Skip to main content

Posts

Showing posts from March, 2019

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் – அறிவியல் -இறுதிப்பாகம் 05-50- 60

51 எட்டி மரம் அல்லது காஞ்சிரை மரம் -The strychnine tree , nux vomica, poison nut, semen strychnos and quaker buttons – Strychnos nux-vomica எழுதியவா றேகாண் இரங்குமட நெஞ்சே கருதியவா றாமோ கருமம்-கருதிப்போய்க் கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காயீந்ததேல் முற்பவத்திற் செய்த வினை. எட்டி மரத்தின் பட்டை, காய், இலை முதலான அனைத்தும் நச்சுத்தன்மை வாய்ந்தவை. ‘எட்டிக் கசப்பு’ என்னும் வழக்கு இதன் சுவையை விளக்கப் போதுமானதாகும். எட்டிக்காயைக் ‘காஞ்சிரங்காய்’ என்று ஔவையார் குறிப்பிடுகிறார். வேண்டியனவற்றையெல்லாம் தரும் கற்பக மரம் உண்டாரைச் சாகச்செய்யும் காஞ்சிரங்காயை (எட்டுக்காயை)த் தந்தால் என்செய்வோம் எனக் குறிப்பிடுகிறார். வெள்ளாடு இந்தத் தழையை ஓரிரு வாய் கடிக்கும். அன்று அதன் பால் சற்றே கசக்கும். என்றாலும் அந்தப் பாலில் நச்சுத்தன்மை இல்லை. எட்டி மரத்தின் பாகங்களை நாட்டு மருந்துகளில் சேர்த்துகொள்வர். எட்டி மரம் தெய்வீக மூலிகைகளில் ஒன்றாகும். எட்டி மரம் ஒரு நடுத்தரமரம். எல்லா நிலங்களிலும் வளரக் கூடியது. இது எப்பொழுதும் பசுமையாக இருக்கும். இது சுமார் 18 அடி உயரம் வரை வளர...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும்-அறிவியல்-பாகம் 04-40- 50

31 உழிஞை , முடக்கொத்தான் , முடக்கறுத்தான் ,அல்லது முடர்குற்றான் ( the balloon plant , love in a puff winter cherry , or Cardiospermum halicacabum முடக்கொத்தான் ஒரு மருத்துவ மூலிகைக் கொடியாகும். இது உயரப் படரும் ஏறுகொடி. இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். மலர்கள் சிறிய வெள்ளை நிற இதழ்கள் கொண்டவை. இக்கொடியின் வேர், இலை, விதை ஆகிய மருத்துவப் பயன்பாடுடையவை. முடக்கற்றான் கொடிவகையைச் சேர்ந்தது. இது இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது.குளிர்ந்த ஈரச்சத்துள்ள இடத்தில்தான் முடக்கற்றான் பயிராகும்.தோட்டங்கள், வீட்டு வேலி இவைகளிலுள்ள பெரிய செடிகளின்மேல் படர்ந்து வளரும். உஷ்ண பிரதேசங்களில் முடக்கற்றான் கொடியைப் பார்க்கமுடியாது. வளமான இடங்களில் இந்தக் கொடிசற்று பெரிய இலைகளுடன் செழிப்பாகப் படரும். இந்தக் கொடியின்தண்டும் இலைக் காம்பும் மெல்லியதாகவே இருக்கும். இது ஏறுகொடியாக சுமார் 3.5 மீ. அளவு படரும். இதன் தண்டு, இலை, காம்பு எல்லாம் நல்ல பச்சை நிறமாகவே இருக்கும். இதன் பூ வெண்நிறமாக இருக்கும். இதன் காய் மூன்று பிரிவாகப் பிரிந்து உப்பலான மூன்று தனித் தனி அறைகளைக் கொண்ட...