தரையை விட்டு சாய்வு கோணத்தில் மேலே எழும்பிய அந்த இயந்திரப்பறவை சிறிது நிமிடங்களை விழுங்கி விட்டு நேர்கோட்டில் தன்னை நிலை நிறுத்தி விரைவு படுத்தியது. வெளியே எங்கும் அந்தகாரக் கரும் இருள் அப்பியிருந்தது. அங்காங்கே நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருந்தன. அவைகளை விட வேறு எதையும் வெளியில் என்னால் பார்க்க முடியவில்லை. இப்பொழுது அந்த விமானத்தில் முக்கால் வாசிபேர் இலங்கையரே நிரம்பியிருந்தனர். அவர்கள் எல்லோருமே சவுதி அரேபியாவை வளப்படுத்த வந்த கடைநிலை ஊழியர்கள். அரேபிய ஷேக்குளின் ஷேக்குகளுக்காக வீடுகளையும் தொழில் நிலையங்களையும் பராமரிக்கவென்று குறைந்த தினார்களில் கூலிக்கு அமர்த்தப்பட்டவர்கள். அவர்களை நான் அவதானித்த அளவில் அவர்களுக்கு எழுத வாசிக்க தெரிந்திருக்கவில்லை. விமானத்தில் வழங்கப்பட்ட குடிவரவு விண்ணப்பங்களை நிரப்புவதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு சிலர் எல்லோருக்கும் விண்ணப்பப் படிவங்களை நிரப்பிக் கொடுத்து கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் சந்தைக்கடை போல இருந்த அந்த விமானத்தை, அமைதி தன் பிடியினுள் படிப்படியாகத் தன்வசம் கொண்டு வந்தது. மரங்கள் கூதல் காலத்தில் தங்கள் இலைகளை உதிர
எனது தளத்தில் வெளியாகும் ஆக்கங்களை எங்கும் பகிர்ந்து கொள்ளலாம்