Skip to main content

Posts

Showing posts with the label நடுதல் - மெய்யியல்.

மனமே மலர்க -பாகம் 15.

பேசத்தெரிந்து கொள்ளுங்கள். உரையாடல் ஒரு கலை. இனிமையாகவும் சுவையாகவும் பிறரைக் கவரும் வண்ணம் உரையாடுவது ஒரு வித்தை. அந்தக் கலை கைவரச்சிலவழிகள் : *உரையாடலின்போது உங்களைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருக்காதீர்கள். உங்கள் உடல்நிலை, உங்கள் பிரச்சினைகள் , தொந்தரவுகள் இவை பற்றிப் பேசாதீர்கள். அதனால் எந்தப் பயனும் இல்லை. கேட்பவர்க்கும் போர். *நீங்களே பேச்சைக் குத்தகை எடுக்காதீர்கள். நீங்கள் நகைச் சுவையாகப் பேசுபவராக இருக்கலாம். ஆனால் உங்கள் பேச்சைக் கெட்டு முதலில் விழுந்து விழுந்து சிரிப்பவர்கள் கூட கொஞ்ச நேரத்தில் சலிப்படைவார்கள். நாம் பேசக் கொஞ்சம் இடம் கொடுக்க மாட்டேன் என்கிறாரே என்று எரிச்சல் படுவார்கள். எனவே மற்றவர்களும் பேசுவதற்கு வசதியாக இடைவெளி கொடுங்கள். *குறுக்கே விழுந்து மறுக்காதீர்கள். 'நீங்கள் சொல்வது தப்பு,'என்று சொல்லும் போதே உரையாடல் செத்து விடுகிறது. அதைக் காட்டிலும் பேசுபவரின் பேச்சில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால் அதை உறுதிப் படுத்துங்கள். *திடீரென்று ஒரு விசயத்திலிருந்து இன்னொரு விசயத்திற்குத் தாவாதீர்கள். அடுத்தவர் பேசும்போது அரை வினாட

மனமே மலர்க - பாகம் 08.

அஞ்ஞானம் யாராவது யாரையாவது குறை கூறினாலே போதும், உங்கள் மனம் மகிழ்ச்சியில் கூத்தாடுகிறது. யாராவது யாரையாவது புகழ்ந்து பேசினால், உங்களுக்கு துக்கம் மேலிடுகிறது. இது எதனால்? மற்றவர்களின் குறைபாட்டைக் கேட்கும்போதெல்லாம் உன் உள்ளத்திலே ஒரு அகங்காரம் தோன்றுகிறது. ''நாம் அப்படிப்பட்டவர்கள் அல்ல. நாம் அவனை விட மேலானவர்தான்'' என்ற எண்ணம் ஏற்படுகிறது. யாராவது பாராட்டப்படும்போது உங்களுக்குத் தோன்றுகிறது, ''நம்மை விட அவனை மேலானவனாக இருக்கிறானே!''எனவே உங்களுக்கு வேதனை ஏற்படுகிறது. நம்மைவிட சிறந்தவர்கள் யாரும் இருக்க முடியாதல்லவா! ஆகவே நீங்கள் பிறர் மீதுள்ள நிந்தனையை எவ்வித தடையுமின்றி உடனே ஏற்றுக் கொள்கிறீர்கள். ஆனால் பாராட்டப்படும்போது விவாதம் புரிகிறீர்கள். 'இவன் ஒரு பாவி,' என்று யாரையாவது சொன்னால் நீங்கள் ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் என்று காரணம் எல்லாம் கேட்டுக் கொண்டிருப்பதில்லை. உடனே அந்த செய்தியை இயன்றவரை அடுத்த காதுகளுக்கு தெரியப் படுத்தி விடுகிறீர்கள். அதில் கொஞ்சம் சொந்த சரக்கை சேர்த்துக் கொள்ளவும் தயங்குவதில்லை. நீங்கள் அறிந்ததைவிட

மனமே மலர்க- பாகம் 07.

திருமணத்துக்கு முன் யோசியுங்கள் அது மனநோயாளிகளின் மருத்துவமணை . தயாள குணம் படைத்த செல்வந்தர் ஒருவர், தன் பிறந்த தினத்தை மருத்துவமணை நோயாளிகளுக்கு உணவளித்துக் கொண்டாடுவதற்காக ஒரு நாள் அங்கு வருகிறார். மருத்துவமணையின் ஊழியர்கள் அவரை உள்ளே அழைத்துக் கொண்டு போகிறhர்கள். வழியில், மின் விசிறியின் மேலிருந்து ஒரு நோயாளி... லைலா, லைலா என்று கத்தியபடி தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறான் . ஒன்றும் இல்லை, இவன் லைலா என்ற பெண்ணை உயிருக்குயிராகக் காதலித்தான். அவள் இவனை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவனைத் திருமணம் செய்துகொண்டதால், மனநோயாளியாகி விட்டான் என்று அங்கிருந்த ஊழியர்கள் சொல்கிறார்கள். செல்வந்தர் அவனைத் தாண்டிக் கொண்டு வேறு ஓர் அறைக்குப் போகிறார். அங்கேயும் ஒருவன், லைலா, லைலா, என்று அழுதபடி அங்கிருந்த மின் விசிறியில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றான். இவனுக்கு என்ன? ஊழியர்கள் சொன்னார்கள் இவன்தான் அந்த லைலாவைக் கல்யாணம் செய்து கொண்டவன் . நகைச்சுவைக்காகப் புனையப்பட்ட கதைதான் இது என்றாலும் இன்று சிலருடைய காதல் - திருமண வாழ்க்கை ஏன் திருப்தி தரும் வகையில் இருப்பத

மனமே மலர்க - பாகம் 01.

அதிசயம் பான்கெய் என்ற ஜென் மாஸ்டர். தன்னுடைய சிஷ்யர்களுக்குப் போதனை செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கே ஒரு பூசாரி வந்தார். உள்ளூர்க் கோவிலில் வழிபாடு நடத்துகிறவர் அவர். புத்தர்மீதோ ஜென்மீதோ அவருக்கு நம்பிக்கை இல்லை. ஆகவே, அவர் புத்தரை இழிவுபடுத்திப் பேசினார். ‘ஜென் என்பது சுத்தப் பைத்தியக்காரத்தனம்’ என்றார். பான்கெய் அவரைக் கண்டிக்கவோ மறுக்கவோ இல்லை. ‘ஐயா, உங்களுக்கு என்ன பிரச்னை?’ என்றார் அமைதியாக. ’எங்களுடைய சாமி என்னென்ன அதிசயங்கள் செய்திருக்கிறது, தெரியுமா?’ ‘தெரியவில்லை, சொல்லுங்கள்!’ அவர் நீர்மேல் நடப்பார், தீயை அள்ளி விழுங்குவார், அவர் ஒரு சொடக்குப் போட்டால் தங்கம் கொட்டும், நடனம் ஆடினால் பூமியே நடுங்கும்!’ என்றார் பூசாரி. ‘இதுபோல் எந்த அதிசயமும் செய்யாத உங்கள் புத்தரையோ மற்ற ஜென் துறவிகளையோ கடவுள் என்று எப்படி என்னால் ஏற்றுக்கொள்ளமுடியும்?’ ‘நீங்கள் நினைப்பது சரிதான் ஐயா’ என்றார் பான்கெய். ‘ஆனால், எங்களால் வேறொரு பெரிய அதிசயத்தைச் செய்யமுடியும்.’ ‘அதென்ன?’ அமைதியாகச் சொன்னார் பான்கெய். ‘யாராவது தப்புச் செய்தால், எங்களுக்குத்

மனமே மலர்க -பாகம் - 05.

குரைக்காதே! நாய் ஒன்று தன இன நாய்களுக்கு போதனை செய்து வந்தது. கடவுள் தன வடிவில் நாயைப் படைத்தார் என்று அது சொல்வதுண்டு. எல்லா நாய்களுக்கும் அதன் மீது ஒரு குருவுக்குள்ள மரியாதை உண்டு. அந்த நாய் மற்ற நாய்களிடம் எப்போதும் குரைக்கக் கூடாது என்று போதனை செய்து வந்தது. எந்த நாய் குரைப்பதைக் கண்டாலும் அந்த இடத்திலேயே அது குரைப்பது ஒரு பயனற்ற செயல் என்று போதிக்க ஆரம்பித்துவிடும். இந்த போதனை செய்பவர்களே இப்படித்தான்! எது ஒன்றை தவிர்க்க முடியாதோ அதைத்தான் செய்யக்கூடாது என்று வலியுறுத்துவார்கள். மற்ற நாய்களும் குரைப்பதைத் தவிர்க்க முயற்சித்தும் அவற்றால் முடியவில்லை. எனவே குற்ற உணர்வுடன் அவை ஒருநாள் ஒரு இடத்தில் கூடியபோது ஒரு நாய் , ''நமது குரு சொல்வது உண்மை. குரைப்பது ஒரு தேவையற்ற செயல் அது நம் மரியாதையைக் குறைக்கிறது. எனவே நாம் நாளை ஒரு நாள் எங்காவது ஒரு மூலையில் முடங்கிக் கிடந்தாவது நாளை முழுவதும் குரைக்காமல் இருப்போம்,'' என்று கூற அனைத்து நாய்களும் அதை ஆமோதித்தன. மறுநாள் சொன்னதுபோல நாய்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொண்டு குரைக்காமல் இருந்தன. அப்போது அந்