Skip to main content

Posts

கோமகனின் "தனிக்கதை " மதிப்பீடு

கோமகனின் தனிக்கதை சிறுகதைத்தொகுப்பில் பதினாறு சிறுகதைகள் அடங்குகின்றன. ஈழத்து வட்டார வழக்குடன் வழமையான ஈழத்து எழுத்தாளர்களின் கற்பனை நுட்பத்துடன் கோமகனின் தனிக்கதைகள் இடம் பிடித்துள்ளது. பெரும்பாலும் எழுத்தென்பது வாழ்வின் சிக்கலானபோக்கை, அதன் தடுமாற்றங்களை இயல்பான போக்குடன் வாசகனுக்கு கொண்டு செல்வதினை  அடிப்படையாக கொண்டிருக்கவேண்டும். வாசகனின் வழமையான எதிர்பார்ப்புக்களை தகர்த்து நுட்பமாக பயணிக்கவேண்டும். நல்ல கதையென்பது படித்துமுடித்த பிற்பாடு வாசகனை அக்கதை சிறிதுநேரம் யோசிக்கவைக்கும். அதன் பாதிப்புக்கள் வாசகனைவிட்டு நீங்காமல் சிலநேரம் தொந்தரவு கொடுக்கவேண்டும். கோமகனின் இத் தொகுப்பில் சிலசிறுகதைகள் அதற்கான தன்மையை கொண்டிருகின்றன. வழமையாக ஈழஎழுத்தாளர்கள் எழுதும் கதையின் களங்கள் ஒரேமாதிரியான தன்மையில் இருக்கும். இந்திய இராணுவத்தின் வருகைக்காலம், புலம்பெயர்வுக்காலம், புலம்பெயர்வின்பின் அவர்களின் வருகைக்காலம் என்ற சட்டத்தில் பொருத்தக்கூடிய வகையிலிருக்கும். கோமகனின் கதைகளும் ஏறக்குறைய அவ்வாறான ஒத்தியல்பு தன்மைகளுடன் பொருந்துகின்றன. சுயபுனைவியல்(Auto fiction) தன்மையுடன் சிலகதைகளும்

மழைக்காலக் குறிப்புகள்

பட உதவி : கருணாகரன் மழைக்காலம் என்பது ஓர் சமூகத்தின் வசந்தகாலம். இந்த மழைக்காலத்திலேயே ஓர் சமூகம் தமது இருத்தலுக்கு வேண்டிய அனைத்து வேலைகளையும் செய்யும். விவசாய நிலங்கள் மழையினால் மீண்டும் எழுச்சி பெறும். மாந்தர்களிடையே காதல், காமம், ஊடல், கூடல், இனப்பெருக்கம் என்று உச்சம் பெறும் காலமே மழைக்காலம். அதுவும் கோடை வெய்யில் காலத்தில் வெக்கை வாட்டி எடுக்க, திடீரென வானம் கருமையாகி சிறிய துளிகளாகத் தொடங்கி சோவென்று மழைத்துளிகள் நிலத்தை அணைக்கும் அடைமழையை யாருமே விரும்பாமல் இருக்க மாட்டார்கள். மழையின் ஆரம்பத்தில் மூக்கை அடைக்கும் புழுதிவாசமும், மழை விட்டதன் பின்னர் வரும் தவளைகளின் ஒலியும், ஈசல்களின் படையெடுப்பும், நுளம்புக்கு போடும் வேப்பங்கொட்டைப் புகையும், நிலத்திலே வெள்ளம் வடிந்து அந்த ஈரலிப்பான மண்ணில் நெளியும் சரக்கட்டைகளும், நாக்கிளிப் புழுக்களும், கம்பளிப் பூச்சிகழும், என்று கோடை காலத்தின் இறுதி பகுதிகளில் இந்த உணர்வுகள் அத்தனையையுமே கொண்டு வரும் மழைக்காலத்தை யாருமே விரும்பாதவர்கள் இருக்கமாட்டார்கள். இப்படிப்பட்ட ஓர் மழைக்கால வேளையொன்றில் வேலணையூர் தாஸ் எழுதிய "மழைக்காலக் குறிப

கருத்துச்சுதந்திரம் -Freedom of speech- liberté d'expression

நகரின் மத்தியில் ஓர் பிரபல்யமான சீன உணவகம் இருந்தது. அதன் சிறப்பம்சம் என்னவென்றால் உடனுக்குடன் உயிர் மீனை பிடித்து வெட்டி விதம் விதமான மீன் கறிகளை நாவுக்கு ருசியாக அதன் தலைமை சமையல்காறர் செய்து கொடுப்பார். இதனால் எப்பொழுதும் அந்த சீன உணவகத்தில் வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதும். அந்த சீன உணவகத்தில் அழகான ஓர் பெரிய விசாலமான மீன் தொட்டி இருந்தது. அதில் பலவகையான மீன்கள் தங்களுக்குள் கதைத்தும் பேசியும் மகிழ்வாக ஓடித்திரிந்தன. அந்த மீன்களுக்கு இந்த உலகமானது மிக மிகப்பிரமாண்டமானது என்றதோர் மிகப்பெரிய எண்ணம் இருந்தது.  அதில் இருந்த ஓர் மீன் வடிவாக மீன் தொட்டியை சுற்றி விட்டு வந்து மற்ற நண்பர்களுக்கு சொன்னது, "நீங்கள் எண்ணுவது பிழை. இந்த மீன்தொட்டிதான் எங்கள் உலகம். இடையில் ஓர் கண்ணாடி இருக்கின்றது" என்று சொன்னது. மீனின் இந்தப் பதிலால் சில மீன்கள் கடும் கோபமுற்று அந்த மீனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கின அந்த மீனும் மனம் தளராமல் " நண்பர்களே நீங்களும் ஒருமுறை நான் சொன்னதை பரிசோதனை செய்துபாருங்கள் அப்பொழுது நான் சொன்னதன் உண்மை தெரியும்" என்று சொன்னது. அந்த நேரம் மீன் த

சுவைத்(தேன்)-பாகம் 03

வ. ஐ .செ ஜெயபாலன் கவிதைகள்  01  பூவால் குருவி நெஞ்சுக்குள் தொலையாதிருந்து ஒரு சிற்றாறாய் ஊருகின்ற என் முதல் காதல் பெட்டை ஒரு வழியாய் உன்சேதி அறிந்தேனடி. பேய்கள் கிழித்தெரிக்கும் எம்முடைய தேசத்தில் வன்னிக் கிராமத் தெருவொன்றில் வெள்ளிச் சருகை மினுங்கும் தலையும் பொன் சருகை கலையா முகமும் இன்னும் ஓயாமல் முந்தானை திருத்த எழும் கையுமாய் போனாயாம் உந்தன் பூப்படைந்த பெண்ணோடு போட்டிச் சிறு நடையில். அது என்ன போட்டி. காவலிலே உன் அன்னை தோற்றதறிவாய். அவளிடத்தில் உன்பாட்டி தோற்றதையும் நீ அறிவாய். என்றாலும் வாழ்வின் சுழற் தடத்தில் இன்று நீ அன்னை. நீ தோற்க்க வாழ்வு மேலும் ஒரு வெற்றி பெறும். ஆனாலும் நீ எனக்கு இன்னும் சிறுக்கிதான். இன்னும் விடாயும் அச்சமுமாய் மிரண்டடிக்கும் குளக்கரையின் மான் குட்டி. நானுமுன் நெஞ்சத்தில் சிற்றாறா. இன்னும் காலில் விழுந்து கையேந்தி இரக்கின்ற திருட்டுச் சிறு பயலா. அஞ்சி அஞ்சி நாங்கள் அன்று உடற் கடலில் கை நனைத்து கால் நனைத்து நீந்த முயன்றதெல்லாம் எண்ணில் மேனி இன்பத் துணுக்குறுதே. எறிகுண்டாய் வானத்தியமன் கூரை பிரித்துன் பின்வீட்டில்

பதினொரு பேய்கள் கடந்து வந்த பாதை

ஈழத்தின் முடிசூடா மன்னன் பேராசிரியர் கைலாசபதியினால் இலக்கிய உலகுக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம் அ.முத்துலிங்கம் ஐயா என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து எதுவும் இல்லை .பல சிறுகதை தொகுதிகளையையும், கட்டுரைதொகுப்புகளையும் வாசகருக்கு வழங்கிய  முத்துலிங்கம் ஐயாவின் எழுத்துக்களில் மயங்கியவர்களில் அடியேனும் ஒருவன். அண்மையில் அ.முத்துலிங்கம் ஐயாவின் "பதினொரு பேய்கள்" சிறுகதை வாசிக்கக் கிடைத்தது. அந்தக்கதையில் இருந்து நான் என்ன கிரகித்துக்கொண்டேன் என்பதனை பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகின்றேன். அ.முத்துலிங்கம் ஐயா ஈழத்துக்கதை சொல்லிகளில் ஓர் உன்னதமான இடத்தை தக்கவைத்துக்கொண்டவர்.அதே வேளையில் அவரின் எழுத்துக்கள் ஓர் தவறான புரிதலை வாசகர்களுக்கு ஏற்படுத்துமாயின், அதை சுட்டிக்காட்டுவதும் எனது கடமையாகின்றது. ஓர் படைப்பானது பொது வெளியில் வரமுன்பு அதன் எழுத்தும், படைப்பும் ஆக்கியவருக்கே சொந்தமாகின்றது. அனால் அந்தப் படைப்பு பொதுவெளியில் வந்த பின்னர் அது வாசகர்களின் சொந்தமாகின்றது. அப்பொழுது எழுகின்ற சர்ச்சைகள் ஓர் எல்லைக்கு மேல் போகும் பொழுது, படைப்பாளி அதுசார்ந்த தன்னிலை விளக்கம் வாசகர்களுக்க

பாஸ்"போர்ட் - சிறுகதை - கோமகன்

யாழ்ப்பாணம் வடக்கில் இருந்து வெளியேறும் எல்லோர்க்கும் பாஸ் எடுக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்த பட்ட காலமான அந்த அதிகாலைப் பொழுதில் சாவகச்சேரி  பகுதியில் இருந்த அந்த வீடு சனங்களால் திமிறியது.இந்த இடம் தான் அப்போதைய நிழல் பாஸ் அலுவலகம். சனங்களுக்கு ஆயிரம் சோலிகளுடனும் அதனால் வந்த கவலைகள் முகத்தில் நிரம்ப வீட்டின் முன்னால் இருக்கக்கூடிய அவ்வளவு இடங்களிலும் பொட்டலங்களாக சிதறியிருந்தனர். பாஸ் கொடுக்கும் அலுவலகர்கள் ( பெடியங்கள் ) இன்னும் வராத படியால், அங்கு இருந்த உதவியாளர்கள் வந்த சனங்களை மேய்த்துகொண்டிருந்தனர். இந்த மேய்ச்சலினால் பலரும் கடுப்பாகவே இருந்தனர். ஆனாலும் எப்பொழுதுமே "சமரசங்கள்" என்ற பரம்பரையலகு  அவர்களுடைய ரத்தத்தில் சிறிது தூக்கலாகவே இருந்து வந்திருக்கின்றது. அதனால் வெளிப்படையாகத் தங்கள் கடுப்பைக் காட்ட முடியாது வாய்க்குள் புறுபுறுத்துக் கொண்டிருந்தனர் அங்கே இருந்த சனங்கள். சின்ராசாவும் அவர் பதினேழு வயது நிரம்பிய பேரனும் அந்தகூட்டத்தில் இருந்தனர். பேரனுக்கு அந்த இடத்துக்கு வரவே பிடிக்கவில்லை. பாட்டனார் சின்ராசாதான் மன்றாட்டமாக அழுது குளறி அவனை கூட்டிவந்திரு

என் பார்வையில் ஃ -ஆயுத எழுத்து - வாசிப்பு அனுபவம்

"உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை.அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம்"? என்று ஓர் கேள்வியை நான் எழுதிய " சின்னாட்டி " என்ற சிறுகதையில் எழுப்பியிருந்தேன். நாங்கள் எப்பொழுதுமே உண்மையைவிடக்  கற்பனையில்  மிகுந்த ஆர்வம் காட்டிக்கொண்டிருக்கின்றோம் . உண்மையைவிடப் பொய்தான்  மிகவும்  உண்மையாகத் எங்களுக்குத் தெரிகிறது. கற்பனைகள் என்றுமே  பலவகைகளில்  எங்களுக்கு திருப்தியைக் கொடுக்கின்றன .எங்களுடைய கற்பனைகள்  எங்கள் அகங்காரத்திற்கு  திருப்தியை  அளித்துக் கொண்டிருகின்றது. இன்றைய இலக்கிய  வெளியில் பெரும்பாலானவர்கள் உண்மைகளை பேசாது விடுகின்றனர். உண்மை பேசுவோர் பேசுவது உண்மை என்று தெரிந்திரிந்தும், இந்தப் பெரும்பாலானவர்கள் வெறும் கற்பனை வடிவங்களுக்கே   முண்டு கொடுக்கின்றனர் . இவர்கள் உண்மைகளைப் பேசுவோரை கள்ளத்தனமாக ரசித்து அவர்களை  ஓர் செப்படிவித்தைக்காரர்கள் போல் பார்க்கின்றார்கள். ஆனால் உண்மை பேசுவோரை ஓர் பேசுபொருளாக இவர்கள் அங்கீகாரம் கொடுக்கத்தயாரில்லை. இந்த உண்மைகள் பேசுவோரை பெரும்பாலானவர்கள் இழிசனங்களாக, தீட்டுப்பட்டோராக கருத