Skip to main content

Posts

Showing posts from 2018

அகதி-சிறுகதை விமர்சனம் - நெற்கொழுதாசன்

கோமகன் எழுதியிருக்கிறார். புறா தன் பார்வையில் கதையை சொல்கிறது. சிபிச் சக்கரவர்த்தி காலத்திருந்து புறா மனிதர்களுடன் வாழ்ந்திருந்தாலும் யாரவது புறாவின் பார்வையில் கதையை எழுதி இருக்கிறார்களா ? (நான் வாசிக்கவில்லை ) இந்த ஒன்றே இந்தக் கதையை கொண்டாடப் போதுமானது. ஏற்கனவே ஏறுதழுவுதல் என்றொரு கதை எழுதியதாகவும் கிழக்கிலங்கை மூத்த எழுத்தாளர் அதனை "விலங்குப் பண்ணை" க்கு பிறகு வந்த மனிதரல்லாதவர்களின் மிக சிறந்த கதை என்று பாராட்டியிருந்தார். ஒரு புறநகரில் எல்லா இனத்தவர்களும் வசிக்கும் இடத்தில் நிகழும் கதை. அந்த அக்கிராமத்தின் அழகியலை எடுத்து சொல்வதின் ஊடாக ஒவ்வொரு நிகழ்வினையும் துல்லியமாக வரைகிறார். அந்த வரைவுகள் அந்த இடத்தில் வசிக்கும் மக்களை மற்றும் அனைத்தையும் கொண்டுவந்து நிறுத்துகின்றன. ஒரு ஓவியரிடம் கொடுத்தால் அப்படியே அந்த நகரை ஓவியமாக வரைந்துவிடுவார். கட்டிடங்களை பனை மரங்களுடன் ஒப்பீடு செய்வது, தமிழர்களின் பொருட்கள் குவிக்கும் பழக்கங்களை, சடங்குகளை, நம்பிக்கைகளை கிண்டலும் கேலியுமாக புறாவின் பார்வையிலேயே முன் வைக்கிறார். இடையிடையே வரலாற்று தகவல்கள் வேறு. கதையின் இறுதியில் ...

ஐரோப்பாவில் பிள்ளைகளுக்கு பெயர் வைக்கும் விதமும் சொல்லும் விதமும்-கட்டுரை

ஐரோப்பாவில் ஆண் என்றாலும் பெண் என்றாலும் அவர்களது தந்தையின் பெயர் சொல்லி அழைப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றே சொல்வேன். இதை இன்னும் இலகுவாக சொன்னால் ஆணுக்கு தந்தையின் வழி பெயர் தொடர்ச்சியும் ( பரம்பரையை நினைவு கூரல் ) அதே போல் பெண்ணுக்கு அவர்களது தந்தையின் பெயரை சொல்லி அழைப்பதும் நடைமுறையில் உள்ளது. அதாவது முதற் பெயரில் தந்தையின் பெயரும் , பெயரில், மகன் அல்லது மகளது பெயரும் இணைத்து எழுதுவது அழைப்பது வழமை. இந்த நடைமுறை திருமணமானாலும் தொடரும். ஆனால் இவர்களது தேசிய அடையாள அட்டையில் இன்னாரின் மனைவி அல்லது இன்னாரின் கணவன் என்ற இன்னுமொரு பகுப்பு சேர்க்கப்பட்டிருக்கும். இந்த அழைப்பு முறையானது குடும்பங்களின் தொடர்ச்சியினை பாதுகாப்பதற்கு உகந்தது. ஆசிய குடும்ப முறைமையில் பெண் திருமணமானவுடன் இதுவரைகாலமும் பேணப்பட்டு வந்த அவளது தந்தையின் பெயர் நீக்கப்பட்டு அந்த இடத்தில் அவளது கணவனின் பெயர் ஒட்டிக்கொள்ளும். இந்த முறையானது அவளது அடையாளப்படுத்துகின்ற அடிப்படை உரிமையை முற்றுமுழுதாக நிராகரிக்கின்றது . ஆனால் ஆணுக்கு மட்டும் அப்படி நேராது கட்டியமைக்கப்பட்டியமைக்கப்பட்டதுதான் ஆசிய குடும்ப அமைப்பு ...

மனமே மலர்க – மெய்யியல் பாகம் 23

ஐஸ் கிறீம் வாழ்க்கை நமக்குள்ளே நாம் பிளவுபட்டுக் கிடக்கிறோம். எதைச் செய்ய நினைத்தாலும் ஏழு கருத்துகள் வருகிறது. நேற்று செய்ததை நினைத்து இன்று வேதனைப்படுகிறோம். செய்யவும் விருப்பம், ஆனால் தயக்கம். விருப்பமிருக்கிறது ஆனால் தைரியமில்லை. நமக்குள்ளேயே குழந்தையுணர்வு ஐஸ்கிரீம் கேட்கிறது. தாய் குரல் குறைவாய் சாப்பிடு என்கிறது. தந்தை குரல் கூடாது என்று மிரட்டுகிறது. ஆசிரியர் திட்டுகிறார். அறிவு அது கெடுதல் என்கிறது. கெளரவம் இடம் பார்த்து சாப்பிடு என்கிறது. அந்தஸ்து உயர்ந்த விலையுள்ளதை கேட்கிறது. ஆக குழந்தையுணர்வாய் ஒருமையாய் ஒரு ஐந்து நிமிடம் வாழ நம்மால் முடிவதில்லை. அப்படிப் பிளவுபட்டு கிடக்கிறோம். ஆகவே பிளவில் சக்திகள் சிதைந்துவிடுகின்றன. கடைசியில் நாம் ஐஸ்கிரீம் ஆசையைக் கூட வாழாமல் அமுக்கி கட்டாயதனத்துக்குள் நுழைந்துகொள்கிறோம். இப்படி நமக்குள் பல குரல்கள், பல மாறுபட்ட கருத்துக்கள், அறிவுகள். இதையெல்லாம் மெல்லும் மன ஓட்டம் மிக வேகமாக இயங்குகிறது. இந்த ஓட்டத்திற்கே சக்தி செலவாகிவிடுகிறது. வாழ்வதற்கு சக்தி மீதம் இருப்பதில்லை. இந்த பிளவு நிலை, இந்த சிதறுண்ட நிலையிலிருந்து நாம்...

“நாம் தோற்றுப் போன இனமல்ல. எவ்வளவு தான் விழுந்தாலும் எப்போதும் எம் கையில் இருந்து பேனை விழுந்ததில்லை. இப்போது சுதந்திரமாக கமராவும் அளிக்கப்பட்டுள்ளது.” – நேர்காணல் -மதிசுதா

ஆரம்பத்தில் மதியோடை வலைத்தளத்தினால் எனக்கு அறிமுகமான மதிசுதா வானத்தையும் வசப்படுத்தும் ஆற்றல் உள்ளவர். ஆரம்பத்தில் இருந்தே பல மேடுபள்ளங்களை தாண்டி முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கு ஓர் சிறந்த முன் உதாரணமாக இருந்து வருகின்றார். ஈழத்து சினிமாவில் இயக்கம்,நடிப்பு, குறும்படம் என்று பல் துறைகளிலும் தனது முத்திரையை பதித்து வந்திருக்கின்றார். இவரது குறும்படங்கள் பல விருதுகளை பெற்று தந்திருக்கின்றன. அதில் ‘மிச்சக்காசு’ முக்கியமானது. இவர் இயக்கிய படமாக ‘துலைக்கோ போறியள்’, ‘ரொக்கெட் ராஜா’ குறிப்பிடத்தக்கவை. இப்பொழுது தனது முதலாவது முழு நீளத் திரைப்படத்தை முடிக்கும் தறுவாயில் இருக்கின்றார். அத்துடன் இவர் 14 குறும்படங்களுடன் ஏறத்தாழ ஐந்து ஆவணப்படங்களை இயக்கி இருக்கின்றார். அண்மையில் நான் தாயகம் சென்ற பொழுது நடு வாசகர்களுக்காக வழங்கிய நேர்காணல் இது ………….. கோமகன் 00000000000000000000 ஓர் மருத்துவ மாணவனாக இருந்த உங்களை எப்படி திரைத்துறை வசப்படுத்தியது? எம் வம்சாவளியில் வில்லுப்பாட்டு, சங்கீதம், பாடகர் என பலர் இருந்திருக்கிறார்கள். தலை முறை கடத்தப்பட்ட ஏதோ ஒன்று தான் எனக்குள் உரு...

சுவைத்தேன்-கவிதைகள்-பாகம் 08

பொன்னையருக்கு வேலை போனது ரியூற்றறிகள் இல்லாத காலத்தில் வீடுகளுக்குப்போய் ரியூசன் கொடுத்தவர்தான் பொன்னையா வாத்தியார் கால் நடையில் தான் வருவார் குதிக்கால் நிலத்தில் பாவாது கற்பித்த பாடங்கள் கணக்கும் ஆங்கிலமும் அரைமணி நேரத்தில் கற்பித்தல் நடந்ததோ இல்லையோ எங்கள் செவியில் அவர் தொங்குவது தவறாது பொன்னையர் தொங்கியதால் என் காதுப் பொருத்து புண்ணாகியிருந்தது. அவர் செய்யும் கொடுமையை வெளியில் சொல்ல முடியாது ‘படிப்பு வரட்டும் என்றுதானே வாத்தியார் அடிக்கிறார்’ … இது மாமாவின் சித்தாந்தம். எனக்காக அத்தை உருகினாலும் தலையிடும் அளவுக்கு துணிச்சலில்லை அவவுக்கு பொன்னையரை மனசாரத் திட்டினேன் என் திட்டுப் பலிப்பதாயில்லை காதுப்புண்ணும் ஆறுதில்லை கடைசியாக கடவுள் கண் திறந்தார் ஒருநாள் பொன்னையருக்குச் சீட்டுக்கிழிந்தது வேறொன்றுமில்லை என்னிலை விட்ட சேட்டையை அருள் அண்ணாவிலை விட்டிருக்கிறார் பெரியம்மா கண்டிட்டா வாத்தியார் படிக்காட்டி என்ர பிள்ளை என்னோடை இருக்கட்டும் நீங்கள் வாருங்கோ’ 0000000000000000000000000000 என்ன மரம் கிராமங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டமிருக்கும் அது பொருத்தமாகவுமிருக்கும் கதிரவேலுவுக்கு அமைந்...

‘எனக்கான ஓவிய மொழியை மக்களே தீர்மானிக்கின்றார்கள்’-நேர்காணல் ஓவியர் புகழேந்தி

இந்தியாவின் தலைசிறந்த ஓவியங்களில் ஒருவரான ஓவியர் புகழேந்தி, போரியல் ஓவியங்களினால் எம்மிடையே தனியான இடத்தைப் பிடித்தவர் .இவரது போரியல் ஓவியங்களான புயலின் நிறங்கள், உறங்கா நிறங்கள், உயிர் உறைந்த நிறங்கள், போர் முகங்கள் எமது சனங்களின் அவலங்களை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி மானிடஇருப்பின் மனச்சாட்சிகளை கேள்விக்குட்படுத்தின. மேலும் இவரால் , எரியும் வண்ணங்கள் உறங்கா நிறங்கள், திசைமுகம், முகவரிகள், ,அதிரும் கோடுகள், சிதைந்த கூடு,புயலின் நிறங்கள், அகமும் முகமும், தூரிகைச்சிறகுகள்,நெஞ்சில் பதிந்த நிறங்கள்,மேற்குலக ஓவியர்கள்,தமிழீழம்- நான் கண்டதும் என்னைக்கண்டதும்,ஓவியம் கூறுகளும் கொள்கைகளும், எம்.எஃப்.உசேன்,வண்ணங்கள் மீதான வார்த்தைகள்,தலைவர் பிரபாகரன்: பன்முக ஆளுமை என்று மொத்தம் பதினாறு நூல்கள் தமிழ் எழுத்துப்பரப்புக்குக் கிடைத்துள்ளன . “சாதியத்தை ஓவியத்தில் வெளிக்கொண்டு வரும்பொழுது உள்ள நடைமுறைப் பிரச்சினைகள் தான் என்ன? ஓவியங்களில் சாதிய சிக்கல்களை வெளிப்படுத்தும் போது எந்த சாதிய அடக்குமுறை, ஒடுக்குமுறைகளை வெளிபடுதுகின்றேனோ அதைச் செய்கின்ற சாதியைச் சேர்ந்தவர்களுக்கு கசப...