Skip to main content

Posts

அறத்துப்பால்-பாயிரவியல்-நீத்தார் பெருமை-The Greatness of Ascetics -Grandeur de ceux qui ont renoncé au monde 21-30

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பணுவல் துணிவு. 21 ஒழுக்கத்தில் நிலையாக நின்று பற்று விட்டவரின் பெருமையைச் சிறந்ததாகப் போற்றிக் கூறுவதே நூல்களின் முடிவாகும். எனது பார்வை: மனுசனாய் பிறந்தவன் சுயநலம் இல்லாமல் இருக்கறது தான் திறமான சீவியம். அதைத்தான் வரலாறுகளும் நூல்களும் கியாதியாய் சொல்லும் கண்டியளோ. இப்ப நீங்களும் இப்பிடிச் சீவிச்சியளெண்டால் , உங்களைப்பற்றியுமெல்லே நாலைஞ்சு பேர் கதைச்சுகதைச்சு உங்களைப்றி யூனியிலேயே ஒரு பாடத்திட்டமாக்கிப் போடுவங்கள் எண்டால் பாருங்கோவன். இல்லாட்டில் ஒரே ஒரு புத்தகம் படத்தோடை உங்களைப் பற்றி வரும், அதுதான் கல்வெட்டு. வசதி எப்பிடி? The settled rule of every code requires, as highest good,Their greatness who, renouncing all, true to their rule have stood. Les Ecritures exaltent au dessus de tout autre Bien la grandeur de ceux qui ont renoncé au monde et mènent une vie de discipline. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. 22 பற்றுக்களை விட்டவரின் பெருமையை அளந்து சொல்வது என்பது , உலகில் இதுவரை பிறந்

அறம் பாடியது-கவிதை

நெல்லும் உயிரல்ல நீரும் உயிரல்ல முல்லை நிலத்தில் அலைந்து உழன்றவரை கொல்லும் எறிகணைகள் கூட்டாக வீசியவன் மன்னாதி மன்னனென மார்தட்டிக் கொள்கின்றான் எண்ணிக்கை யாருக்கு வேண்டும்? மொழியால் அமைந்த நிலம் எனச் சங்கத் தமிழோடும் செம்மொழியின் வனப்போடும் புதைகுழிக்குள் போனவர்கள் நாங்களன்றோ? குழந்தைகளின் மென்கரத்தை அரிந்து நெருப்பில் எறிந்தவனுக்குத் தாம்பூலம் தந்து தாலாட்டுப் பாடி கால்கள் வருடி தலைமயிருக்கு நிறம் தீட்டி அவன் பேழ் வயிறை வழிபட்ட அப்பாலும் அடிசார்ந்தார் இப்பாலும் இருப்போர்கள் முப்பத்து முக்கோடி படையினர்கள் எல்லோரும் பட்டழிவதன்றி வேறென்ன கேட்கும் என் கவிதை? நன்றி : சேரனின் கவிதைகள் நன்றி :http://www.kalachuva...145/page114.asp

சந்தியாவிற்கு . …-கவிதை

ஊடகவியலாளரும், கேலிச்சித்திர ஓவியருமான, மனித உரிமைவாதியுமான பிரகித் எக்னலியகொட இலங்கை அரசால் கடத்தப்பட்டு இன்றுடன் (24.01.2011) ஒரு வருடமாகிறது. இலங்கையில் கருத்துச்சுதந்திரம் மறுதலிக்கப்பட்டு, ஊடாகவியலாரினதும், மாற்றுக்கருத்தாளர்களினதும் வாழ்வு அச்சம் தருவதாகவுயுள்ளது. அரசின் மனிதவுரிமை மீறல்களிற்கு குரல்கோடுப்போருக்கு எதிரான தாக்குதல்கள் மும்முரப்படுத்தபட்ட சூழலில் சுதந்திரமாக கருத்து வெளியிடும் உரிமை மறுக்கப்பட்டுவருகின்றது. 2006 ஆண்டிலிருந்து 14 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல ஊடகவியலாளர்கள் கைதுசெய்யப்பட்டும், கடத்தப்பட்டும், தாக்குதல்களிற்கு உள்ளாக்கப்பட்டுமுள்ளனர்.Sunday Leader ஆசிரியர் லசந்த விஜேதுங்க கொல்லப்பட்டு இரண்டு ஆண்டுகள் மறைந்துள்ளன. ஊடகவியலாளரும், கேலிச்சித்திரகாரருமான, மனித உரிமைவாதியுமான பிரகித் எக்னலியகொட இலங்கை அரசால் கடத்தப்பட்டு இன்றுடன்(24.01.2011) ஒரு வருடமாகிறது. பிரகித் பல ஆண்டுகாலமாக தனது செயற்பாடுகள் மூலம் இலங்கையில் நிலவும் அரசபயங்கரவாதத்திற்கும், மனிதவுரிமை மீறல்களிற்கும் எதிராக குரல் கொடுத்து வந்தவர். இவரது மனைவி சந்தியாவிற்கும், அவரது இரண

தமிழ் - கவிதை

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல் கழையிடை ஏறிய சாறும், பனிமலர் ஏறிய தேனும், - காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும்; நனிபசு பொழியும் பாலும் - தென்னை நல்கிய குளிரிள நீரும், இனியன என்பேன் எனினும், - தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்! பொழிலிடை வண்டின் ஒலியும் - ஓடைப் புனலிடை வாய்க்கும் கலியும், குழலிடை வாய்க்கும் இசையும், - வீணை கொட்டிடும் அமுதப் பண்ணும், குழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள் கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும், விழைகுவ னேனும், தமிழும் - நானும் மெய்யாய் உடலுயிர் கண்டீர்! பயிலுறும் அண்ணன் தம்பி, - அக்கம் பக்கத் துறவின் முறையார், தயைமிக உடையாள் அன்னை - என்னைச் சந்ததம் மறவாத் தந்தை, குயில்போற் பேசிடும் மனையாள், - அன்பைக் கொட்டி வளர்க்கும் பிள்ளை, அயலவராகும் வண்ணம் - தமிழ் என் அறிவினில் உறைதல் கண்டீர் ! நீலச் சுடர்மணி வானம் - ஆங்கே நிறையக் குளிர்வெண் ணிலவாம். காலைப் பரிதியின் உதயம் - ஆங்கே கடல்மேல் எல்லாம் ஒளியாம், மாலைச் சுடரினில் மூழ்கும் - நல்ல மலைகளின் இன்பக் காட்சி மேலென எழுதும் கவிஞர் - தமிழின் விந்தையை எழுதத் தரமோ? செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய்

மவுனத்தின் மொழிபெயர்ப்பு ! - கவிதை

சிறகு விரிச்சி பறக்குதே -மனசும் சித்தாடைக் கட்டி விரியுதே கொத்தோட பறிச்சவன் யாரடி கொண்டாட தேதியுந்தான் கூறடி. சித்திரையில் முளைத்தவனோ சினம் கொண்டே பிறந்தவனோ கத்திரியிலும் குளிரெடுக்க கற்கண்டாய் சொல் உதிர்ப்பவனோ? மலர் வனமே சென்றாலும் மணமேனோ வீசலையே- கட்டாந்தரையில் நானும் களையெடுக்கப் போனேனே.. கடுகுவெடிக்குமுன்னே காதை பொத்தி நின்றேனே களவு போனது நிஜம் தானோ கண்ணுறக்கம் மறந்ததேனோ? சொல்லுனக்காய்த் தேடித்தேடி சொப்பனத்தில் ஆழ்ந்தேனோ மவுனத்தை மொழிபெயர்க்க மல்யுத்தம் பயில்கின்றேன். மன்றாடித்திண்டாடி நானும் மயங்கித்தான் கிடக்கிறேன்! உணர்வுக்குள் உனை நிறுத்தி உன்னில் எனை தேடுகின்றேன். நன்றி: http://veesuthendral...log-post_8.html

முதலைக் கவிதை

மரம் செடி இலைகள் போல மண் வாழும் உயிர்கள் போல மூச்சுவிடத் தெரிந்த முதலை நீருக்குள் எதற்காய் போச்சு? கூடுகள் குகைகள் இன்றி நீரடியில் உறங்கலாச்சு நரிக் குகையில் சிங்கம்போகும்; குயில் முட்டை காக்கை கூட்டில்; காக்கைகள் மனிதர் வீட்டில்; புற்று மண் எறும்பு கட்ட, பாம்புக்கு அதுவே கட்டில்; உன்சுவர் எனது வீட்டில் என் கலப்பை உனது வரப்பில் அடுத்தவர் உழைப்பில் சுகிக்கும் எண்ணமே முதலைக் கில்லை நீரடி எல்லாம் இங்கே பூமித் தாய் கருப்பை போல எல்லைகள் இல்லா தேசம் திசைகூட அழியும் ஆங்கே மனிதர்கள் பிரித்துப் போட்ட நிலம் பார்த்து சோகத்தோடு அழுவதே முதலைக் கண்ணீர் தெரிந்தபின் குறை சொல்லாதீர் நன்றி : பாலகுமாரன் நன்றி : http://tnmurali.blog...nkaavithai.html

கதவு - கவிதை

கதவை மூடிக்கொண்டும் திறந்துகொண்டும் இருந்தான் ஏன் இப்படிச் செய்கிறாய்? என்று கேட்டேன் கதவு திறப்பதற்கா? மூடுவதற்கா? என்று அவன் கேட்டான் அவன் மேலும் சொன்னான் கதவுகள் சில நேரம் இமைகளாகத் தெரிகின்றன சில நேரம் பூ விதழ்களாக மலர்கின்றன சில நேரம் உதடுகளாகின்றன பயணம் முடிந்து வீடு திரும்புகிறவனுக்கும் சிறையில் கிடப்பவனுக்கும் கதவு திறப்பது என்பது ஒரே அர்த்தம் உடையதல்ல கதவுகளுக்கும் சிறகுகளுக்கும் ஏதோ இனம் புரியாத சம்பந்தம் இருக்கிறது கதவின் திறப்பிலும் மூடலிலும் கேள்வியும் பதிலும் இருக்கிறது கதவுகளில் சந்திப்பும் இருக்கிறது பிரிவும் இருக்கிறது நாம் உள்ளே இருக்கிறோமா? வெளியே இருக்கிறோமா? என்பதைக் கதவுகளே தீர்மானிக்கின்றன நாம் கதவு எண்களில் வசிக்கிறோம் மூடிய கதவு உள்ளே இருப்பவற்றின் மதிப்பை கூட்டுகிறது நம் வீட்டுக்கு மட்டுமல்ல நமக்கும் கதவுகள் உண்டு நாம் நமக்குள்ளேயே செல்லவும் நம்மைவிட்டு வெளியேறவும் ஜனனத்தில் ஒருகதவு திறக்கிறது மரணத்தில் ஒரு கதவு திறக்கிறது இரண்டிலும் நாம் பிரவேசிக்கிறோமா வெளியேறுகிறோமா கதவுதட்