Skip to main content

அறத்துப்பால்- இல்லறவியல்- புதல்வரைப் பெறுதல்-The Obtaining of Sons -Procréation des fils - 61-70





பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற. 61

பெறுகின்ற செல்வங்களுள் , அறிவுடைய மக்களைப் பெறுவதிலைக் காட்டிலும் சிறந்ததாகப் பிற எதையும் நாம் கருதுவதில்லை

எனது பார்வையில்:

எல்லாம் சரி......... நல்ல அறிவைக் குடுத்து பிள்ளைகளை வளர்த்தாலும் அதுகள் பிற்காலத்திலை எங்களை முதியோர் இல்லத்தில் விட்டால் இந்தப்பிள்ளைகள் சிறந்த பேறுகளா? என்ற கேள்வியும் எனக்கு வந்து துலைக்குது .

Of all that men acquire, we know not any greater gain, Than that which by the birth of learned children men obtain.

De tous les bonheurs, nous ne connaissons pas de plus grand que celui d’avoir des enfants doués de discernement.

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின். 62


மாசற்ர பண்பு நிரம்பிய மக்களைப் பெற்றவருக்கு ஏழு பிறவிகள் வரை தீவினைப் பயன்களாகிய துன்பங்கள் அணுகாது

எனது பார்வையில்:
பிள்ளை பிறக்கும்பொழுது வெள்ளையாகத் தான் பிறக்கிது. ஆனால் அது வளர்றது மாசடைஞ்ச சூழல். இதில் எப்பெடி நல்லபண்புள்ள பிள்ளையள் வருவினம்? ஆக துன்பம் ஏழுதலைமுறை காலத்துக்கு பொறுக்கத் தேவையில்லை

Who children gain, that none reproach, of virtuous worth, No evils touch them, through the sev'n-fold maze of birth.

Celui qui a des enfants à caractère irréprochable ne sera pas atteint par le malheur, dans ses sept naissances.

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும். 63


தம் பொருள் என்று போற்றுவதற்கு உரியவர் தம் மக்களே யாவர்.ஏனெனில் அவர்கள் செய்யும் நற்காரியங்களின் பலன் தந்தையை வந்து சேரும்

எனது பார்வையில்:

என்னதான் அம்மா அப்பா பிள்ளையளைப் பொத்திப் பொத்தி வளத்தாலும் , கடைசீல அதுகள் செய்யிற செய்கையளின்ர பலன் எல்லாம் அப்பா அம்மாட்டைத்தான் போகும். உதாரணமாய் அடுத்த வீட்டுப் பெட்டைக்கு பிள்ளைகளாகிய நீங்கள் கடலை போட்டால் கடிபடுறது இரண்டுபக்க அம்மாவும் அப்பாவும்தான்.

'Man's children are his fortune,' say the wise; From each one's deeds his varied fortunes rise.

Les enfants sont dit-on, la richesse du père, parce qu’ils lui transfèrent, par leurs actes, méritoires tous les Biens qu’ils acquièrent.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ். 64


தம்முடைய மக்களின் சிறு கைகளால் துழாவப் பெற்ற உணவு , பெற்றோர்க்கு அமிழ்தினும் இனிமையானதாயிருக்கும்

எனது பார்வையில்:

இந்தக் குறளை படிக்க நல்லாய்தான் இருக்கு. ஆனால் , இது வெளிநாட்டுக்கு சரிப்பட்டுவருமா? எனக்கு இதைப்பாக்க அண்மையில் நடந்த சாம்பவமா ஒன்று ஞாபகம் வருகின்றது. நோர்வேயில தாய்தகப்பன் பிள்ளைக்கு கையால சாப்பாடு குடுக்க கவுன்சில்காறன் வந்து பிள்ளைகளைத் தூக்கிகொண்டு போட்டான் . இதை பிள்ளை செய்தாலும் தாய் தகப்பனுக்கு நடக்கும். ஏனெண்டால் இது சுத்தம் சுகாதாரம் சம்பந்தமானது . இதில சென்ரிமன்ற் கலக்கிறது நல்லாயில்லை..............

Than God's ambrosia sweeter far the food before men laid, In which the little hands of children of their own have play'd.

La bouillie préparée par leurs petites mains est plus délicieuse que l’ambroisie.

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. 65


தம் மக்களின் உடம்பைத் தொடுதல் உடலுக்கு இன்பமாகும் அவர்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு மிகுந்த இன்பமாகும்

எனது பார்வை:

ஒரு அம்மா அப்பா அதிகமாகச் சந்தோசப்படுவது தாம்பெற்ற பிள்ளைகளின் உடம்பைக் கட்டிஅணைக்கும்போதும் அவர்களின் மழலை மொழியைக் காதால் கேட்கும் போது தான். என்றாலும் , அவர்களின் நடத்தைகள் அளவுக்கு அதிகமானால் இனிமையாக இருக்காது கொடுமையாகவே இருக்கும் . உதாரணத்திற்கு சிறுவயதுப் பிள்ளகள் பெரிய ஆட்கள்போலப் பாவனை செய்து கதைப்பது .

To patent sweet the touch of children dear; Their voice is sweetest music to his ear.

Toucher le corps des enfants fait les délices du corps, entendre leurs paroles fait les délices de l’oreille.

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். 66


தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு இன்புறாதவரே,"குழலின் இசை இனிது","யாழின் இசை இனிது" என்றெல்லாம் கூறுவர் .

எனது பார்வை:

பொதுவாகச் சிறிய பிள்ளைகள் கதைக்கும் பொழுது அதன் பொருள் கிடையாது. ஆனால் ஒரு இசைக்கருவியை ( யாழ் குழல் , மீட்டும் ) பொழுது அட்சர சுத்தமான இசை பிறக்கின்றது. பொருளற்ற குழந்தையின் மழலை மொழியும் முறையாகப் பிறக்கும் ஓர் இசையும் எப்படி ஒரே தராசில் இனிது என்ற சமன்பாட்டிற்குள் வரமுடியும்?

'The pipe is sweet,' 'the lute is sweet,' by them't will be averred, Who music of their infants' lisping lips have never heard.

Ce sont ceux qui n’ont pas entendu le babillage de leurs enfants qui disent: ‘‘la flute est douce ‘‘la lyre, est douce.’’

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல். 67


ஒரு தந்தை தன் மகனுக்குச் செய்யும் பெரிய உதவி யாதெனில், அவனைக் கற்றோர் அவையில் முதன்மை பெற்றவனாக இருக்கச் செய்தலேயாகும்.

எனது பார்வை:

ஒரு தந்தையானவனின் கடமை மகனுக்கு எப்படி இருக்கவேண்டும் என்றால் , கற்றவர் அவையில் அவனை முதல் ஆளாகச் செய்யவேண்டும். நாங்கள் முதலில் கற்றோர் என்றால் யார் ? என்ற பொருளிற்கும் விடை தேடவேண்டிய அத்தியாவசியம் என்ற ஒன்று இருக்கின்றது. வெறும் உயர் படிப்பும் பல்கலைகழக அங்கீகாரமும் ஒருவனை கற்றவன் அல்லது அறிஞனாக்கி விடமுடியுமா? இதில் எனது நிலைப்பாடு என்னவென்றால், தந்தையானவன் தனது பிள்ளைகளுக்கு அனுபவம் என்ற வாழ்கைப் பாடத்தையும் , பாடசாலை அறிவையும் ஒரேசேரக் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் பூரணமான அறிவாளர்களாக இருப்பார்கள். இல்லாவிட்டால் அவர்களது அறிவு வெறும் ஏட்டுச்சுரைக்காயாகவே இருக்கும்.

Sire greatest boon on son confers, who makes him meet, In councils of the wise to fill the highest seat.

Le Bien que fait le père à son enfant, c’est de le rendre habile à tenir le premier rang dans l’assemblée.

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது. 68


தம் மக்கள் அறிவுடையவராய் இருந்தால் பெற்றோராகிய தங்களுக்கு நன்மை தருவதைவிட இவ்வுலகில் வாழும் எல்லா உயிர்களுக்கும் மிக்க நன்மையும்,மகிழ்சியும் தருவதாகும்.

எனது பார்வை:
இந்தக் கருத்து வள்ளுவரின் காலத்தில் வேண்டுமானால் ஏற்புடையதாக இருந்திருக்கும் என்றே நினைக்கின்றேன். ஏனெனில்,இந்தப் பிள்ளைகள் தாம் பெற்ற அறிவினால் இந்தப் பூமிப்பந்தை அழிவின் விளிம்பில் வைத்திருக்கிறார்கள். இவர்களது அறிவானது மனித குலத்திற்கு பெரும் அழிவுகளைத் தந்தது உலகின் வரலாறாக இருந்தபோதிலும் ஒப்பீட்டளவில் சிறியளவிலேயே இவர்களது அறிவு மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு வழிகோலின .

Their children's wisdom greater than their own confessed, Through the wide world is sweet to every human breast.

L’érudition des enfants est plus agréable à tous les autres êtres qu’à soi-même.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய். 69


தான் பெற்ற மைந்தனை,அறிவு ஒழுக்கங்கள் நிறைந்த சான்றோன் என்று அறிவுடையோர் புகழ்ந்து கூறக்கேட்ட தாய், அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியினும் பெருமகிழ்ச்சி அடைவாள்.

எனது பார்வை:

ஒரு அம்மா பத்து மாதங்கள் ஒரு குழந்தையைச் சுமந்து தனக்கும் அதற்கும் உயி ர்கொடுக்கின்றாள்.அந்தக் குழந்தையை இந்தப் பூமிக்கும், அந்தக் குழந்தை வரக்காரணமானவனுக்கும் அறிமுகப்படுத்துன்றாள்.அப்பொழுது அவள் அடைகின்ற மகிழ்ச்சியை விட,அந்தக் குழந்தை கல்வியாலும், ஒழுக்கத்தாலும் நிறைந்தது என்று அறிவுடையோர் சொல்கின்றபொழுதே அந்தத் தாயின் வயிறு குளிர்கின்றது( பெரிதும் மகிழ்கின்றாள்).இந்தக் குறளில் வள்ளுவர் ஏன் ஆண்மகன் என்று மட்டும் குறிப்பிடுகின்றார் ?அப்போ அவர் பார்வையில் பெண் மகளின் இருப்பு என்ன ? ஆராயவேண்டிய விடையம்..........

When mother hears him named 'fulfill'd of wisdom's lore,' Far greater joy she feels, than when her son she bore.

La joie de la mère qui entend proclamer (par les connaisseurs) le savoir de son enfant est plus grande que celle qu’elle a éprouvée, le jour où elle lui a donné naissance.

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல். 70


மகன் தந்தைக்குச் செய்யும் கடமை ( பிரதியுபகாரம் ) "இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ" என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லேயாகும்.

எனது பார்வை:


முன்னைய பகுதியில்,ஒரு அப்பா தனது பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமையைப் பார்த்தோம்.இதில் பிள்ளைகள் தங்களது தந்தைக்கு செய்யவேண்டிய கடமையை தெளிவாகவே வரையறை செய்வோம். பிள்ளைகாளாகிய எங்களது அறிவையும்,ஒழுக்கத்தையும் பார்த்தவர்கள்"எங்களைப் பெறுவதற்கு எமது அப்பா என்ன தவம் செய்தாரோ"என்று வியந்து பேசும்படியான நிலைக்குக் கொண்டுவரவேணும். நான் இதில் பால்பேதம் பார்க்கவில்லை, அதனால் தான் பிள்ளைகள் என்று பொதுப்பட அழைக்கின்றேன் .

To sire, what best requital can by grateful child be done? To make men say, 'What merit gained the father such a son?'

La reconnaissance de l’enfant envers son père consiste à faire dire: ‘‘Par quelles austérités, ce père a-t-il pu obtenir un tel fils

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம