Skip to main content

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும்-அறிவியல்-பாகம்-01-10




01 செங்காந்தள் அல்லது கார்திகைப்பூ – glory lily – Gloriosa superba

செங்காந்தள் அல்லது காந்தள் ஐந்து அல்லது ஆறு சிற்றினங்களை கொண்டுள்ளது. இது கோல்ச்சிசாசியியே (Colchicaceae) எனும் தாவர குடும்பத்தைச் சார்ந்தது. ஒற்றை விதையிலைத் தாவரங்களில் வகையினைத் சேர்ந்ததாகும். இது வெப்ப மண்டல ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவில் காணப்படுகிறது. இவை இயற்கையாக ஆப்ரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மலேசியாவின் சில பகுதிகளில் காணப்படுகிறது. கார்த்திகைத் திங்களில் முகிழ்விடும் இம்மலர்க் கொடி இலங்கை, இந்தியா, சீனா, மலாக்கா தீபகற்பம், அயனமண்டல ஆபிரிக்கா முதலான பகுதிகளிலும் காணப்படும். இது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் காட்சியளிக்கும். அனைத்துப் பகுதிகளும் கோல்சிசினே (colchicine) எனும் அல்கலோயட்கள் நிறைந்தது. அதனால் இவற்றை உட்கொண்டால் மரணம் சம்பவிக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இதன் வேர் மிகுந்த நச்சுத் தன்மை கொண்டது. இதன் இலை மற்றும் தண்டு நம்மேல் பட்டால் தோலில் அரிப்பு உண்டாகும். இது கார்த்திகைபூ என்றும் அறியப்படுகிறது. கண்வலிக்கிழங்கு எனும் கிழங்கு வகை மூலிகையானது காந்தள் மலர்ச் செடியிலிருந்துப் பெறப்படுகிறது. அச்செடியின் வேர்ப்பகுதியே கண்வலிக்கிழங்கு ஆகும். இக்கிழங்கு ஆனது கலைப்பைக் கிழங்கு, வெண்தோன்றிக் கிழங்கு, கார்த்திகைக் கிழங்கு என்று பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இக்கிழங்கில் உள்ள கோல்ச்சிசினும் சூப்பர்பைனும் மருத்துவக் கூறுகளாகும். இதன் பல்வேறு மருத்துவ பயன்பாடுகள் இந்தியாவில் இந்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

கார்த்திகைச் செடியின் கிழங்கு ஆயுர்வேதம், யுனானி முறைகளில் பலவிதமாகப் பயன்படுகின்றது. இக்கிழங்கில் காணப்படும் நச்சுப் பொருளான கொல்சிசைனே வைத்திய முறைகளில் பயன்படுகின்றது. மேற்கு வைத்தியத்திலும் கொல்சிசைன் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இரு வைத்திய முறைகளிலும் கொல்சிசைசின் பயன்பாடு வித்தியாசப்படுகின்றது. * தோலைப்பற்றிய ஒட்டுண்ணி நோய்களுக்கு இதனைப் பற்றுப் போடுவார்கள். தேள் கடிக்கும் இதனைப் இழைத்துப் போடுவதுண்டு.

வாதம், மூட்டுவலி, தொழுநோய் குணமாக்கப் பயன்படுவதுடன் பேதி, பால்வினை நோய் வெண்குட்டம் ஆகியவற்றிக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. பிரசவ வலியைத் தூண்டும் மருந்தாகவும், ஆற்றலூட்டும் குடிப்பானாகவும் இருப்பதுடன், தலையில் வரும் பேன்களை ஒழிக்கவும் பயன்படுகிறது.

சுபர்பின் மற்றும் கோல்சிசின் ஆகிய மருந்துப் பொருட்கள் இதில்கிடைக்கின்றன. குடற்புழுக்கள், வயிற்று உபாதைகள் மற்றும் தேள், பாம்புக்கடிகளுக்கு நல்லதொரு மருந்து. இக்கொடியினைக் காட்டிலும் விதைகளில் தான் அதிக அளவு கோல்சிசின் மருந்து காணப்படுவதால் விதைகள் மிகுதியான ஏற்றுமதி மதிப்பைப் பெற்றுள்ளன. அண்மை காலத்தில் ‘கோல்சிசின்’ மூலப் பொருளைக்காட்டிலும் இரண்டு மடங்கு வீரியமான ‘கோல்ச்சிகோஸைடு’ கண்டு பிடிக்கப்பட்டு மூட்டு வலி மருத்துவத்தில் மிகவும் பயன் படுத்தப்படுகிறது. இது ஐரோப்பிய நாடுகளில் கௌட் எனும் மூட்டுவலி நிவாரணத்திற்குப் பெரிதும் பயன்படுகிறது. மிக நுண்ணிய படிகங்களாக யூரிக் அமிலம் மூட்டுகளில் தங்குவதால் இந்த மூட்டுவலி வருவதாகவும், இம்மருந்து அவ்வாறு யூரிக் அமிலம் மிக நுண்ணிய படிகங்களாகத் தங்காவண்ணம் பாதுகாக்கிறது. இதனால் தொடர்ந்து மூட்டுவலி உண்டாகும் நிலைமையினை இது முறித்து விடுவதாகக் கூறப்படுகிறது. இக்கிழங்கால் பாம்பின் நஞ்சு, தலைவலி, கழுத்துவலி, குட்டம், வயிற்று வலி, சன்னி, கரப்பான் முதலியன நீங்கும் எனப்படுகிறது.

இந்த செங்கந்தள் பல பெயர்களில் அழைக்கப் படுகின்றது அவையாவன

அக்கினிசலம்

கலப்பை

இலாங்கிலி

தலைச்சுருளி

பற்றி

கோடல் அல்லது கோடை

கார்த்திகைப் பூ

தோன்றி

வெண்தோண்டி

வெண்காந்தள் அல்லது செங்காந்தள்

http://ta.wikipedia….rg/wiki/காந்தள்

0000000000000000000000000000000000

02 அகில் மரம் – Agarwood – Aquilaria


அகில் மரத்துக்கு இலக்கியத்தில் ஓர் தனிச் சிறப்பு உண்டு சிறுபாணாற்றுப்படை, ஆசிரியர் – நல்லூர் நத்தத்தனார் நல்லியக்கோடனின் புகழையும் மாட்சியையும் பின்வருமாறு சொல்கின்றார்

……………………..மென்தோள்
துகில்அணி அல்குல் துளங்குஇயல் மகளிர்
அகில் உண விரித்த அம்மென் கூந்தலின்
மணிமயில் கலாபம் மஞ்சுஇடைப் பரப்பி
துணிமழை தவழும் துயல்கழை நெடுங்கோட்டு
எறிந்து உரும்இறந்து ஏற்றுஅருஞ் சென்னிக்
குறிஞ்சிக் கோமான், கொய்தளிர்க் கண்ணி
செல்இசை நிலைஇய பண்பின்,
நல்லியக்கோடனை நயந்தனிர் செலினே. [262-269]

கருத்துரை :

மென்மையான தோளும், ஆடையணிந்த இடையும் அசைந்தாடும் நடையுமுடைய மகளிர், அகில் புகை ஊட்டுவதற்காக விரித்துப் போட்டிருக்கும் கூந்தலைப் போன்று, நீலமணி போன்ற நிறமுடைய மயில் தனது தோகையை விரித்து ஆடுவதற்குக் காரணமான, மழை மேகங்கள், வெண்மேகங்களுக்கிடையே பரவித் தவழ்ந்து செல்லும். இம்மழை மேகங்கள் மூங்கில்கள் விளையும் உயர்ந்த சிகரங்களை முட்டி இடி இடித்து வீழ்ந்து ஏறிச் செல்லுகின்ற பெருமை பொருந்திய மலையுச்சியினையுடைய மலை நாட்டுக்குத் தலைவன். நல்லியக்கோடன் அப்போது பறித்த இளந்தளிரினால் கட்டப்பட்ட மாலையினை அணிந்தவன். புகழ் நிலைத்து நிற்றற்குரிய பண்புகளால் சிறந்தவன். இத்தகைய நல்லியக்கோடனை விரும்பி நீவீர் சென்றால், (அன்றெ பரிசில் கொடுத்து அனுப்பி வைப்பான்) (அடி 261ஐ இயைத்துப் பொருள் கொள்க)

அகில் பட்டைகள் வாசனைத் திரவியங்கள் செய்வதற்கும் பாவிக்கப் படுகின்றது . இந்த மரம் தென்கிழக்காசிய நாடுகளில் அதிகமாகக் காணப் படுகின்றது . மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள்

http://en.wikipedia.org/wiki/Agarwood

000000000000000000000000000000

03 அக்காரக்கிழங்கு கன்று – Beetroot -Beta vulgaris


பீற்றூட் என்று பலராலும் அறியப்பட்ட இந்தக் கிழங்கு வகைச் செடி வட , மத்திய அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைப் பிறப்பிடமாகக் கொண்டது . இதில் பிவரும் தாதுப் பொருட்கள் அடங்கியுள்ளன .

ஹாபோவைத்றேட் 9.96 g

சர்க்கரை 7.96 g

நார்சத்து 2.0 g

கொழுப்பு 18 g

புறோட்டீன் 1.68 g

விற்றமின் A equiv. 2 μg (0%)

தைமின் (vit. B1) .031 mg (3%)

Riboflavin (vit. B2) .027 mg (2%)

Niacin (vit. B3) .331 mg (2%)

Pantothenic acid (B5) .145 mg (3%)

விற்றமின் B6 .067 mg (5%)

Folate (vit. B9) 80 μg (20%)

விற்றமின் C 3.6 mg (4%)

கல்சியம் 16 mg (2%)

அயர்ன் .79 mg (6%)

மக்னீசியம் 23 mg (6%)

பொஸ்பரஸ் 38 mg (5%)

பொட்டாசியம் 305 mg (6%)

சோடியம் 77 mg (5%)

Zinc .35 mg (4%)

மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் :

http://en.wikipedia.org/wiki/Beetroot

000000000000000000000000000000

04 அதவம் , இற்றி அல்லது அத்தி மரம் – fig tree – Ficus


அத்தி மரமென்று பலராலும் அறியப்பட்ட இந்த அதவம் அல்லது இற்றி மரத்தில் , நாட்டு அத்தி (COUNTRY FIG), வெள்ளை அத்தி (GULAR FIG), நல்ல அத்தி (FICUS GLOMERATA CLUSTER FIG) என பல வகை அத்தி மரங்கள் உண்டு. இம்மரம் சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது. மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. அத்தி இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும். காய்கள் சற்று நீளமான முட்டை வடிவில் தண்டிலும், கிளைகளிலும் அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் தோன்றும். பெரிய நெல்லிக்காய் அளவில் உருண்டையாக சிறிது பச்சை நிறத்துடன் இருக்கும். காய் பழுத்த பின்பு கொய்யாப்பழத்தைப் போல் வெளிறிய மஞ்சள் நிறமாக மாறிவிடும். பழங்கள் தானே கீழே உதிர்ந்து விழுந்து விடும். அத்திப் பழம் நல்ல மணத்துடன் இருந்தாலும், அறுத்துப் பார்த்தால் உள்ளே மெல்லிய பூச்சிகள், புழுக்கள் இருக்கும். பொதுவாக பதப்படுத்தாமல் உண்ண முடியாது.

இந்த மரத்தின் இலை, பால், பழம் அனைத்தும் மருத்துவ குணம் மிக்கது. உலர வைத்துப் பொடி செயப்பட்ட இலைகள் பித்தம், பித்தத்தால் வரும் நோய்களைக் குணமாக்க வல்லது. காயங்களில் வடியும் பால் இரத்தப்போக்கை உடனே நிறுத்தும். அழுகிய புண்களைக் கழுவ லோஷனாகப் பயன்படுத்தலாம். வாய்ப்புண், ஈறுகள், சீழ்பிடித்தல் போன்ற உபாதைகளுக்கு அத்தி இலைகள் சிறந்தது. இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்த நீரால் வாய் கொப்பளிக்க உடன் பலன் கிடைக்கும். மரப்பட்டையை இரவில் உலர வைத்து, காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய், மூட்டு வலிகள் குணப்படும்.

இந்த அதவம் அல்லது இற்றி மரம் இலக்கியத்திலும் இடம்பெற்றதாகும். உதாரணாமாக குறுந்தொகையில் கபிலர், தலைவிக்கும் அவள் தோழிக்கும் இடையிலான கருத்தாடலைப் பின்வருமாறு சொல்கின்றார் ………

புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர்
வரை இழி அருவியின் தோன்றும் நாடன்
தீதில் நெஞ்சத்துக் கிளவி நம் வயின்
வந்தன்று வாழி தோழி நாமும்
நெய் பெய் தீயின் எதிர் கொண்டு
தான் மணந்தனையம் என விடுகம் தூதே.

மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் :

http://ta.wikipedia…./அத்தி_(தாவரம்)

http://en.wikipedia.org/wiki/Ficus

000000000000000000000000000000

05 அலரி மரம் – Nerium oleander


அலரி மரம் மருத்துவ குணங்களை உடையது .அலரி ஐந்தடி முதல் பத்தடி வரை உயரமாக வளரும் . இந்த மெல்லிய செடியில் கண்ணைக் கவரும் வாசமில்லாத அழகான பூக்கள் இருக்கும். சிவப்பு, மஞ்சள், வெள்ளை ஆகிய மூன்று நிறங்களில் கொத்து, கொத்தாக வளர்ந்து இருக்கும். இந்த மூன்று நிறங்களிலும் ஒரே வகையான குணம் காணப்படுகிறது. ஆயினும், சிவப்பு நிற அலரி அதிகப் பயனுள்ளதாக இருக்கின்றது. அலரி வேரை பச்சைத் தண்ணீரில் அரைத்து மூலக் கட்டிகளின் மீது பூசி, அதன்பின் மூலக்கட்டிகளின் மீது படும்படி புகைப் பிடித்தால் மூலக்கட்டிகள் சுருங்கிவிடுகின்றன. சிலருக்கு ரத்தம் கெட்டுவிடுவதால் தோல் கரடு முரடாக மாட்டுத் தோல் போல் காணப்படும். இதற்கு அலரிச் செடியின் பட்டையை அரைத்துத் தினசரி தோல் மீது பூசுவதால் தோல் மென்மையாகிவிடும். இலைகளைக் கொதிக்க வைத்து அரைத்து எண்ணையில் கலந்து மூட்டு வலியின் மீது பூசினால் வலி குறைகிறது.

மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் :

http://en.wikipedia.org/wiki/Nerium

http://ta.wikipedia….a.org/wiki/அரளி


00000000000000000000000000000000

06 செவ் அகத்தி மரம் ( swamp pea – Sesbania grandiflora


அகத்தி என்னும் சிறிய மரம் கெட்டித்தன்மை இல்லாதது, இந்த அகத்தி மரம் செவ் அகத்தி மஞ்சள் அகத்தி என இரண்டு வகையாகப் பிரிக்கப்படும் . இந்தமரம் சுமார் 6. மீட்டரிலிருந்து 10 மீட்டர் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் 15 முதல் 30 செ.மீ. வரை நீளமுடையவை. இந்த மரம் இந்தியாவிலோ தென்ஆசியாவிலோ தோன்றியிருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். அகத்தி மரம் பிற மரங்களைப் போல் அதிகம் கிளைகள் கிளைத்து வளருவதில்லை. அகத்தி இலைகள் கூட்டிலைகள் ஆகும். ஒவ்வொரு கூட்டிலையிலும் 40 முதல் 60 இலைகள் வரை இருக்கும். பொதுவாக வெப்பமானதும் அதிக ஈரப்பதம் நிறைந்த இடங்களிலும் வளர்கின்றது.

அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக சித்த மருத்துவம் கூறுகிறது. இம்மரத்தின் பல பகுதிகள் மூலிகையாகப் பயன்படுகின்றது. சிறப்பாக இதன் இலை தமிழ்நாடு உட்பட தென்னிந்திய சமையலில் அகத்திக்கீரை மற்றும் அகத்தியின் பூவும் சமைத்து உண்ணப்படுகிறது.

அகத்தியின் மருத்துவச் சிறப்பைப் பின்வருமாறு கூறலாம்…..

“மருந்திடுதல் போகுங்காண் வன்கிரந்தி – வாய்வாம்
திருந்த அசனம் செரிக்கும் – வருந்தச்
சகத்திலெழு பித்தமது சாந்தியாம் நாளும்
அகத்தியிலை தின்னு மவர்க்கு” .

அகத்திக் கீரையில் 8.4 விழுக்காடு புரதமும் 1.4 விழுக்காடு கொழுப்பும், 3.1 விழுக்காடு தாது உப்புகளும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். மேலும் அகத்திக்கீரையில் மாவுச் சத்து, இரும்புச் சத்து, வைட்டமின்(உயிர்ச்சத்து) ஏ ஆகியவையும் உள்ளன.

அகத்தி கோழி, மாடு போன்ற கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது.

அகத்தி இலையிலிருந்து ஒரு வகைத் தைலம் தயாரிக்கப்படுகிறது.

அகத்தியின் பட்டையும் வேரும் மருந்துப்பொருள்களாகப் பயன்படுகிறது.

அகத்தி மரக்குச்சிகள் கூரை வேய்வதற்குப் பயன்படுகிறது.

அகத்தியின் மிலாரிலிருந்தும் பட்டையிலிருந்தும் உரித்தெடுக்கப்படும் ஒரு வகை நார் மீன் பிடி வலைகளுக்குப் பயன்ப்டுகிறது.

அகத்திப் பட்டையின் சாறு சிரங்குக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

வேர் மூட்டுவலிக்கு மருந்தாக அரைத்துப் பயன்படுத்தப்படுகிறது.

வெண்மை நிற அகத்தி மரம் பொம்மை செய்யவும் வெடிமருந்து செய்யவும் பயன் படுகிறது.

வெற்றிலைக் கொடிக்கால்களில் வெற்றிலைக் கொடி படரவும் மிளகுத்தோட்டட்தில் மிளகுக்கொடி படரவும் அகத்தி மரம் பயன்படுகிறது.

http://en.wikipedia….nia_grandiflora

http://ta.wikipedia….org/wiki/அகத்தி

00000000000000000000000000000

07 அரச மரம் – Ficus religiosa – sacred fig


அரச மரம் பெரிதாக வளரக்கூடிய ஒரு தாவரமாகும். இது அண்ணளவாக 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது . அரசமரத்தின் அடி விட்டம் 3 மீட்டர் வரை வளரக்கூடியது. இது இந்தியா, இலங்கை, தென்மேற்குச் சீனா, இந்தோசீனா மற்றும் கிழக்கு வியட்நாம் போன்ற நாடுகளில் அதிகம் காணப்படுகின்றது .

இதன் இலை நீண்ட கூரிய முனையுடன் கூடிய இதய வடிவமாகவும் அமைந்திருக்கும் . இந்த இலை 10 தொடக்கம் 17 சென்ரி மீட்டர் வரை நீளமானதாகவும், 8 தொடக்கம் 12 சென்ரி மீட்டர்கள் வரை அகலம் கொண்டதாகவும் காணப்படும் .

000000000000000000000000000

8 அதிமதுரம் -liquorice – Glycyrrhiza glabra


அதிமதுரம் (liquorice) ஒரு மருத்துவ மூலிகை ஆகும் . அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் இதன் அடையாளம். கண் நோய்கள், எலும்பு நோய்கள், மஞ்சள் காமாலை, இருமல், சளி, தலைவலி, புண் போன்றவற்றைக் குணப்படுத்தக்கூடியது அதிமதுர வேர். காக்கை வலிப்பு, மூக்கில் ரத்தம் வடிதல், படர்தாமரை, விக்கல், அசதி, தாகம் போன்றவற்றையும் கட்டுப்படுத்தும். நரம்புத் தளர்ச்சி போக்கவும், ஆண்மைக் குறைவுப் பிரச்னைக்கும் அதிமதுரம் அருமருந்தாகப் பயன்படும்.

http://en.wikipedia.org/wiki/Liquorice

0000000000000000000000000000

09 ஆடாதோடை-பாவட்டை அல்லது வாசை – Malabar nut Justicia adhatoda


ஆடாதோடை ஒரு மருத்துவ மூலிகையாகும். இச்செடி இந்திய முழுவதிலும் ஏராளமாக பயிராகின்றது. இந்த மரத்தின் இலை, பூ, பட்டை, வேர் என்பன மருத்துவ குணமிக்கவை இதன் சுவை கைப்புதன்மையாக இருக்கும் இதன் மருத்துவ குணங்களாக சளியை அகற்றும் நுண்புழு கொல்லியாக செயல்படும் சிறுநீரைப் பெருக்கும் வலியை நீக்கும் இந்த மரத்தின் முக்கிய வேதிப் பொருட்களாக வாசிசின் , வசாக்கின், வாசினால், வாசினோன், ஆடாதோடின் , வைட்டமின் சி , கேலக்டோஸ் போன்றன காணப்படுகின்றன .இந்த மூலிகையினால் இருமல், வாந்தி, விக்கல், சன்னி, சுரம், வயிறு தொடர்பான நோய்கள் போன்றவற்றைகே கட்டுப் படுத்தலாம் .

“ஆடாதோடைப் பன்ன மையறுக்கும் வாதமுதற்
கோடாகோ டிச்சுரத்தின் கோதொழிக்கும்- நாடின
மிகுத்தெ ழுந்தசன்னி பதின்மூன்றும் விலக்கும்
அகத்துநோய் போக்கு மறி.”

(அகத்தியர் குணவாகடம்)

இந்த மூலிகையைப் பின்வருமாறு பயன்படுத்தினால் ,

சளி, இருமல், தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கு மருந்தாகும். இலையை மட்டும் எடுத்து நீர் விட்டு கொதிக்கவைத்து, வடித்து தேன் சேர்த்து கொடுக்க ஆஸ்த்துமா, இருமல், சுரம் போன்ற நோய் தீரும். இவைகளுடன் திப்பிலி,ஏலம்,அதிமதுரம்,தாளிசப்பத்திரி ஆகியவற்றுடன் குடிநீரிட்டு கொடுக்க இருமல்,இளைப்பு,சுரம் தீரும். இலையை உலர்த்தி சுருட்டாக சுருட்டி புகை பிடிக்க இரைப்பு(ஆஸ்த்துமா) தீரும். இதன் வேருடன் கண்டங்கத்திரி வேர் சேர்த்து குடிநீரிலிட்டு அத்துடன் திப்பிலி பொடி சேர்த்துக் கொடுக்க இருமல் தீரும். இலையின் சாறு தனித்துக் கொடுக்க கழிச்சல் தீரும். ஆடாதோடை இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, காமாலை போன்றவை குணமாகும்.

இந்தச் செடியை பாவட்டை அல்லது வாசை என்றும் அழைப்பார்கள் .http://en.wikipedia….sticia_adhatoda

00000000000000000000000000000

10 அன்னமுன்னா மரம் அல்லது சீத்தா பழமரம் – custard apple, Annona – Annona squamosa


சீத்தா பழம் அல்லது அன்னமுன்னா அல்லது அன்னமின்னா , வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும். இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும். பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, தைவானில் இப்பழம் புத்தர் தலை என்றழைக்கப்படுகிறது. ஈழத் தமிழரால் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது.

பெரும்பாலான அனோனா சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மிதவெப்பப் பகுதிகளிலேயே நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப் பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28 F வெப்பத்தில் கூட உயிர் வாழும். சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை ஈனக்கூடியது. காய்கள் மரத்தில் பழுக்கா என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாக இருக்கும் போது உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம். சிறிதளவு அழுத்தம் தந்தால் பழத்தின் உருவம் சிதையும் நிலை வரும்போது, பழம் உண்ணத்தக்க சுவை நிலையை எட்டிவிட்டது என அறியலாம். சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.

சீதளப் பழம் என்பதே சீத்தாப் பழம் என மருவியது. சீதளம் என்பது குளிர்ச்சியைக் குறிக்கிறது.

http://en.wikipedia….Annona_squamosa

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம