இராஜேந்திரர் ஆற்றிய வீர உரையின் எதிரொலி சோழப் பேரரசின் மூலை முடுக்குகளிலெல்லாம் முழங்கத் தொடங்கியது. ஊர்தோறும் உள்ளஅத்தாணி மண்டபத்தின் முரசுகள் அதிர்ந்தன. திரள் திரளாக மக்கள்கூட்டம் ஊர்ச்சபைத் தலைவர்களின் வாயசைவுக்குக் காத்திருந்தது. மாமன்னரின் செய்தியைத் தலைவர்கள், கலைநயத்தோடு மக்களுக்கு எடுத்துரைத்தார்கள். சக்கரவர்த்தியின் முகப் பொலிவு அவரது நெடுந்தோற்றம்,ஏறுநடை, வீரப்பார்வை, செங்கோலின் பொன்னொளி இவ்வளவையும் வர்ணித்துவிட்டு, பெரும் சபையின் பேரெழில் காட்சியை மக்கள் கண்முன்னே கொண்டு வந்தார்கள். பிறகு அங்கு மாமன்னரின்ம ணிமொழிகள் முழங்கப்பெற்றன. “உழைப்பில்லையேல் ஊணில்லை; போரில்லையேல் வாழ்வில்லை!”- எங்கும் இதே பேச்சு; இந்தப் பேச்சே அவர்தம் உயிர் மூச்சு. வான்மழை கண்ட பயிரெனச் சோழ வளநாடு தன் வாழ்க்கைப் போராட்டத்தின் மூலசக்தியை வளர்க்கத் தொடங்கியது. எங்கு பார்த்தாலும் புத்துணர்ச்சி, எங்கு திரும்பினாலும் புதிய ஆவேசம், எங்குமே சுறுசுறுப்பின் களியாட்டம்! இளங்கோவேள், தஞ்சை மாநகரைச் சூழ்ந்திருந்த சிற்றூர்களில் சில தினங்கள் உலவிவிட்டு அரண்மனைக்கு வந்து சேர்ந்தான். மாமன்னரைத் தனிமையில் கண்டு மக
எனது தளத்தில் வெளியாகும் ஆக்கங்களை எங்கும் பகிர்ந்து கொள்ளலாம்