Skip to main content

Posts

அடிபுண்ட சருவமும் இலக்கியக் கெத்தும்

வணக்கம் நடு வாசகர்களே மற்றும் இலக்கிய ஆர்வலர்களே! இலக்கியர்களில் பல ரகங்கள் உண்டு. அதில் ஒரு ரகத்தை வெளியே கொண்டு வரலாம் என எண்ணுகின்றேன். வரும் ஆவணியில் வெளியாக இருக்கும் நடுவின் ‘தமிழக சிறப்பிதழ்’ தொடர்பான அறிவித்தல் எல்லோருக்கும் தெரிந்த விடயமே. இது தொடர்பாக நான் தமிழக எழுத்தாளர்கள் பலரிடம் தொடர்பு கொள்வதுண்டு. அவர்களும் என்னுடன் தொடர்பாடலில் இருந்ததுண்டு. அவர்களுக்கு நடுகுழுமத்தின் சார்பில் நன்றிகள். யாரினதும் சிபாரிசுகள் இல்லாது அல்லது உள்ளடி வேலைகள் செய்யாது இன்று காலை தமிழக சிறப்பிதழ் தொடர்பாக எழுத்தாளர் சாருவிடம் ஓர் ஆக்கம் கேட்டு மின்னஞ்சல் இட்டிருந்தேன். நான் மின்னஞ்சல் செய்து இரண்டு மணித்தியாலங்களுக்கு உள்ளாகவே அவரது இணையத்தளத்தில் நான் அவரிடம் போட்டிருந்த மின்னஞ்சல் நக்கல் நளினங்களுடன் வெளியாகியது மட்டுமல்லாது அவரது முகநூலிலும் பதியப்பட்டிருந்தது. ஒரு தனிப்பட்ட மின்னஞ்சல் பொதுவெளியில் வெளியாகியதால் எனக்கு அவர் மீது இருந்த மரியாதையை மாற்றியமைத்தது. அதாவது தனது பண்பை உலகறியச்செய்து அவர் அடி புண்ட சருவமாகி விட்டார். வாசகர் பரப்பில் நடு இணைய சிற்றிதழுக்கு என்று ஒரு இடமுண்டு...

அறத்துப்பால்- இல்லறவியல்- புதல்வரைப் பெறுதல்-The Obtaining of Sons -Procréation des fils - 61-70

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற. 61 பெறுகின்ற செல்வங்களுள் , அறிவுடைய மக்களைப் பெறுவதிலைக் காட்டிலும் சிறந்ததாகப் பிற எதையும் நாம் கருதுவதில்லை எனது பார்வையில்: எல்லாம் சரி......... நல்ல அறிவைக் குடுத்து பிள்ளைகளை வளர்த்தாலும் அதுகள் பிற்காலத்திலை எங்களை முதியோர் இல்லத்தில் விட்டால் இந்தப்பிள்ளைகள் சிறந்த பேறுகளா? என்ற கேள்வியும் எனக்கு வந்து துலைக்குது . Of all that men acquire, we know not any greater gain, Than that which by the birth of learned children men obtain. De tous les bonheurs, nous ne connaissons pas de plus grand que celui d’avoir des enfants doués de discernement. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின். 62 மாசற்ர பண்பு நிரம்பிய மக்களைப் பெற்றவருக்கு ஏழு பிறவிகள் வரை தீவினைப் பயன்களாகிய துன்பங்கள் அணுகாது எனது பார்வையில்: பிள்ளை பிறக்கும்பொழுது வெள்ளையாகத் தான் பிறக்கிது. ஆனால் அது வளர்றது மாசடைஞ்ச சூழல். இதில் எப்பெடி நல்லபண்புள்ள பிள்ளையள் வருவினம்? ஆக துன்பம் ஏழுதலைமுறை காலத்துக்கு பொறுக்கத் தேவையில...

தீரனின் பார்வையில் 'முரண்'

‘எதிர்’ வெளியீடாக வந்திருக்கும் கோமகனின் ‘’முரண்’’ சிறுகதைகளின் தொகுப்பு நூல் வாசித்த பின் மூன்று நாட்களாக வேறு ஒன்றையும் வாசிக்க முடியாமல் கிடந்தேன்..சமூகத்தில் நிகழும் அல்லது நிகழாத சில அசாத்தியங்களின் பக்கங்களை அடுக்கி புனைவு ‘நூலா’ல் சாமர்த்தியமாக கோர்த்து விட்டு ஏதும் அறியாத அப்பாவி போல தன் படைப்புமுகத்தை வைத்துக் கொண்டிருக்கும் இந்த ‘’எழுத்துக் கல்லுளிமங்கனின்’’ படைப்புலகம் ஓர் அலாதியான ஆச்சரியம்தான்... பதினோரு உள்ளடக்கங்களை கொண்ட இக்கதைகளைப் பற்றி கோமகன் கூறுகையில்-- //இக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்பட்ட பல இடங்களில் முரண்பட்டிருக்கின்றேன்..’’ // என்று கூறுவதன் மூலம் இக்கதைகளின் ஏறிகைகளின் எதிர்வீச்சுக்களிருந்து தப்பித்துக்கொள்ள ஒரு பலமான ‘பங்கரை’ அமைத்து விட்டார் என்றே கூறுவேன்.. ஆயினும் அந்த ‘பங்கருக்குள்ளிருந்து எட்டிப் பார்த்து ‘’// கதை சொல்லும் உத்திகளில் சில பரிசோதனைகளை செய்திருக்கிறேன்...பேசாப் பொருளை பேசியிருக்கிறேன்...// என்றெல்லாம் நுகர்ச்சியாளனிடம் ஏன் சொல்ல வேண்டும்...? ஆனால் உண்மை அதுதான்,,,முரண்-தகனம்-வெள்ளி13 முதலான கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் கோமகன் ந...

அறத்துப்பால்-இல்லறவியல்-வாழ்க்கைத்துணைநலம்-The Goodness of the Help to Domestic Life-Bien fait de la Compagne 51-60

மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. 51 இரக்க குணம் பொருந்தி , கணவனின் வருவாய்க்கு ஏற்றவாறு செலவு செய்து இல்லற வாழ்க்கையை நடத்துபவளே உண்மையான மனைவி ஆவாள் . எனது பார்வை: விரலுக்கேத்த வீக்கம் வேணும் எண்டு சொல்லுவினம். சும்மா அடுத்த வீடு பீ எம் டபுள் யூ வாங்கினால் தானும் வாங்கவேணும். கூட்டாளி மங்களம் பவியோன் வீடு வாங்கினால் தானும் வாங்கவேணும். 50 பவுணில தாலி போடவேணும் எண்டு புரியன்காறனை அரையண்டம் பண்ணாமல் அவன் எடுக்கிற சம்பளத்தில கட்டுச்செட்டாய் குடும்பம் நடத்திறவள் அச்சா மனுசி. As doth the house beseem, she shows her wifely dignity; As doth her husband's wealth befit, she spends: help - meet is she. Est compagne, l'épouse qui, unit aux bonnes qualités et conduite inhérentes à la vie familiale, le talent de proportionner les dépenses aux revenus de son mari. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல். 52 இல்வாழ்க்கைக்கு உரிய நற்பண்பு மனைவியிடம் இல்லையானால் ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பய...

தாலிபாக்கியம் - சிறுகதை

வள்ளிப்பிள்ளை தன்னைச்சுற்றி இருப்பவர்களை ஒரு முறை பார்த்தாள். அங்கு இருப்பவர்ர்களில் அதிகமானவர்கள் அவளைவிட வயதில் குறைந்தவர்கள். தூரத்தில் இருப்பவர்கள் அவளைச்சுட்டிக்காட்டிப்பேசும்போது அவளுக்கு வெட்கமாக இருந்தது. இந்த வயதில் இது தேவையா? என்று தன்னைத்தானே ஒருமுறை கேட்டாள். பேரப்பிள்ளைகளு ம் பீட்டப்பிள்ளைகளும் இருக்கையில் இப்படி ஒரு ஏற்பாடுதேவைதானா? இதை நிறுத்தமுடியாதா?அவள் தன்னைத்தா னே கேட்டாளே தவிர எவருக்கும் அதைப்பற்றிச்சொல்லமுடியாதநிலை கணவனே ஒப்புக்கொண்டபின்னர் அவள் மறுத்து என்ன பயன்.இந்தச்சின்னப்பிள்ளையளுக்கு முன்னாலை தனக்கு ந‌டக்கப்போவதை நினைக்க நினைக்க அவளுக்கு வெட்கத்தில் என்ன செய்வதென்றேதெரியாது தவித்தாள். த‌ன‌க்கு இப்ப‌டி ஒரு ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌க்கும் என்று வ‌ள்ளிப்பிள்ளை க‌ன‌விலும் நினைக்க‌வில்லை.ந‌ட‌க்க‌ப்போவ‌து ந‌ல்ல‌தென்றுதான் அனைவ‌ரும் கூறுகிறார்க‌ள். ஆனால் அவ‌ளுக்கு இதி துளி கூட‌விருப்ப‌ம் இல்‌லை. வ‌ள்ளிபிள்ளையின் க‌ண‌வ‌ன் க‌ந்த‌சாமிக்கு வ‌லு ச‌ந்தோச‌ம். அவ‌ர‌து வாழ்நாளில் செய்ய‌முடியாத‌ சாத‌னை இன்று ந‌ட‌க்க‌ப்போகிற‌து என்பதில் அவ‌ருக்கு இர‌ட்டிப்பு ம‌கிழ்ச்சி.க‌ந்த‌‌சாமி...

ஓடி வந்தவர்கள்...- சிறுகதை

சின்னாச்சிக் கிழவிதான் விசயத்தைப் போட்டுடைத்தது... "எடியே பொன்னம்மா தெரியுமே விசயம்?". சின்னான் எப்பவும் இப்படித்தான் தொடங்கும். அநேகமாக உப்புச் சப்பில்லாத விசயங்கள்தான் வந்து விழும். சிலவேளை முக்கிய புலனாய்வுத் தகவல்களும் இருக்கும். பொன்னம்மாக் கிழவி கொஞ்சம் அழுத்தக்காரி; விசயத்தைத் துழாவினால் கௌவரவக் குறைவு என்று ஒரு அழுத்தமான கொள்கை ஒன்றை வைத்திருக்கிறா. விசயம் தன்பாட்டில் வந்து விழும் என்று நன்றாகத் தெரியும். எனவே 'நீ சொல்லப்போறது முக்கியம் இல்லை' என்றது மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு குட்டப் பெட்டியைத் திறந்து வெத்திலை, பாக்கைத் தயார் பண்ணினா. காதுகள் மட்டும் அடுத்த தகவலுக்காகக் காத்திருந்தன. "எனக்குக் கொஞ்சம் கிறுதி'யாக இருக்கு" என்று சொல்லிக்கொண்டு வெத்திலையொன்றை நடு நரம்போடு இரண்டாகக் கிழித்தா; பிறகு நிதானமாகச் சுண்ணம்பைப் பூசத் தொடங்கினா. "நான் புதினம் சொல்லப்போக இவள் வெத்திலை போடுறாள்," என்று சின்னாச்சி அலுத்துக் கொண்டா. "அவள் கிடந்தாள் நீ விசயத்தைச் சொல்லு, " இன்னொரு ஆச்சி சொன்னா. இது நடப்பது வேதப் பள்ளிக்கூடத்துக்குப் ப...

வசூலிப்பு - கட்டுரை

வெய்யிலைக் கண்டால் தான் வெளியிலே சென்று இதமான காற்றைச் சுவாசிக்க முடிகிறது. கடந்த இரு மாதங்களாகக் குளிருக்குப் பயமில்லாமல் வீட்டை விட்டு எங்காவது போய்வர விருப்பமாயிருந்தது. பாரீஸில் அப்படியும் அடிக்கடி மழை பெய்து கொண்டிருக்கிறது .இது கூட மனசுக்கு இதமான காலநிலையாகவே இருக்கிறது.இப்படியாக வானத்தை அண்ணார்ந்து பார்த்துப் பார்த்து இந்தக் கோடைகால விடுமுறையில் பூங்காக்களைத் தேடிச் சென்று சுத்தமான காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தேன்.எமது சுற்றாடலில் வசிப்பவர்களும் அங்கு வருவார்கள்.அப்போது தான் அயலவர்கள் ஒன்றாக அமர்ந்திருந்து கதைக்க நேரம் கிடைத்தது போலிருக்கும். அங்கிருந்து உரையாடிக் கொண்டிருந்த பெண்ணொருவர் தன் மகளுக்குக் கட்டாயம் பருவமடைந்ததற்கான சடங்கைச் செய்ய வேண்டும் என்றார்.அந்தச் சிறுமிக்கு பதினொரு வயது.அது நடந்து ஆறு மாதங்களுக்கு மேலாகி விட்ட போதும் அவரது கவலையெல்லாம் மகளுடைய சாமத்தியச்சடங்கை ஒரு கொண்டாட்டமாகத் தாங்கள் செய்யாமல் விட்டால் , மற்றவர்கள் தங்களை மதிக்க மாட்டார்கள் என்பதாக இருந்தது.அடுத்த வருடத்திலாவது அக் கொண்டாட்டத்தை நடத்தியே தீருவது என்பதே அவர் பேச்சாயிருந்தது. எத...