"வன்முறைக்குட்பட்ட பெண்ணை திருமணம் செய்கின்ற பக்குவம் நம் சமுதாயத்தில் எத்தனை பேருக்குண்டு?"-கேஷாயினி எட்மொண்ட்
இலங்கையின் மீன்பாடும் தேன்நாடாம் மட்டக்களப்பைச் சேர்ந்த கேஷாயினி எட்மண்ட் ‘மீரா’ என்ற புனைபெயரில் தமிழ் இலக்கியவெளியில் அறிமுகமானவர். , யங் ஏசியா ஊடகநிறுவனத்தில் தயாரிப்பாளராக பணியாற்றிய மீரா தற்போது பெண்ணியம் இணையத்தின் ஆசிரியர்களுள் ஒருவராகவும், சுதந்திர ஊடகவியலாளராகவும் பணியாற்றி வருகின்றார். திரைப்பட மற்றும் ஊடக கல்லூரியில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்துள்ள மீரா பல்கலைக்கழகத்தில் கட்டிடப்பொறியியல் மாணவியாக கல்விகற்று வருகின்றார். இசை, கவிதை எழுதுதல், சமூக நோக்கு ,ஊடகம் போன்ற துறைகளில் செயல்பட்டு வரும் பன்முக ஆற்றல் உள்ள இளைய படைப்பாளிகளில் மீரா தனிமுத்திரை பதிக்கின்றார். மீரா பெண்ணியவாதியாகவே எம்மிடையே அவதானிக்கப்பட்ட ஒருவராக இருக்கின்றார். மீராவை நேர்காணலுக்கு அணுகியபொழுது பலத்த வேலைப்பளுக்களிடையே மகிழ்சியுடன் சம்மதம் தந்து இலக்கியம் பெண்விடுதலை சமூக நோக்குகள் என்று தனது எண்ணங்களை உங்களுடன் பகிருகின்றார். கோமகன் 0000000000000000000000000000000 மீராவை எப்படி அறியலாம்? ஊடகம், கலை, பொறியியல் துறை என பன்முகம் இருந்தாலும் ‘ஊடகவியலாளர்’ என்று அறிமுகப்