அண்மையில் வெளியாகியிருந்த மறுத்தோடி இணைய சிற்றிதழ் வாசிக்க முடிந்தது. ஆக்கங்கள் பிரமிக்க வைக்கின்றன. ஆசிரியர் குழுமம் தீயாக வேலை செய்திருக்கின்றார்கள் என்றே எண்ணத்தோன்றுகின்றது. எந்த ஒரு பொருளுக்கும் கவர்ச்சி முக்கியம். அப்பொழுதுதான் அது வெளியே துருத்திக் கொண்டிருக்கும். இது இணைய சிற்றிதழுக்கும் பொருந்தும். அதில் இருக்கின்ற பொருள் தரமானதாக இருந்தாலும் அது இருக்கின்ற இடம் அழுகுணி இடமாக இருந்தால் யாரும் அதனை திரும்பியும் பார்க்க மாட்டார்கள். பின்வரும் விடயங்களை ஆசிரியர் குழுமம் உடனடியாகக் கவனத்தில் எடுக்க வேண்டும்.
தளவடிவமைப்பு இன்னும் மெருகேற்றப்படல் வேண்டும். அப்பொழுதுதான் அது பொதுவெளியில் நிலைத்து நிற்க முடியும். தமிழ் பதிப்பில் வருகின்ற மறுத்தோடிக்கு தலையங்கங்கள் ஆங்கிலத்தில் இருக்கிறது. இது முரண்நகையாக உள்ளது. தளத்தில் இருக்கின்ற எழுத்துருக்களை விசேட பூதக்கண்ணாடி கொண்டு பார்க்க வேண்டியுள்ளது. இவைகள் எல்லாம் சிறிய விடயங்களே. ஆனால் அவை வாசகருக்கு முக்கியமான விடயம். எழுத்துருவில் கோளாறு என்றால் வாசகர் மறுத்தோடியை மறுத்தோடிவிடுவர் . ஆனால் மூன்று மொழிகளிலும் கிழக்கில் இருந்து வெளியாகின்ற மறுத்தோடி இணைய சிற்றிதழைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.வாழ்த்துகள் .
கோமகன்
இணைப்பு :
http://marutthodi.com
Comments
Post a Comment