Skip to main content

Posts

Showing posts with the label நடுதல்-நேர்காணல்

பல விடயங்களைத் துறக்கும் துணிவற்றவர்களால் முழுமையான படைப்பாளிகளாக மாறுவது சாத்தியமில்லை- வாசுதேவன்

வாசுதேவனை ஏன் தெரியக்கூடாது ? வாசுதேவன் இலக்கியவாதியாக இதுவரையும் அறியப்படவில்லை என்ற அர்த்தத்தில் இந்தக் கேள்வி எழுந்துள்ளதாகவே கருதுகின்றேன். இது ஒரு வகையில் சரியான கேள்வியே. தமிழ் இலக்கிய உலகு விசித்திரமானது. அது தனக்கென எழுதாத சில விதிகளைக் கொண்டுள்ளது. இலக்கியராக ஒருவர் வெளிப்பட வேண்டுமானால் அவரை “மேடையேற்றுவதற்குச்” சில நபரேனும் தேவைப்படுகிறார்கள். ஆனால் அந்தச் சில நபர்கள் உங்களிடம் சில சமரசக் கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். இங்கே “சமரசம்” என்ற சொல்லு முக்கியமானது. அவர்கள் தங்களைப் போன்று நீங்களும் ரசிக்கவேண்டும் என்று நிபந்தனையிடுகிறார்கள். அவர்களின் இலக்கிய அரசியலுக்கு நீங்கள் “கட்டுப்படவேண்டும்”, துணைபோகவேண்டும். நீங்கள் உங்களுக்கான ஒரு சிந்தனைத் தனித்துவத்தைப் பேணுவதை அவர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். கூட்டாகவன்றி, தனித்துவமாக இருக்கும் யாரையும் சமகாலத் தமிழ் இலக்கிய உலகம் சகித்துக்கொள்வதில்லை. அவ்வாறனவர்களை ஓரங்கட்டுவதிலும், இருட்டடிப்புச் செய்வதிலும் அது மிகுந்த கரிசனை கொள்கிறது. குறிப்பாகத் தமிழ் இலக்கிய உலகில் இது ஒரு நோயாகவே மாறிவிட்டிருக்கிறது. தமிழ் இலக்கிய உலகில் தன

ஈழத்து சிந்தனைவெளி மீதான கலகச் செயல்-நேர்காணல்-மிஹாத்

அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாக கொண்ட மிகாத் இடதுசாரிய சிந்தனையாளர்களில் ஒருவர். அத்துடன் தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதிக்கொண்டிருக்கும் ஒரு படைப்பாளி. அடிப்படையில் இவர் ஓர் தேர்ந்த விமர்சகராகவே இனங்காணப்பட்டுள்ளார். வயதில் இளையவரான இவரது இலக்கிய ,அரசியல் நுண்அறிவு வியக்க வைக்கின்றன. இவர் ஒரு கால கட்டத்தில் கிழக்கிலங்கையின் ‘பெருவெளி’ குழுமத்தின் செயற்பாட்டாளர்களில் முக்கியமானவராகக் கருதப்படுகின்றார். இவருடன் கவிஞர் மஜீத், றியாஸ் குரானா, றபியூஸ், அப்துல் ரஸாக், காலித், றிஜால்டீன், பர்ஷான் போன்றவர்களும் ‘பெருவெளி’ குழுமத்தில் செயற்பட்டிருக்கின்றார்கள். நான் செய்துகொண்ட நேர்காணலில் மிகவும் நீண்ட நேர்காணல் இவரது நேர்காணலாகும். கோமகன் 000 நிந்தாவூரில் இடம்பெற்ற எனது நேர்காணல் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வில் உங்களை முதன் முதலில் சந்தித்திருக்கின்றேன். நீங்கள் தான் “குரலற்றவரின் குரல்” நேர்காணல் தொகுப்பிற்கான நூல்விமர்சனத்தை வைத்திருந்தீர்கள். அனாலும் உங்களை பற்றி என்னால் பெரிதாக அறிய முடியவில்லை ………? 1987 ல் இருந்து சில புரிதல்களைப் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன். பொதுவ