சோழ மண்டலத்தின் நானா திசைகளிலிருந்தும் கூற்றத் தலைவர்களும் வளநாட்டுத் தலைவர்களும், ஊர்ச்சபைத் தலைவர்களும் தஞ்சை அரண்மனையில் வந்து குழுமிய வண்ணமாக இருந்தனர். அவர்களுக்கு முன்பே மாதண்ட நாயகர்களும், பெருந்தனத்து அதிகாரிகளும் அங்கு வந்துகூடித் தமக்குள் ஆலோசனைகள் நடத்த முற்பட்டனர். மாமன்னர் இராஜேந்திரர் சக்கரவர்த்திகளாக முடி சூட்டிக் கொண்ட பிறகு, இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டியிருந்தது இதுவே முதன்முறை. எண்ணிக்கையில் பெருத்த பொது மக்களின் கூட்டமல்ல இது. மக்களை வழிநடத்திச் செல்லும் வல்லவர்களின் கூட்டம். பொறுக்கி எடுக்கப்பெற்ற மனித மணிகள் தஞ்சைத் தலைநகரில் ஒரு நோக்கத்துக்காக ஒன்று திரண்டிருந்தன. நிரம்பிவழிந்த விருந்தினர் மாளிகைகள் போதாமல், அரண்மனைக் கோட்டைக்குள்ளிருந்த உடன் கூட்டத்தினரின் மாளிகைகளிலும் வசதிகள் செய்து கொடுத்திருந்தார்கள். பெரிய உடையார் இராஜேந்திரரும், மதுராந்தகவேளார் முதலியவர்களும் கொடும்பாளூரிலிருந்து இளங்கோ திரும்பிய மறுநாளே தஞ்சைக்குத் திரும்பிவிட்டனர். விருந்தினர்களைஉபசரிக்கும் பணியில் நூற்றுக்கணக்கான ஏவலாட்களை வைத்துக்கொண்டு பம்பரமாய்ச் சுழன்று வந்தான் இளங்கோ. இராஜேந்...
எனது தளத்தில் வெளியாகும் ஆக்கங்களை எங்கும் பகிர்ந்து கொள்ளலாம்