அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாக கொண்ட மிகாத் இடதுசாரிய சிந்தனையாளர்களில் ஒருவர். அத்துடன் தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதிக்கொண்டிருக்கும் ஒரு படைப்பாளி. அடிப்படையில் இவர் ஓர் தேர்ந்த விமர்சகராகவே இனங்காணப்பட்டுள்ளார். வயதில் இளையவரான இவரது இலக்கிய ,அரசியல் நுண்அறிவு வியக்க வைக்கின்றன. இவர் ஒரு கால கட்டத்தில் கிழக்கிலங்கையின் ‘பெருவெளி’ குழுமத்தின் செயற்பாட்டாளர்களில் முக்கியமானவராகக் கருதப்படுகின்றார். இவருடன் கவிஞர் மஜீத், றியாஸ் குரானா, றபியூஸ், அப்துல் ரஸாக், காலித், றிஜால்டீன், பர்ஷான் போன்றவர்களும் ‘பெருவெளி’ குழுமத்தில் செயற்பட்டிருக்கின்றார்கள். நான் செய்துகொண்ட நேர்காணலில் மிகவும் நீண்ட நேர்காணல் இவரது நேர்காணலாகும். கோமகன் 000 நிந்தாவூரில் இடம்பெற்ற எனது நேர்காணல் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வில் உங்களை முதன் முதலில் சந்தித்திருக்கின்றேன். நீங்கள் தான் “குரலற்றவரின் குரல்” நேர்காணல் தொகுப்பிற்கான நூல்விமர்சனத்தை வைத்திருந்தீர்கள். அனாலும் உங்களை பற்றி என்னால் பெரிதாக அறிய முடியவில்லை ………? 1987 ல் இருந்து சில புரிதல்களைப் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன். பொதுவ...
எனது தளத்தில் வெளியாகும் ஆக்கங்களை எங்கும் பகிர்ந்து கொள்ளலாம்