Skip to main content

Posts

Showing posts from February, 2019

“சமகால ஈழத்துப் படைப்புகள்” ஒரு நோக்கு

பத்திரிகை குறிப்பை வைத்து நாவல் / சிறுகதை எழுதலாமா என்ற கேள்விக்கு சர்வதேச எழுத்தாளர்களை எல்லாம் துணைக்கு அழைக்கின்றார் “கானல் தேசம் ” நுலாசிரியர் நடேசன். பத்திரிகை குறிப்பை வைத்து படைப்பை எழுதலாம் தவறில்லை. ஆனால் ஆதாரமான பத்திரிகை குறிப்பை எப்படியாக / எத்தகைய பார்வையில் தனது புனைவினுடாக அந்தப்படைப்புக்கு நூலாசிரியர் மாற்றியமைத்தார் என்பதை வைத்தே அந்தப்படைப்பு கேள்விக்குட்படுத்தப்படுகின்றது. இதை இன்னும் சற்று விரிவாக்கப் பார்க்கப்போனால் பத்திரிகையை ஆதாரமாக வைத்து எழுதுவதற்கு இலக்கியம் ஒன்றும் மொய் விருந்து அல்ல. மாறாகப் படைப்பு நேர்மையும் புனைவுண்மையும் முதலில் படைப்பாளிக்குள் வரவேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் தாங்கள் அரசியலுக்கு ஏற்றவாறு இறக்குமதி செய்துகொண்ட ‘ரொபி’க் கதைகளையெல்லாம் இலக்கியத்துக்குள் கொண்டுவந்து அதனை உமிந்துகொண்டிருப்பது ஏறக்குறைய ஒரு சுயமைதுனம் போன்றதே. அதற்கு பத்திரிகை குறிப்பை ஆதாரமாகப் பிடிப்பது எப்படியென்றால் வைரமுத்து ஒரு முறை கூறியதுபோல ‘குத்துவிளக்கில் சிகரெட் பற்றியதுபோலானது’. எங்கே ஈழத்து படைப்புகள் எல்லாம் இந்தவகையான சட்டகங்களை நோக்கிச் செல்கின்றனவோ ...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும்-அறிவியல்-பாகம்-01-10

01 செங்காந்தள் அல்லது கார்திகைப்பூ – glory lily – Gloriosa superba செங்காந்தள் அல்லது காந்தள் ஐந்து அல்லது ஆறு சிற்றினங்களை கொண்டுள்ளது. இது கோல்ச்சிசாசியியே (Colchicaceae) எனும் தாவர குடும்பத்தைச் சார்ந்தது. ஒற்றை விதையிலைத் தாவரங்களில் வகையினைத் சேர்ந்ததாகும். இது வெப்ப மண்டல ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவில் காணப்படுகிறது. இவை இயற்கையாக ஆப்ரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மலேசியாவின் சில பகுதிகளில் காணப்படுகிறது. கார்த்திகைத் திங்களில் முகிழ்விடும் இம்மலர்க் கொடி இலங்கை, இந்தியா, சீனா, மலாக்கா தீபகற்பம், அயனமண்டல ஆபிரிக்கா முதலான பகுதிகளிலும் காணப்படும். இது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் காட்சியளிக்கும். அனைத்துப் பகுதிகளும் கோல்சிசினே (colchicine) எனும் அல்கலோயட்கள் நிறைந்தது. அதனால் இவற்றை உட்கொண்டால் மரணம் சம்பவிக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இதன் வேர் மிகுந்த நச்சுத் தன்மை கொண்டது. இதன் இலை மற்றும் தண்டு நம்மேல் பட்டால் தோலில் அரிப்பு உண்டாகும். இது கார்த்திகைபூ என்றும் அறியப்படுகிறது. கண்வலிக...

சமகாலத்து விமர்சனப்போக்கில் எனது பார்வை-கட்டுரை

மாசி மாதத்து ‘தமிழினி’ இணைய சிற்றிதழ் படிக்க கூடியதாக இருந்தது. அதில் ஏக காலத்தில் 03 ஈழத்து படைப்பாளிகளின் நூல்கள் குறித்த விமர்சனங்கள் வெளியாகியிருந்தன. நொயல் நடேசனின் “கானல் தேசம்” குறித்து ப தெய்வீகனும், தீபச்செல்வனின் “நடுகல்” குறித்து தருமு பிரசாத்தும், இறுதியாக உமாஜியின்” காக்கா கொத்திய காயம்” அனோஜனாலும் விமர்சனத்துக்கு உள்வாங்கப்பட்டிருந்தன. கானல் தேசத்திற்கான தெய்வீகனது பார்வையில் தர்க்க ரீதியிலான போக்கையும் குறைந்த மொழியாடலில் செறிவான விமர்சன பண்பையும் அவதானிக்க முடிந்தது. கானல் தேசத்தின் ஊடாக ஒரு வரலாற்று செய்தி ‘புனைவு’ என்ற ஜன்னலின் ஊடாக எவ்வளவு தூரத்திற்கு திரிபு படுத்தப்படுவதுடன் அதுவே ‘வரலாறு’ என்று இளையவர்களை நம்பச் செய்யும் வல்லபங்களையும் கேள்விக்குட்படுத்துகின்றது. குறிப்பாக ‘புலிகள் பெண் போராளிகளை கர்ப்பணிகளாக்கி தற்கொலை போராளிகளாக அனுப்பினார்கள்’ என்ற வரலாற்று அபத்தத்தை தரவுகளுடன் உடைத்தெறிந்த பாணி குறிப்பிடத்தக்கது. இந்த விமர்சனத்தை படிக்கும்பொழுது “வரலாற்றில் மலங்களிப்பது தடை செய்யப்பட வேண்டும்” என்ற உணர்வை எனக்கு ஏற்பத்தியது. ஒன்றாக இருந்து கு...

‘மறுத்தோடி’ இணைய சிற்றிதழ் ஒரு நோக்கு

அண்மையில் வெளியாகியிருந்த மறுத்தோடி இணைய சிற்றிதழ் வாசிக்க முடிந்தது. ஆக்கங்கள் பிரமிக்க வைக்கின்றன. ஆசிரியர் குழுமம் தீயாக வேலை செய்திருக்கின்றார்கள் என்றே எண்ணத்தோன்றுகின்றது. எந்த ஒரு பொருளுக்கும் கவர்ச்சி முக்கியம். அப்பொழுதுதான் அது வெளியே துருத்திக் கொண்டிருக்கும். இது இணைய சிற்றிதழுக்கும் பொருந்தும். அதில் இருக்கின்ற பொருள் தரமானதாக இருந்தாலும் அது இருக்கின்ற இடம் அழுகுணி இடமாக இருந்தால் யாரும் அதனை திரும்பியும் பார்க்க மாட்டார்கள். பின்வரும் விடயங்களை ஆசிரியர் குழுமம் உடனடியாகக் கவனத்தில் எடுக்க வேண்டும். தளவடிவமைப்பு இன்னும் மெருகேற்றப்படல் வேண்டும். அப்பொழுதுதான் அது பொதுவெளியில் நிலைத்து நிற்க முடியும். தமிழ் பதிப்பில் வருகின்ற மறுத்தோடிக்கு தலையங்கங்கள் ஆங்கிலத்தில் இருக்கிறது. இது முரண்நகையாக உள்ளது. தளத்தில் இருக்கின்ற எழுத்துருக்களை விசேட பூதக்கண்ணாடி கொண்டு பார்க்க வேண்டியுள்ளது. இவைகள் எல்லாம் சிறிய விடயங்களே. ஆனால் அவை வாசகருக்கு முக்கியமான விடயம். எழுத்துருவில் கோளாறு என்றால் வாசகர் மறுத்தோடியை மறுத்தோடிவிடுவர் . ஆனால் மூன்று மொழிகளிலும் கிழக்கில் இருந்து வெள...