாள். அவளது அழகில் கடவுள் எதுவித வஞ்சகமும் செய்யாத காரணத்தால் கனகசுந்தரியின் அழகில் மயங்காத பெடியளே வேம்படியில் இல்லை என்றே சொல்லலாம். எது எப்படியோ அவளுக்குப் பேசிவந்த கலியாணங்கள் எல்லாம் அவளது செவ்வாய் குற்றத்தினால் தட்டுப்பட்டுக் கொண்டே வந்தன. இது தெய்வானைப்பிள்ளைக்கு மனதளவில் பெரிய தாக்கமாக இருந்தது. தெய்வானைபிள்ளை பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டாள். நோய்வாய் பட்ட தாய்க்குப் பிறகு கனகசுந்தரியிடமே குடும்ப பொறுப்புகள் வந்து சேர்ந்தன. கோழி ...

நான் எறிந்த கேள்வியும் நீங்கள் பிடித்த பதிலும் -பாகம் 01

01 கார் திருட்டில் முதலிடம் வகிக்கும் நாடு எது ? அமெரிக்கா 02. சிரிக்க வைக்கும் வாயு எது ? நைட்ரஸ் ஒக்ஸைட் 03. உலகின் முதல் எலெக்ட்ரானிக் கணணியின் பெயர் என்ன? இனியாக் 04. உலகின் மிகப் பழமையான மியூசியம் எது ? ஒஸ்மோலியன் 05. முதலில் விமானத்தை கடத்தியவர்கள் யார் ? சீனர்கள் (1948) 00000000000000000000000 01 தங்கத்தின் வேதியல் பெயர் என்ன ? அயூரியம். 02 பழமையான உரோமின் காலண்டர் எத்தனை மாதங்களை கொண்டுள்ளது ? 10 மாதம் 0 3 கால்பந்தாட்டம் எப்போது ஒலிம்பிக்கால் ஏற்றுக்கொள்ளப்பட்டது ? 1900 04 கோழி குஞ்சு பொரிக்க எத்தனை நாட்கள் அடைகாக்கும் ? 21 நாட்கள் 05 தொழுநோய் ஏற்படுவதற்கு காரணமான கிருமி எது ? மைக்கோபக்டீரிம் என்னும் பக்ரீறியா 0000000000000000000000000 01 பேருந்து போக்குவரத்து முதலில் எந்த நாட்டில் தொடங்கப்பட்டது ? பிரான்ஸ் 02 "அரசியல் “ என்ற நூலை எழுதியவர் யார் ? அரிஸ்டாட்டில் 03 நட்சத்திரங்களில் ஒளிமிக்கது எது ? சிரியஸ் 04 அணுவை பிளந்து காட்டியவர் ? ரூதர் போர்டு 0...