இன்று மதியம் ஒரு அலுவலாக லா பேட்டைக்கு (லாச்சப்பல்) செல்ல வேண்டியிருந்தது. காரியத்தை எனது நண்பர் மனோவின் அச்சத்திலேயே செய்ய வேண்டியிருந்தது. காரியம் முடிந்த பின்னர் எனக்கும் மனோவிற்கும் இடையில் தேநீர் குந்திக்கொள்ள, உரையாடல் தேநீரின் ஆவியுடன் கலந்து மேலெழுந்தது. நீண்டநாட்கள் இருவரும் சந்திக்காதபடியால் உரையாடலும் தேநீர் ஆவியைப் போல் சுற்றிச்சுழன்றது. எமது பேச்சுக்கள் சமகால இலக்கிய செல்நெறிகள், புதிய வருகைகள் என்று பலதையும் பிரித்து மேய்ந்து முகநூலில் வந்து நின்றது. நான் மனோவினது முகநூற்செயற்பாடுகள் குறித்த எனது ஆதங்கத்தை முன் வைத்தேன். அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. முன்னர் மனோ ஒரு பெரிய இலக்கியத்தளத்தின் செயற்பாட்டாளர். ஒன்றிற்கு இரண்டு இலக்கிய சஞ்சிகைகளுக்கு ஆசிரியராக இருந்தவர். இன்று அவர் பொதுவெளியில் மௌனமாக இருப்பது எனக்கு உடன்பாடான விடயமல்ல. அப்பொழுது அவர் சொன்னார் , "கோமகன் நீங்கள் தவறாக புரிகின்றீர்கள். எனக்கு முகநூல் ஒரு பெரிய நாவலை வாசிக்கின்ற உணர்வை தினமும் ஏற்படுத்துகின்றது. நீங்கள் ஒரு நாவலை எழுதும்பொழுது அதற்கு வேண்டிய கதைமாந்தர்களை உங்கள் பார்வையிலேயே வடிப்பீர்க
எனது தளத்தில் வெளியாகும் ஆக்கங்களை எங்கும் பகிர்ந்து கொள்ளலாம்