Skip to main content

Posts

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் – அறிவியல் – பாகம் 03 , 21 – 30

21 ஆனை நெருஞ்சி அல்லது பெரு நெருஞ்சி-Pedalium murex இது பற்றிய மேலதிக தகவலுக்கு இங்கே செல்லுங்கள்: http://en.wikipedia…./Pedalium_murex 00000000000000000000000000 22 இலந்தை – jujube – Ziziphus jujuba இலந்தை (Ziziphus jujuba) என்பது மூவடுக்கிதழிகளைச் சேர்ந்த ஒரு தாவரம். இதன் தாயகம் இந்தியா / தமிழ் நாடு மற்றும் சீனா ஆகும் . வெப்பம் அதிகமுள்ள இடங்களில் வளரும் தன்மை கொண்ட இந்த மரம் 9 மீட்டர் உயரம் வரை கூட வளரும். உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம். 100 கிராம் இலந்தையில் கிடைக்கும் கலோரி 74% மாவுப் பொருள் 17 %, புரதம் 0.8 % மற்றும் தாது உப்புகள், இரும்புசத்தும் உள்ளது.இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் இதைச் சாப்பிடலாம். இலந்தைப் பழம் போல அதன் இலையிலும் அதிக மருத்துவப் பயன்பாடுகள் கிடைக்கின்றன. இந்த இலைகளை மை போல் அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம் பெற முடியும். உடலின் மேற்பகுதியில் ஏற்படும் கோடைக்காலக் கட்டிகள் மீத

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

“சமகால ஈழத்துப் படைப்புகள்” ஒரு நோக்கு

பத்திரிகை குறிப்பை வைத்து நாவல் / சிறுகதை எழுதலாமா என்ற கேள்விக்கு சர்வதேச எழுத்தாளர்களை எல்லாம் துணைக்கு அழைக்கின்றார் “கானல் தேசம் ” நுலாசிரியர் நடேசன். பத்திரிகை குறிப்பை வைத்து படைப்பை எழுதலாம் தவறில்லை. ஆனால் ஆதாரமான பத்திரிகை குறிப்பை எப்படியாக / எத்தகைய பார்வையில் தனது புனைவினுடாக அந்தப்படைப்புக்கு நூலாசிரியர் மாற்றியமைத்தார் என்பதை வைத்தே அந்தப்படைப்பு கேள்விக்குட்படுத்தப்படுகின்றது. இதை இன்னும் சற்று விரிவாக்கப் பார்க்கப்போனால் பத்திரிகையை ஆதாரமாக வைத்து எழுதுவதற்கு இலக்கியம் ஒன்றும் மொய் விருந்து அல்ல. மாறாகப் படைப்பு நேர்மையும் புனைவுண்மையும் முதலில் படைப்பாளிக்குள் வரவேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் தாங்கள் அரசியலுக்கு ஏற்றவாறு இறக்குமதி செய்துகொண்ட ‘ரொபி’க் கதைகளையெல்லாம் இலக்கியத்துக்குள் கொண்டுவந்து அதனை உமிந்துகொண்டிருப்பது ஏறக்குறைய ஒரு சுயமைதுனம் போன்றதே. அதற்கு பத்திரிகை குறிப்பை ஆதாரமாகப் பிடிப்பது எப்படியென்றால் வைரமுத்து ஒரு முறை கூறியதுபோல ‘குத்துவிளக்கில் சிகரெட் பற்றியதுபோலானது’. எங்கே ஈழத்து படைப்புகள் எல்லாம் இந்தவகையான சட்டகங்களை நோக்கிச் செல்கின்றனவோ

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும்-அறிவியல்-பாகம்-01-10

01 செங்காந்தள் அல்லது கார்திகைப்பூ – glory lily – Gloriosa superba செங்காந்தள் அல்லது காந்தள் ஐந்து அல்லது ஆறு சிற்றினங்களை கொண்டுள்ளது. இது கோல்ச்சிசாசியியே (Colchicaceae) எனும் தாவர குடும்பத்தைச் சார்ந்தது. ஒற்றை விதையிலைத் தாவரங்களில் வகையினைத் சேர்ந்ததாகும். இது வெப்ப மண்டல ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவில் காணப்படுகிறது. இவை இயற்கையாக ஆப்ரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மலேசியாவின் சில பகுதிகளில் காணப்படுகிறது. கார்த்திகைத் திங்களில் முகிழ்விடும் இம்மலர்க் கொடி இலங்கை, இந்தியா, சீனா, மலாக்கா தீபகற்பம், அயனமண்டல ஆபிரிக்கா முதலான பகுதிகளிலும் காணப்படும். இது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் காட்சியளிக்கும். அனைத்துப் பகுதிகளும் கோல்சிசினே (colchicine) எனும் அல்கலோயட்கள் நிறைந்தது. அதனால் இவற்றை உட்கொண்டால் மரணம் சம்பவிக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இதன் வேர் மிகுந்த நச்சுத் தன்மை கொண்டது. இதன் இலை மற்றும் தண்டு நம்மேல் பட்டால் தோலில் அரிப்பு உண்டாகும். இது கார்த்திகைபூ என்றும் அறியப்படுகிறது. கண்வலிக