Skip to main content

Posts

Showing posts with the label நடுதல்-சிறுகதை.

மாதுமை

கோண்டாவிலில் பிறந்த ராகவனுக்கு அவனது முறைமச்சாள் மகேஸ்வரி இணையாகி மாதுமை என்ற பெண் குழந்தையம் பிறந்திருந்தது. நாட்டு நடப்புகளிலும், இரு பக்க சீருடைகளுக்கும் இடையில் அவனது உயிர் மங்காத்தா விளையாடியது. கோண்டாவில் இந்து கலவன் பாடசாலையில் அதிபராக பேராய் புகழாய் ராஜகுமாரன் போல் இருந்த ராகவன், ஒருநாள் பல தேசங்கள் கடந்து நொந்த குமாரானாய் ஓரு இலையுதிர் காலமொன்றில் பாரிஸுக்கு என்றியானான். அவனுடன் படித்த குணாவின் அறையில் எட்டுடன் ஒன்பதானான். முப்பது மீற்ரர் பரப்பளவை கொண்ட ரகுவின் அறையில் ராகவனுக்கு நிலத்திலேயே படுக்க இடம் கிடைத்தது. பாரீசுக்கு வந்த புதிதில் இருந்த பயமும் குழப்பமும் இப்பொழுது அவனுக்கு இல்லாமல் போய் விட்டது. பாரிஸின் பரிசுகெட்ட சீவியத்துக்கு அவன் அவனைப் பழகிக்கொண்டான். அவனின் அறை நண்பனான ரகுதான் ஒருமுறை அவனை ஒப்றாவுக்கு வழக்கு எழுத தனக்கு தெரிஞ்ச மாசிலாமணியிடம் கூட்டிக்கொண்டு போனான். மாசிலாமணி அப்புக்காத்துக்கு மேல் அப்புக்காத்தாய் இருந்தார். புலிக்கும் அவருக்கும் ஜென்மத்து சனி போல் கிடந்தது. புலியை வைச்சு கேஸ் எழுதினால் தான் வழக்கு நிக்கும் எண்டு ஒரு தேற்றத்தை போட்டார். அதோடை தா

வேலி

அதிகாலை மூன்று மணிக்கு வேலையால் அறைக்கு வந்து படுத்து, செத்த சவம் போலக் கிடந்த என்னை ஐந்து மணிக்கு அடித்த போன் வெறி கொள்ள வைத்தது. மறுமுனையில் நரேன் என்ன மச்சான் நித்திரையாய் போனியே  என்று லூசுத்தனமாக தனது கதையை தொடங்கினான்,  "உனக்கு தெரியும் தானே மச்சான் என்னம் ரெண்டு கிழமையிலை  எங்கடை சூராவத்தை பிள்ளையார் கோயில் கொடி ஏறுது. நீ நாளையிண்டைக்கு ஊருக்கு போறாய் தானே அதுதான் உனக்கு ஞாபகப்படுத்த எடுத்தனான்" என்றான். நித்திரை கலைந்த கோபத்தில் தூசணத்தால் நரேனை பேசிவிட்டு மீண்டும் படுத்தேன். எனக்கு இன்னும் கோபம் அடங்கியபாடாகத் தெரியவில்லை. நட்பு என்ற போர்வையில் நாகரீகம் தெரியாத மனிதர்களாக இருக்கின்றார்களே என்று மீண்டும் தலைகணியைக் கட்டிப்பிடித்தேன். போன நித்திரை திரும்பி என்னிடம் வர சண்டித்தனம் செய்தது. ஆவி பறக்கும் தேத்தண்ணியை போட்டுக்கொண்டு அறையில் கிடந்த செற்றியில் இருந்தேன்.தேத்தண்ணி சாயத்தின் மணம் மூக்கில் நுழைந்து உடம்பை முறுக்கேற்றியது. தேத்தண்ணியைப் பார்த்துக்கொண்டு இருந்தேன் இந்தக் காலமை நேரத்தில் எனக்கு சூராவத்தை பிள்ளையார் கோயிலின் கொடியேத்தம் முக்கியமா? என்

பருப்பு

கோண்டாவில் கதிரவேலருக்கும் அன்னபூரணிக்கும் பிறந்த சிவகுமாரன் என்ற சிவாவை எல்லோருமே மறந்து விட்டிருந்தார்கள். "பருப்பு" என்ற அவனது பட்டப்பெயரே எல்லோருக்கும் தெரிந்திருந்தது. சிறு வயதில் சிவாவாக இருந்த அவன் மைனராகி மேஜராகும் பொழுது வகுப்பறையிலும் சரி, ஊரின் கோயில் திருவிழாக்களிலும் சரி அவன் ஓர் பருப்பாகவே இருந்தான். ஒருமுறை அவனது வகுப்பறை தோழன் இவனது அலப்பரை தாங்காமல், "நீ………. என்ன பெரிய பருப்பா?" என்று கேட்டதற்கு அந்த வகுப்பறைத் தோழனை சிவா துவட்டி எடுத்து விட்டிருந்தான். இந்த நிகழ்சியினால் சிவாவிடம் ஓர் சண்டியன் என்ற ஹீரோ தன்மையும் அவனுடன் கூடுதல் தகுதியாக ஒட்டிக்கொண்டது. அன்றிலிருந்து சிவாவுக்கு "பருப்பு" என்ற பட்டபெயரும் நண்பர்களால் இலவசமாக கொடுக்கப்பட்டது. பள்ளிக்கூடத்தில் நடக்கின்ற எல்லா விளையாட்டுப்போட்டிகளிலும் சிவாதான் பருப்பு. புட்போல் விளையாட்டில் சிவா ஓர் சூரன். அப்பொழுது இளைஞர்களிடம் கராட்டி பழகுகின்ற மோகம் இருந்தது. சிவா கராட்டியையும் விட்டு வைக்காது அதிலும் பருப்பாக இருந்தான் . கராட்டியில் சிவா கறுப்பு பட்டி வாங்கியிருந்தான். இப்படி எல்லா

பாஸ்"போர்ட் - சிறுகதை - கோமகன்

யாழ்ப்பாணம் வடக்கில் இருந்து வெளியேறும் எல்லோர்க்கும் பாஸ் எடுக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்த பட்ட காலமான அந்த அதிகாலைப் பொழுதில் சாவகச்சேரி  பகுதியில் இருந்த அந்த வீடு சனங்களால் திமிறியது.இந்த இடம் தான் அப்போதைய நிழல் பாஸ் அலுவலகம். சனங்களுக்கு ஆயிரம் சோலிகளுடனும் அதனால் வந்த கவலைகள் முகத்தில் நிரம்ப வீட்டின் முன்னால் இருக்கக்கூடிய அவ்வளவு இடங்களிலும் பொட்டலங்களாக சிதறியிருந்தனர். பாஸ் கொடுக்கும் அலுவலகர்கள் ( பெடியங்கள் ) இன்னும் வராத படியால், அங்கு இருந்த உதவியாளர்கள் வந்த சனங்களை மேய்த்துகொண்டிருந்தனர். இந்த மேய்ச்சலினால் பலரும் கடுப்பாகவே இருந்தனர். ஆனாலும் எப்பொழுதுமே "சமரசங்கள்" என்ற பரம்பரையலகு  அவர்களுடைய ரத்தத்தில் சிறிது தூக்கலாகவே இருந்து வந்திருக்கின்றது. அதனால் வெளிப்படையாகத் தங்கள் கடுப்பைக் காட்ட முடியாது வாய்க்குள் புறுபுறுத்துக் கொண்டிருந்தனர் அங்கே இருந்த சனங்கள். சின்ராசாவும் அவர் பதினேழு வயது நிரம்பிய பேரனும் அந்தகூட்டத்தில் இருந்தனர். பேரனுக்கு அந்த இடத்துக்கு வரவே பிடிக்கவில்லை. பாட்டனார் சின்ராசாதான் மன்றாட்டமாக அழுது குளறி அவனை கூட்டிவந்திரு

சொக்கப்பானை-சிறுகதை-கோமகன்

காலம் 1987. எமது தாயகத்து காற்று வெளியிலும் , வயல் வரப்புகளிலும், வீதிகளிலும், ஒழுங்கைகளிலும் எமது சனங்களின் கதறலின் கண்ணீரை துடைத்து சமாதானம் பேசுகின்றேன் என்று வந்த சமாதானப்புறாக்கள் தங்கள் முகங்களை மாற்றி ஆயுததாரிகளான ஓர் இரவின் இருட்டும் காலம் பிந்திய கார்த்திகை மாதத்து பனிப்புகாரும் அந்த ஊரில் மண்டியிருக்க. அவைகளை விரட்டும் பணியை கதிரவன் எடுத்துக்கொண்டிருந்தான். அது அவ்வளவு சுலபமாக அவனுக்கு இருக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவனது கையே ஓங்கியிருந்தது. படுதோல்வியை தழுவிய இருட்டும்மண்டியிருந்த பனிப்புகாரும் மெதுமெதுவாக அவனிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டிருந்தன. ராமசாமிக்குருக்களின் வீட்டு மா மரத்தில் குடியிருந்த பக்கத்து வீட்டு சேவல் ஒன்று தனது முதல் கூவலை ஓங்கி ஒலித்தது. அதனைத் தொடர்ந்து அந்த ஊரில் இருந்த சேவல்கள் முறைவைத்து தங்கள் கூவலை தொடங்கிக்கொண்டிருந்தன. தூரத்தே கிழக்கில் வானமகள், கதிரவன் அவள் மீது கொண்ட காதலினால் தன் முகத்தை மெதுவாக சிவக்கத்தொடக்கினாள். அந்த முகத்திலே ஒரு கூட்டம் அந்நியப்பறவைகள் ஆரை வடிவில் சத்தமிட்டவாறே பறந்து சென்றன. ராமசாமி குருக்களின் வீட்டு பட்டியில் இரு