ஐரோப்பாவில் ஆண் என்றாலும் பெண் என்றாலும் அவர்களது தந்தையின் பெயர் சொல்லி அழைப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றே சொல்வேன். இதை இன்னும் இலகுவாக சொன்னால் ஆணுக்கு தந்தையின் வழி பெயர் தொடர்ச்சியும் ( பரம்பரையை நினைவு கூரல் ) அதே போல் பெண்ணுக்கு அவர்களது தந்தையின் பெயரை சொல்லி அழைப்பதும் நடைமுறையில் உள்ளது. அதாவது முதற் பெயரில் தந்தையின் பெயரும் , பெயரில், மகன் அல்லது மகளது பெயரும் இணைத்து எழுதுவது அழைப்பது வழமை. இந்த நடைமுறை திருமணமானாலும் தொடரும். ஆனால் இவர்களது தேசிய அடையாள அட்டையில் இன்னாரின் மனைவி அல்லது இன்னாரின் கணவன் என்ற இன்னுமொரு பகுப்பு சேர்க்கப்பட்டிருக்கும். இந்த அழைப்பு முறையானது குடும்பங்களின் தொடர்ச்சியினை பாதுகாப்பதற்கு உகந்தது. ஆசிய குடும்ப முறைமையில் பெண் திருமணமானவுடன் இதுவரைகாலமும் பேணப்பட்டு வந்த அவளது தந்தையின் பெயர் நீக்கப்பட்டு அந்த இடத்தில் அவளது கணவனின் பெயர் ஒட்டிக்கொள்ளும். இந்த முறையானது அவளது அடையாளப்படுத்துகின்ற அடிப்படை உரிமையை முற்றுமுழுதாக நிராகரிக்கின்றது . ஆனால் ஆணுக்கு மட்டும் அப்படி நேராது கட்டியமைக்கப்பட்டியமைக்கப்பட்டதுதான் ஆசிய குடும்ப அமைப்பு ...
எனது தளத்தில் வெளியாகும் ஆக்கங்களை எங்கும் பகிர்ந்து கொள்ளலாம்