Skip to main content

Posts

மனமே மலர்க - பாகம் 20

அவரவர் பாடு அவரவர்க்கு. ஒரு பூனை ஒரு நாயிடம் சொன்னது,''நண்பா,நீ முழு மனதுடன் இறைவனை பிரார்த்தனை செய்.தொடர்ந்து நீ அவ்வாறு செய்தால் ஒரு நான் இறைவன் உனக்கு அருள் புரிவார்.இதில் சந்தேகத்திற்கே இடமில்லை.இறைவனின் அருட்பார்வை உன் மீது பட்டுவிட்டால் போதும்.வானிலிருந்து எலிகள் மழையாய்ப் பொழியும்.நீ விரும்பும் அளவுக்கு அள்ளியள்ளி உண்ணலாம். ''இதைக் கேட்ட நாய்,விழுந்து விழுந்து சிரித்தது.அது பூனையிடம் சொன்னது, ''ஏ,முட்டாள் பூனையே,எனக்கு ஒன்றும் தெரியாது என்று முடிவு செய்து விட்டாயா?என் வீட்டிலும் பெரியவர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் என்னிடம் தெளிவாகத் தெரிவித்திருக்கிறார்கள்,'மனம் உருகிப் பிரார்த்தனை செய்தால் எலி மழை பொழியாது,எலும்பு மழை தான் பொழியும்.அதை நாம் ஆசை தீரக் கடித்துத் தின்று மகிழலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.'' 0000000000000000000000000000 கொல்லு அவனை.... ரோமாபுரியில் சீசர் வஞ்சகர்களால் கொல்லப்பட்டார்.எங்கு பார்த்தாலும் ஒரே கலவரம்.சீசர் கொலைக்கு உடந்தையானவர்கள் என்று யார் மீது சந்தேகம் வந்தாலும் அவர்கள் தாக்கப்பட்டனர்.சீசரின் ஆதர

மனமே மலர்க - பாகம் 18

துன்பம் நிரந்தரமாய் நீங்க... துன்பம் வரும்போது அதை அப்படியே அனுபவியுங்கள்.அதைக் கண்டு ஓட வேண்டாம்.அப்படி ஓடினால் அது உங்களைத் துரத்திக் கொண்டுதான் வரும்.அதை மறக்க நினைத்தால் அது உங்கள் மனதில் ஆழத்தில் பதுங்கி விடும்.மன வியாதிகளுக்கு மருந்து கொடுத்தால் அது உள்ள துன்பத்திலிருந்து உங்களை விலகி ஓடச்செய்யும்.அதனால் துன்பத்திலிருந்து உங்களுக்கு நிரந்தர விடுதலை கிடைக்காது.நீங்கள் துன்பத்தினால் வரும் வடுவை தைரியமாக முழுமையாகப் பார்க்க வேண்டும். உங்கள் அறையில் அமைதியான சூழ்நிலையில் தனிமையில் அமர்ந்து வேறெதிலும் மனம் ஈடுபடாது உங்கள் உள்போராட்டங்களைக் கவனியுங்கள்.உங்கள் உள்ளே உண்டான வடுவின் வலியை முழுமையாக மேலே கொண்டு வந்து உணர்ந்தால் அது உங்கள் இதயத்தைப் பிழியும்.அது மரண வலியாகத்தான் இருக்கும்.அதை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். அப்போது நீங்கள் ஒரு குழந்தை போலக் கதறலாம்.தரையில் புரண்டு அழலாம்.அப்போது அந்த வலி உங்கள் உடல் முழுவதும் பரவி இருப்பதை உணர்வீர்கள். துன்பம்,கவலை என்று ஏற்படும்போது அதை மறக்க அல்லது வெளியே தள்ள இதுவரை பழக்கப் பட்டிருக்கிறீர்கள்.அதற்கு மாறாக அதை எவ்வளவு அதிகப்

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம் -பாகம் 14

உங்களுக்கு சமயல் குறிப்பு ஒண்டு தாறன் . எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்கோ . ஊரிலை பனங்காய் பணியாரத்துக்கு மயங்காத ஆக்கள் இல்லை . இது உடம்புக்கு சத்தான பக்கவிளைவு இல்லாத பலகாரம் . ஆனால் இது இப்ப ஊரிலை வழக்கத்திலை இருந்து குறைஞ்சு கொண்டு போகிது . சரி இப்ப இதுக்கு பனங்களி செய்யவேணும் . இது கொஞ்சம் கஸ்ரம் எண்டாலும் இதிலைதான் விசயமே இருக்கு .  பனங்களி செய்யிற பக்குவம் : தேவையான சாமான் : நன்கு பழுத்த 1 அல்லது 2 பனம் பழம். பக்குவம் :  நல்லாய் பழுத்த பனம்பழுத்தை கழுவி எடுங்கோ. அதிலை இருக்கிற மூளைக் கழட்டி விடுங்கோ. பனம் பழத்தில மேலைஇருக்கிற நாரை சிறிய மேசைக் கத்தியினால் பழத்தின் மேல் பகுதியிலிருந்து நீள் பக்கமாக சீவி எடுங்கோ.கை கவனம் நார் வெட்டி துலைச்சுப் போடும் வெட்டினாப்பிறகு திருப்பியும் பழத்தை தண்ணீரிலை நல்லாய் கழுவுங்கோ பிறகு பழத்தை பிய்க்க. இரண்டு மூண்டாய் பழம் விதையோடை பிரியும். அதை பிழிஞ்சு அதிலை இருக்கிற களியை ரெண்டு கையாலையும் அமத்தி எடுங்கோ. களி தும்புகளோடை சேந்து வரும் . மெல்லிய வெள்ளைத்துணி அல்லது கண்ணறைத் துணியை வைச்சு களியை வடியுங்கோ. வடிச்ச களியை

சுவைத்(தேன்) – கவிதைகள் – பாகம் 01.

01 புத்தி தனக்கு புத்தி நுறு என்றது மீன் – பிடித்துக் கோர்த்தேன் ஈர்க்கில் . தனக்குப் புத்தி ஆயிரம் என்றது ஆமை – மல்லாத்தி ஏற்றினேன் கல்லை . எனக்குப் புத்தி ஒன்றே என்றது தவளை எட்டிப் பிடித்தேன்- பிடிக்குத் தப்பி தத்தித் தப்பிப் போகுது தவளைக் கவிதை – “நூறு புத்தரே ! கோர்த்தாரே ! ஆயிரம் புத்தரே ! மல்லாத்தாரே! கல்லேத்தாரே ! ஒரு புத்தரே ! தத்தாரே! பித்தாரே ! நான் அண்மையில் வாசித்த குவர்நிகாவில் வெளிவந்த கற்சுறா எழுதிய பிரமிளின் கவிதைகள் தொடர்பாக எழுதிய கட்டுரையில் எனக்குப் பிடித்த பிரமிளின் கவிதையில் ஒன்று . இந்தக் கவிதையில் எனது புரிதல் என்னவென்றால் கவிதையைத் தவளையாக்கி இருக்கின்றார் . புத்தியைப் புத்தராகியிருக்கின்றார் . தத்தலை தத்ராக்கி யாரைப் பித்தராக்கியிருக்கின்றார் ?? அதற்கும் அப்பால் வேறு எதோ இதற்குள் இருக்கின்றது . இன்னும் எனக்கு விளங்கவேயில்லை . உங்களுக்கு ஏதாவது விளங்கியதா ?? 000000000000000000000000000000000 02. E=mc2 ஒற்றைக் குருட்டு வெண்விழிப் பரிதி திசையெங்கும் கதிர்க்கோல்கள்