Skip to main content

Posts

பூவுக்கும் பெயருண்டு 08

41 செங்கோடுவரிப் பூ .- Plumbago rosea 00000000000000000000000000000000 42 செம்மல்ப் பூ - Jasminum grandiflorum செம்மல் என்னும் மலரை ஒரு தனி மலராகச் சங்கநூல் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடுகிறது. உதிர்ந்த பழம்பூக்களைச் செம்மல் எனக் குறிப்பிடும் சொல்லாட்சியும் உள்ளது. செந்நிறத்தில் காடுமேடுகளில் பூத்துக் கிடக்கும் மலரே செம்மல் எனல் பொருத்தமானது. குறிஞ்சிநிலக் கோதையர் இந்தச் செம்மல் மலரையே குவித்து விளையாடினர். அவர்கள் குவித்து விளையாடிய 99 வகையான மலர்களில் செம்மல் என்பது ஒன்று. http://ta.wikipedia....rg/wiki/செம்மல்       0000000000000000000000 43 செருந்திப் பூ - Ochna squarrosa அகநானூறு 150, குறுவழுதியார், நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது, பன்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென ஆகத்து அரும்பிய சுணங்கும், வம்புவிடக் கண்ணுருத்து எழுதரு முலையும் நோக்கி, ‘எல்லினை பெரிது’ எனப் பன்மாண் கூறிப் பெருந்தோள் அடைய முயங்கி, நீடு நினைந்து, அருங்கடிப் படுத்தனள் யாயே; கடுஞ்செலல் வாட்சுறா வழங்கும் வளைமேய் பெருந்துறைக், கனைத்த நெய்தற் கண்ப

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் - பாகம் 14

சுறுக்கருக்கு ஆப்படிச்ச புறா ஹாய் யூத்ஸ் சுறுக்கர் இந்த வீட்டுக்கு வந்த காலம் தொட்டு அவரோடை ஒரு புறா பமிலி ஒட்டெண்டால் ஒட்டு பிலாக்காய் பால் ஓட்டு. சுறுக்கற்ரை வீட்டு பல்கணி தான் அவையின்ரை சீவியம். புரியன் பெண்டில் ரெண்டு பெட்டையள் தான் அவையின்ரை பமிலி. அவை ஏன் சுறுக்கரோடை ஒட்டினவை எண்டால், சுறுக்கர் அவைக்குப் பாத்துப் பாராமல் டெயிலி சோறு கொடுக்கிறவர். பிரச்சனை என்னவெண்டால் அவை சாப்பிட்டதும் பத்தாமல் பல்கணி எல்லாம் நாஸ்த்தி பண்ணிக்கொண்டு பல்கணி குந்திலை குசாலாய் இருப்பினம். இதாலை சுறுக்கருக்கும் ஹோம் மினிஸ்ட்டரிக்கும் அடிக்கடி ராட்டல் வரும். போனவரியம் சுறுக்கர் இருக்கிற அப்பாட்மென்ரின்ரை வெளிப்பக்கம் எல்லாம் திருத்தி பெயின்ற் அடிச்சு நல்ல சோக்காய் சிண்டிக்கா சுறுக்கருக்கு தந்தித்து. சுறுக்கருக்கு வினை இங்கை தான் ஸ்ராட் பண்ணீச்சுது. வெளியாலை திருத்தி பெயின்ற் அடிச்சாப் பிறகு புறா பமிலி இருக்கிற குந்து சின்னனாய் போச்சுது. அவையும் வேறை இடங்களுக்கு போற நோக்கம் சிந்தனையில்லாமல் அந்த சின்ன குந்திலை இருந்து கொண்டு பெயின்ற் அடிச்ச குந்தை நாஸ்த்தி பண்ணி கொண்டிருக்கினம்.

சிக்கிய மீனும் சில்லெடுத்த பெயரும்- இறுதிப்பாகம்

வணக்கம் வாசகர்களே  !!! வாடைக்காற்றுக் காலம் முடிவடைந்து கொண்டல் கற்று வீசுவதாலும் , எனது றோலறில் ஏற்பட்ட தொழில் நுட்பக்கோளாறினாலும் , எனது மடிப்பு வலையில் ஏற்பட்ட பொத்தல்களை சீர்செய்வதற்குமாக எனது றோலரை பிரான்சின் வடமேற்கு கோடியில் இருக்கும் லு ஹார்வ் ( LE HARVE ) இறங்கு துறைக்குத் திருப்புகின்றேன். உண்மையில் இந்ததொடர்  மிகவும் கடினமானது . ஏனெனில் மீன்களின் முக அமைப்பு எல்லாமே ஏறத்தாள ஒன்றாக இருக்கும். அத்துடன் இந்த மீன்களைப் படம் பிடித்த புகைப்படக்கலைஞர்களது கோணங்களும் வித்தியாசப்படும். ஆனாலும், பொறுமையுடன் வாசித்த வாசகர்களுக்கு  மிக்க நன்றி . நேர காலங்கள் கூடி வரும் வேளையில் இன்னுமொரு தொடரில் உங்களைச் சந்திக்கின்றேன். நன்றி. கோமகன் 0000000000000000000000000000 40 கொள்ளுக் கலவாய் -comet grouper-Epinephelus morrhua படத்திலுள்ள மீனுக்கான தூயதமிழ் " கொள்ளுக் கலவாய் மீன் "ஆகும் .இந்த மீன் பற்றிய மேலதிக தகவலுக்கு இங்கே நுளையுங்கள் . http://en.wikipedia....i/Comet_grouper 0000000000000000000000000000 41 சேவல் மீன் -lion fish-Pterois படத்திலுள்ள மீனு

சிக்கிய மீனும் சில்லெடுத்த பெயரும் 03

31 கிளிமூக்கு மீன் அல்லது கிளி மீன் - The bicolor parrot fish - Cetoscarus bicolor இந்தப் படத்தில் உள்ள மீனின் தூய தமிழ் பெயர் " கிளிமூக்கு மீன் " ஆகும் . இதை "கிளி மீன்" என்றும் சொல்வார்கள் .  மேலும் இந்த மீனைப் பற்றி அறிவதற்கு இந்த இணைப்பினுள் செல்லுங்கள் . http://en.wikipedia....iki/Parrot_fish 0000000000000000000000000 32 கொம்பன் சுறா அல்லது உழவாரச்சுறா-HAMMERHEAD SHARK- Sphyrène இந்தப்படத்திலுள்ள மீனுக்குரிய தூய தமிழ் கொம்பன் சுறா மீன் ஆகும். இந்த மீனை உழவாரச்சுறா என்றும் அழைப்பார்கள் . இந்தவகையான சுறா மீன் அழிந்து கொண்டிருக்கும் இனமாக கண்டறியப்பட்டுள்ளது . சுறா மீன் பலவகைகளில் காணப்படுகின்றது . அதாவது , பால் சுறா ( Baby Shark ) , கட்டைச் சுறா, பெருந்தலைச் சுறா, கருமுடிச் சுறா ( black shark ) கோர சுறா ( Broadfin Shark ), குண்டன் சுறா ( black tip shark ,grey shark ) குமரிச் சுறா ( zebra shark ) பிள்ளைச் சுறா ( spade nose shark ) , புலிச்சுறா, வள்ளுவன் சுறா ( tiger shark ) , வழுக்குச்சுறா ( yellow dog shark ) என

சர்வதேச மகளிர் தினமும் பெண்விடுதலையும் ஒரு பார்வை

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி எனது மனதில் தோன்றிய சில எண்ணசிதறல்களைப் பகிரலாம் என எண்ணுகிறேன். முதலில் இந்த விடயத்தை அலச முதல் பெண் விடுதலை அல்லது பெண்ணியம் தொடர்பாக நான் நேர்காணல் செய்த புலம்பெயர் இலக்கிய ஆளுமைகள் பதிவு செய்த கருத்துக்களைப் பார்வையிடலாம். 000000000000000000000000000 " எங்கள் நாடுகளில் மட்டுமல்ல, உலகளாவிய எல்லா நாடுகளிலுமே, பெண்களுக்கான முழு உரிமைகளோ, அங்கீகாரங்களோ இன்னும் கிடைக்கவேயில்லை. கொஞ்ச நாட்களுக்குமுன், அமெரிக்க இராணுவப் பிரிவில் உயர் பதவிகளில் இருக்கும் பெண்கள் சிலர் வெளியிட்ட,தகவல்கள் எல்லோரையும் அதிர்வடையச் செய்தன. இந்தப் பெண்களுக்கு மேலான பதவிகளில் இருக்கும் ஆண்அதிகாரிகளால் பாலியல் சீண்டுதல்களுக்கு ஆளானதை அவர்கள் பகிரங்கமாக வெளியிட்டனர்.  மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் என்று இன்னும் என்னென்னவோ சொல்லிப் பெண் என்ற காரணத்துக்காகப் பெண்கள் பலவழிகளிலும் கொடுமைப்படுத்தப்பட்டு, அடிமைப்பட்டுக் கிடப்பது தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. இன்னமும் பலநாடுகளில் பெண்களின் கல்வி மறுக்கப்பட்டு ஒரு மூலைக்குள் வைக்கப்படும் அநியாயமும் தன்பாட்டில் கேட்பாரி

சிக்கிய மீனும் சில்லெடுத்த பெயரும் 02

11 ஊசிப்பாரை - big eye trevally  இந்த மீனுக்குரிய தூயதமிழ் " ஊசிப்பாரை மீனாகும் ".எல்லோருமே பாரை மீன் என்று சொல்லியிருக்கின்றீர்கள் ஆனால் ஊசிப்பாரை (dusky trevally, big eye trevally,) ,கட்டாப் பாரை ( leather skin fish, leather jacket fish, queenfish ) , கூனிப்பாரை ( cleftbelly trevally ) , தோல் பாரை (Malabar trevally ) , மஞ்சள் கிள்ளுப் பாரை ( giant trevally, yellowfin trevally) , வெங்கடைப் பாரை ( horse mackerel ) என்று பாரைமீனில் பலவகை உள்ளன. நான் போட்ட படம் ஊசிப்பாரை மீனாகும். இந்த மீன் பற்றிய மேலதிக விளக்கங்களுக்கு இங்கே செல்லுங்கள். http://en.wikipedia.org/wiki/Trevally 000000000000000000000000000000 12 எலிச்சூரை மீன் - frigate tuna- Auxis thazard thazard  இந்த மீனுக்குரிய தூயதமிழ்ப்பெயர் " எலிச்சூரை மீன் " ஆகும். இந்தச் சூரை மீனில் சூரை ( Choorai Little Tunny), நீலத் துடுப்புச் சூரை ( Blue fin tuna ), சூரை கீரை மீன் (Keerai, Kerai Yellow Tuna, Yellowfin Tuna ), எலிச்சூரை மீன் (frigate tuna) என்று பலவகைப்படும் . இந்த மீன்பற்றிய மே