Skip to main content

Posts

தமிழர் வாழிவியலில் பௌத்தத்தின் வகிபாகம் ஒரு நோக்கு 00

என்னுரை ஒரு புதிய வரலாற்றுத்தொடரின் ஊடாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இந்தத் தொடருக்கான நேரத்தையும் காலத்தையும் அடைவுகாலமே எனக்கு வழங்கியது. அடிப்படையில் நான் ஒரு சைவசமயத்தை தீவிரமாக பின்பற்றும் தாவர உண்ணிகளான பெற்றோரின் பின்புலத்தில் இருந்து வந்தாலும் எனது வாழ்நாள்காலத்தில் 30 வருடங்களுக்கு மேலாக புலம்பெயர்தேசத்தில் வாழ்ந்ததினால் மனமும் சிந்தனையும் விசாலமாயிற்று. அதன் விளைவாக வெளிவருவதே இந்தத்தொடர். புலம்பெயர் தேசத்தில் எனக்குத்தெரிந்த பல நண்பர்கள் பௌத்தத்தை உள்வாங்கியவர்களாக இருக்கின்றார்கள். இதற்கு பலவேறு காரணிகள் இருந்த போதிலும் எனது நோக்கில் ஆசியக்கண்டத்தில் சாதீய அடுக்குகள் பல மட்டங்களில் இருந்து மானிடவாழ்வை கேள்விக்குறியாக்கியது அதற்கு அவரவர் சார்ந்த மதங்களும் துணைபோயின என்பதை நாங்கள் காயத்தால் உவத்தல்களுக்கு அப்பால் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். புலம்பெயர் தேசத்தில் தமிழர் மத்தியில் பௌத்த கோட்பாடுகள் வேரூன்றுவதற்கு இவையும் ஒருகாரணியாக இருந்தன. மேலும் பௌத்தத்தில் மேல்சாதி கீழ்சாதி என்று பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டாதபடியினாலும், எக்குடியிற் பிறந்தோராயினும், அவரவர்

மம்முடு

பிரான்ஸ் இன்போ செய்தி : செவ்ரன் நகரில் போதைப்பொருள் தேடுதல் வேட்டையில் இரண்டு கிலோ பிரவுன் சுகர் போதைவஸ்து வில்லைகள் கைப்பற்றப்பட்ட வேளையில் நடந்த மோதலில் ஒரு கறுப்பினத்தவர் உயிரிழந்ததாக செவ்ரன் மாநகரக் காவல்துறை தெரிவிப்பு. 07 மார்கழி 2018 000 கடந்த இரவு அம்மா வாட்ஸ் அப்-இல் எனது கலியாணத்துக்காக அபிப்பிராயம் சொல்லும்படி அனுப்பியிருந்த அந்த அப்பாவிப் பெண்ணை மறுப்புச் சொல்லி செய்தி அனுப்பினேன். அம்மா எனக்காகப் பார்த்த 10-ஆவது பெண் தான் இவள் பெயர் மது. நான் எதிர்பார்த்ததை விட நல்ல வடிவாகத்தான் மது இருந்தாள்.ஆனாலும் எனக்கு ஏனோ அவள் மீது பிடித்தம் வரவில்லை. அப்பாவின் மறைவுக்குப் பின்னர் அம்மாவுக்கு நல்லது கெட்டது என்று எல்லாமே நான் தான். எனக்கு தங்கையோ சகோதர்களோ இருக்கவில்லை. ஒருவேளை எனக்கு ஒரு தங்கைச்சியோ அக்காவோ இருந்திருந்தால் பெண்வாசம் என்றால் என்னவென்று தெரிந்திருக்குமோ என்னவோ. இப்பொழுதெல்லாம் எனக்கு கலியாணத்தில் பெரிதாக ஆர்வம் வரவில்லை. உடல் மனம் இரண்டின் தேவைகளை அதன் போக்கில் இயல்பாக இருக்க விட்டு விட்டேந்தியாக வாழ்வதும் ஒரு ஜென் நிலைதான் என்று எனக்கு எண்ணத்தோன்றுகின்றது. சிலவேளைகளி

“போரே என்னைச் செதுக்கியது”-நேர்காணல்-நிலாந்தன்

அண்மைக்கலங்களில் நீங்கள் அதிகமாக அரசியல் ஆய்வாளராகவே இனம் காணப்பட்டு வருகின்றீர்கள். ஓவியரும் கவிஞரும் இலக்கியவாதியுமான நிலாந்தன் படிப்படியாக மறைந்து கொண்டிருப்பதாக உணருகின்றேன் ? அப்படி மறையவில்லை. நானுமுட்பட பல ஓவியர்களின் தொகுப்பு ஒன்று அச்சிடப்பட்டு விட்டது. சில வேளைகளில் கவிதை பெருகும். சில வேளைகளில் ஓவியம் பெருகும். சில வேளைகளில் மௌனம் பெருகும். ஆனால் தொடர்ச்சியாகக் கட்டுரைகள் பெருகும். கடந்த பத்தாண்டுகளாக அரசியல் விமர்சன கட்டுரைகளே அதிகம் பெருகின. ஏனெனில் இது கருத்துருவாக்கக் காலம். மண்சுமந்த மேனியர் நாடகம், இந்த மண்ணும் எங்கள் நாட்களும் என்ற கவிதா நிகழ்வு, ஏராளமான வீதி நாடகங்கள், கவியரங்குகள், ஓவியக் காட்சிகள் என்றிருந்த நிலை இன்று இல்லையே ! ஆகையால் ,இந்தப் போக்கைக் கலைத்துறையின் வீழ்ச்சிக் காலம் என்று எடுத்துக்கொள்ளலாமா ? அது யுத்த காலம். இது ஆயுத மோதல்களுக்குப் பின்னரான காலம். ஒரு பொருத்தமான அரசியல் இயக்கம் அல்லது கட்சி, தமிழ் அரசியலை வீச்சாக முன்னெடுத்தால் இந்தக் காலமும் அதற்குரிய பாடல்களையும் கவிதைகளையும் ஓவியங்களையும் வெளிக்கொண்டு வரும். தமிழ் அரசியல் சோர்ந்து விட்டது. தே

பல விடயங்களைத் துறக்கும் துணிவற்றவர்களால் முழுமையான படைப்பாளிகளாக மாறுவது சாத்தியமில்லை- வாசுதேவன்

வாசுதேவனை ஏன் தெரியக்கூடாது ? வாசுதேவன் இலக்கியவாதியாக இதுவரையும் அறியப்படவில்லை என்ற அர்த்தத்தில் இந்தக் கேள்வி எழுந்துள்ளதாகவே கருதுகின்றேன். இது ஒரு வகையில் சரியான கேள்வியே. தமிழ் இலக்கிய உலகு விசித்திரமானது. அது தனக்கென எழுதாத சில விதிகளைக் கொண்டுள்ளது. இலக்கியராக ஒருவர் வெளிப்பட வேண்டுமானால் அவரை “மேடையேற்றுவதற்குச்” சில நபரேனும் தேவைப்படுகிறார்கள். ஆனால் அந்தச் சில நபர்கள் உங்களிடம் சில சமரசக் கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். இங்கே “சமரசம்” என்ற சொல்லு முக்கியமானது. அவர்கள் தங்களைப் போன்று நீங்களும் ரசிக்கவேண்டும் என்று நிபந்தனையிடுகிறார்கள். அவர்களின் இலக்கிய அரசியலுக்கு நீங்கள் “கட்டுப்படவேண்டும்”, துணைபோகவேண்டும். நீங்கள் உங்களுக்கான ஒரு சிந்தனைத் தனித்துவத்தைப் பேணுவதை அவர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். கூட்டாகவன்றி, தனித்துவமாக இருக்கும் யாரையும் சமகாலத் தமிழ் இலக்கிய உலகம் சகித்துக்கொள்வதில்லை. அவ்வாறனவர்களை ஓரங்கட்டுவதிலும், இருட்டடிப்புச் செய்வதிலும் அது மிகுந்த கரிசனை கொள்கிறது. குறிப்பாகத் தமிழ் இலக்கிய உலகில் இது ஒரு நோயாகவே மாறிவிட்டிருக்கிறது. தமிழ் இலக்கிய உலகில் தன