Skip to main content

Posts

வேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 1- 9-வாணிகம் வளர்த்த மண்-வீரம் விளைத்த மண்

மனிதர்கள் தங்கள் மனவலிமையையும் உடல் வலிமையையும் நம்பி வாழ்ந்த காலம் அது. திரை கடலோடித் திரவியம் சேர்ப்பதென்பது, தொலைதூரத்து நாடுகளின் போர்களங்களுக்குச் சென்று மீள்வதைப் போன்றது. கீழைக் கடலில் கிழக்கு நோக்கிப் புறப்பட்டால் எதிர்க்கரை காண்பதற்கு, வாரங்களல்ல-மாதங்கள் காத்திருக்க வேண்டும். மாநக்கவரம் தீவுகளில் சில தினங்கள் தங்கி மீண்டும் கிளம்பினால், ஒரே நீலக்கடல்,நீலவானம், திரும்பிய பக்கமெல்லாம் நீல நிறந்தான். சார்ந்த காற்று வீசத் தொடங்கும் காலங்களில்தான் பாய் மரங்களை அவிழ்த்துக் கொண்டு துடுப்புப் போடுவார்கள். சார்ந்த காற்று எதிர்க்காற்றாக மாறாதிருக்க வேண்டும்; கடல் அலைகள் மலைச் சிகரங்களின் உயரத்துக்கு எழும்பாதிருக்க வேண்டும். இன்னும் மறைந்து மோதும் கடற்பாறைகள், முதுகால் கலம் கவிழ்க்கும் திமிங்கிலங்கள், துள்ளித்தாக்கும் சுறா மீன்கள்,நள்ளிரவில் கொள்ளை கொள்ளும் கடற் கள்வர்கள்-இவ்வளவு தொல்லைகளையும் கடந்து செல்ல வேண்டும், கடந்து திரும்பவேண்டும்...இதில் நம் தமிழ்நாட்டு வணிகர்கள் என்றுமே சளைத்தவர்களல்லர். ஐயவீர நாச்சியப்பரைச் சேர்ந்தவர்கள் கடல் வாணிகத்திலும் தேர்ந்தவர்கள்; தரை வாணிகத்தில...

வேங்கையின் மைந்தன் - புதினம்- பாகம் 1 , 8. மந்திராலோசனை

சோழ மண்டலத்தின் நானா திசைகளிலிருந்தும் கூற்றத் தலைவர்களும் வளநாட்டுத் தலைவர்களும், ஊர்ச்சபைத் தலைவர்களும் தஞ்சை அரண்மனையில் வந்து குழுமிய வண்ணமாக இருந்தனர். அவர்களுக்கு முன்பே மாதண்ட நாயகர்களும், பெருந்தனத்து அதிகாரிகளும் அங்கு வந்துகூடித் தமக்குள் ஆலோசனைகள் நடத்த முற்பட்டனர். மாமன்னர் இராஜேந்திரர் சக்கரவர்த்திகளாக முடி சூட்டிக் கொண்ட பிறகு, இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டியிருந்தது இதுவே முதன்முறை. எண்ணிக்கையில் பெருத்த பொது மக்களின் கூட்டமல்ல இது. மக்களை வழிநடத்திச் செல்லும் வல்லவர்களின் கூட்டம். பொறுக்கி எடுக்கப்பெற்ற மனித மணிகள் தஞ்சைத் தலைநகரில் ஒரு நோக்கத்துக்காக ஒன்று திரண்டிருந்தன. நிரம்பிவழிந்த விருந்தினர் மாளிகைகள் போதாமல், அரண்மனைக் கோட்டைக்குள்ளிருந்த உடன் கூட்டத்தினரின் மாளிகைகளிலும் வசதிகள் செய்து கொடுத்திருந்தார்கள். பெரிய உடையார் இராஜேந்திரரும், மதுராந்தகவேளார் முதலியவர்களும் கொடும்பாளூரிலிருந்து இளங்கோ திரும்பிய மறுநாளே தஞ்சைக்குத் திரும்பிவிட்டனர். விருந்தினர்களைஉபசரிக்கும் பணியில் நூற்றுக்கணக்கான ஏவலாட்களை வைத்துக்கொண்டு பம்பரமாய்ச் சுழன்று வந்தான் இளங்கோ. இராஜேந்...

வேங்கையின் மைந்தன் - புதினம் -பாகம் 1 , 7. இளங்கோவின் நண்பன்

மூவர் கோயிலின் அர்த்தஜாமத்து மணியோசை கணீரென்று காற்றில்சுழன்று வந்து, கொடும்பாளூர் நகர மாந்தரின் மனத்தில் புனிதமானதொரு சலனத்தை எழுப்பத் தொடங்கியது. மணியோசை கேட்ட மாமன்னர் தாம் சாய்ந்திருந்த கட்டிலிலிருந்து கீழே குதித்து, கோயிலின் பக்கம் திரும்பி நின்று பயபக்தியுடன் கரம் குவித்தார். மதுராந்தக வேளாரும், வல்லவரையர் வந்தியத் தேவரும் தங்கள்தங்கள் பேச்சை நிறுத்திக் கொண்டு, அவ்வாறே இறைவனுக்கு அஞ்சலி செலுத்தினர். “உணவு சித்தமாயிருக்குமே?” என்று கேட்டார் இராஜேந்திரர், அதுவரையில் மணியோசைக்காகக் காத்துக் கொண்டிருந்தவர் போல். மேல்மாடக் கூடத்தைவிட்டு மூன்று பெரியவர்களும் கீழே இறங்கி வந்தார்கள். அவர்களோடு சேர்ந்து உண்பதற்காக இளங்கோவேளும் பொறுத்துக் கொண்டிருந்தான். அவனைத் தமக்கு அருகில் உட்கார வைத்துக்கொண்டு கலகலப்பாகப் பேசிய வண்ணமே விருந்தைச் சுவைக்கத்தொடங்கினார் சக்கரவர்த்தி. விருந்து அற்புதமான விருந்து. முக்கனியும் தேனும் பாலுமாக இலை நிறைந்த அறுசுவைப் பண்டங்கள். இளங்கோவிடம் அவனுடைய நண்பனின் உணவு முடிந்ததா என்பது பற்றிக் கேட்டார் மாமன்னர். முன்னரே விருந்தினர் மாளிகைக்கு உணவனுடைப்பிவிட்டதாகக் கூ...

வேங்கையின் மைந்தன்-புதினம்-பாகம் 1- 6-வாளின் மேல் ஆணை

பூங்காவின் மையமண்டபத்துக்கு அடுத்தாற் போலிருந்த சின்னஞ்சிறு செய்குளம் அல்லிக் கொடிகளால் நிரம்பி வழிந்தது. எதிரிகளின் மார்பில் தோய்ந்து குருதி குடித்த வேல்முனைகளைப் போன்று செவ்வல்லி மொட்டுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குத்திட்டு நின்றன. அந்தச் செய்குளத்தின் மேல்புறத்தில் பத்துப் பதினைந்து வாழை மரங்கள் செழித்து வளர்ந்திருந்தன. குலை தள்ளி நின்ற சேரநாட்டுச் செங்கதலியின் பட்டை ஒன்றை வெட்டியிழுத்தான் இளங்கோ. அதை எடுத்து நறுக்கிக் கொண்டு திரும்புவதற்குள் அருள்மொழியே குளத்தருகில் வந்து விட்டாள். அல்லிக்கொடிகளிடையே பளிங்கெனத் தெளிந்து நின்ற நீர்ப்பரப்பில் அவளுடைய உருவம் அற்புதமான புத்தெழிலுடன் பிரதிபலித்தது. மெல்ல அந்தச் செய்குளத்தின் கரைமீது அமர்ந்து அல்லிக் கொடிகளிடையே துள்ளித்திரியும் கெண்டை மீன்களை வேடிக்கை பார்த்தாள் அருள்மொழி. “எங்கே, இப்படிச் சற்று உங்கள் விரலை நீட்டுகிறீர்களா, இளவரசி?” வினயமாக முகத்தை வைத்துக் கொண்டு அவளுக்குச் சிகிச்சை செய்வதற்காக அவள் முன்னே மண்டியிட்டு உட்கார்ந்தான் இளங்கோ. அவனுடைய முரட்டுக்கரங்களால் பிழியப் பெற்ற வாழைச்சாறு, அவளது மென் விரலில் தேனாகச் ச...

வைரவ சுவாமியும் கோனாச்சானாவும் - சிறுகதை

வைரவ சுவாமியை எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அவருக்கு ஒரு சின்னப் பிரச்சினை, இல்லைக் கொஞ்சம் பெரிய பிரச்சினை. அதைப் பிறகு பார்ப்போம். இப்ப கோனாச்சானா, கோனாச்சானா ஒரு தீவிர கடவுள் பக்தர். முருகன் சிவபெருமான், பிள்ளையார், உலகத்தில் உள்ள எல்லா அம்மன்கள், வைரவர்கள் என்று எல்லாக் கடவுளரையும் விட்டுவைக்காமற் கும்பிடுவார். இயேசு பிரானைத் தெரியாத ஊரிற் பிறந்துவிட்டார். இல்லாவிட்டால் அவருக்கும் ஒரு கும்பிடு போடாமல் இருக்கமாட்டார். கோனாச்சானா அவரிற்கு அவரின் அப்பா/அம்மா இட்டபெயராக இருக்கமுடியாது. கோ.சங்கரப்பிள்ளை தான் சுருங்கி கோனாச்சானா என்றாய் விட்டது. என்றாலும் ஊரில் முந்தநாள் மீசை முளைத்த பெடியளுக்கோ இல்லாவிட்டால் திரு கோ.சங்கரப்பிள்ளைக்கு அப்பா வயதில் உள்ளவர்களுக்கோ அவரின் இயற்பெயர் தெரியாது என்றுதான் சொல்வார்கள். எலக்சன் சமயத்தில் ஓட்டுப் போடுமிடத்தில்தான் இவரின் இயற்பெயர் அழைக்கப்படும். சங்கக்கடை மனேச்சர்கூட "கோவன்னா சங்கரப்பிள்ளை" என்று கூப்பன் மட்டையைப் பார்த்து முணுமுணுப்பாக வாசித்துவிட்டு உரத்து "கோனாச்சானா" என்றுதான் அழைப்பார். முறையாகப் பார்த்தால் "கோ...

வேங்கையின் மைந்தன் - புதினம் - பாகம் 1 , 5. நிலவிலே ஒரு பொற்சிலை.

இள மாம்பிஞ்சை இரு கூறாகப் பிளந்தெடுத்தாற் போன்ற கண்கள் அருள்மொழியின் கண்கள். அந்த மாவடுக் கண்கள் இப்போது பெருஞ்சினத்தால் சிவப்பேறியிருந்தன. கொடும்பாளூர் மேல்மாடக் கூடத்திலிருந்து புறப்பட்டு, சூறாவளியைப்போல் கீழே இறங்கி வந்தவள்நேரே அந்தப்புரத்துக்குள் நுழையாமல் ஒரு கணம் தாமதித்தாள். வழக்கமாக உணர்ச்சி வயப்படாதவள் அருள்மொழி. ஆனால், ஒரு சிறிய நிகழ்ச்சிக்காக இன்று அவள் மனத்தைப் படாதபாடு படுத்திக்கொண்டாள்.கொடும்பாளூர் மதுராந்தக வேளாரை அவளால் மன்னிக்கவே முடியவில்லை. ‘முதன் முறையாகப் போர்க்களம் செல்வதற்கு அனுமதி கேட்கிறார் கொடும்பாளூர் இளவரசர். என் தந்தையாரிடம் அவர் கேட்கும்போது, பெரியவேளார் ஏன் குறுக்கே புகுந்து இப்படி ஒரு அவச்சொல் சொல்ல வேண்டும்! ‘வெற்றியோடு திரும்பி வா’ என்று சொன்னால் இவருடைய வீரத்துக்கு இழுக்கு வந்து விடுமா, என்ன? இளவரசர் திரும்பி வராவிட்டால் இவருக்குப் பின் இந்தக் கொடும்பாளூர் முடியை வேறு யார் தாங்குவார்களாம்! இப்படியெல்லாம் எண்ணித் தன்னை வாட்டிக் கொண்ட அருள்மொழி, இந்தக் கொடும்பாளூர்க்காரர்களே மூர்க்கத்தனமான போர் வெறியர்கள் என்று ஒரு முடிவுக்கு வந்தாள். ...

‘என்னளவில் நானொரு சமகாலத்தை ஆவணப்படுத்தும் ஓர் எளிய கடத்தி’-நேர்காணல்-பாலைவன லாந்தர்-கோமகன்

“எனக்கு வசப்பட்டிருக்கும் எழுத்துக்கள் முதலில் என்னை திருப்தி செய்யவேண்டும். இந்த சுயநலமான விதிதான் எனது நிலையில் நான் கண்டடைந்த பொருளும் கூட. எண்ணிலடங்கா எழுத்தாளர்களுக்கு மத்தியில் நான் ஒப்பிட்டு மதிப்பிட்டு பார்க்க எழுதுவதை விட என்னை ஆற்றுப்படுத்தும் எழுத்துக்களே எனக்கு மிகவும் விருப்பமானதாக இருக்கிறது. நீங்கள் உங்கள் கலைகளுக்கு செய்யும் ஆகப்பெரிய மரியாதை அதை அதற்கான தன்போக்கில் செலுத்தும் தன்வித்தையை கையாளும் உளப்பாங்கே”. என்று போர் சிந்து படிக்கும் இளைய தலைமுறையைச் சேர்ந்த பாலைவன லாந்தர், ‘உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள்’,’லாடம்’,’சிகப்புத்தடங்கள்’ என்று இதுவரையில் மூன்று நூல்களை தமிழ் எழுத்துப்பரப்பிற்கு தந்திருக்கின்றார். நடுவின் தமிழக சிறப்பிதழுக்காக நான் பாலைவன லாந்தருடன் செய்து கொண்ட கதையாடல் இது . கோமகன் 00000000000000000000000 ஒரு சிறிய அறிமுகத்துடன் இந்த நேர்காணலை தொடருவோமே …… என்னுடைய இயற்பெயர் நலிஜத், பிறந்தது காயல்பட்டிணம் தூத்துக்குடி, வளர்ந்தது சென்னை, பள்ளிப்படிப்பை முழுவதும் முடிக்கும் முன்பே திருமணம். சிறிய வயதில் இருந்தே தரைமட்ட சமூகத்தின் மீதான அக்கறைகளுடன...