அறத்துப்பால்-பாயிரவியல்-நீத்தார் பெருமை-The Greatness of Ascetics -Grandeur de ceux qui ont renoncé au monde 21-30
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பணுவல் துணிவு. 21 ஒழுக்கத்தில் நிலையாக நின்று பற்று விட்டவரின் பெருமையைச் சிறந்ததாகப் போற்றிக் கூறுவதே நூல்களின் முடிவாகும். எனது பார்வை: மனுசனாய் பிறந்தவன் சுயநலம் இல்லாமல் இருக்கறது தான் திறமான சீவியம். அதைத்தான் வரலாறுகளும் நூல்களும் கியாதியாய் சொல்லும் கண்டியளோ. இப்ப நீங்களும் இப்பிடிச் சீவிச்சியளெண்டால் , உங்களைப்பற்றியுமெல்லே நாலைஞ்சு பேர் கதைச்சுகதைச்சு உங்களைப்றி யூனியிலேயே ஒரு பாடத்திட்டமாக்கிப் போடுவங்கள் எண்டால் பாருங்கோவன். இல்லாட்டில் ஒரே ஒரு புத்தகம் படத்தோடை உங்களைப் பற்றி வரும், அதுதான் கல்வெட்டு. வசதி எப்பிடி? The settled rule of every code requires, as highest good,Their greatness who, renouncing all, true to their rule have stood. Les Ecritures exaltent au dessus de tout autre Bien la grandeur de ceux qui ont renoncé au monde et mènent une vie de discipline. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. 22 பற்றுக்களை விட்டவரின் பெருமையை அளந்து சொல்வது என்பது , உலகில் இதுவரை பிறந்...