Skip to main content

Posts

Showing posts with the label நடுதல்-- கவிதை.

சுவைத்(தேன்) -கவிதைகள் பாகம் 02

நிலாந்தன் கவிதைகள்  01 ஒரு புது ஆயிரமாண்டு மூன்றாவது ஆயிரமாண்டு அது அநேகமாக எங்களுடையது எங்களுடைய ஆட்டுத்தொழுவத்தில் அது பிறந்து வளர்ந்தது ஒரு யுகமுடிவின் எல்லா வேதனைகளிலிருந்தும் அது மீண்டெழுகிறது மீட்பின் ரகசியமென. இனி அறிவேயெல்லாம் அறிவே சக்தி அறிவே பலம் அறிவே ஆயுதம் புத்திமான் பலவான் வருகிறார் மீட்பர் பரசேயரும் சதுசேயரும் பரபரக்கிறார்கள் அவர்கள் பழைய யுகத்தவர்கள் நாங்கள் அகதிகளாயிருந்தபோது அந்தரித்துத் திரிந்தபோது யாருக்கும் தெரியாமலே மூன்றாவது ஆயிரமாண்டு கர்ப்பத்திலுதித்தது பரசேயருக்கும் சதுசேயருக்கும் இது தெரியாது அவர்கள் மீட்பருக்காக அந்தப்புரங்களில் காத்திருக்கிறார்கள் ஆட்டுத்தொழுவத்தில் அற்புதங்கள் நிகழுமென்று அவர்களுடைய வேதப்புத்தகங்களில் சொல்லப்படவில்லைப் போலும் சிலுவையும் சவுக்குமன்றி முள்முடியும் வெறுப்புமன்றி வேறெதுவும் அவர்களுக்குத் தெரியாது அறிவு கனிந்தெழும் போது அதனொளியில் எரிந்து சாம்பலாகப் போகும் அற்பப் பூச்சிகளாயிருக்கிறார்கள் அறிவு சக்தியாகத் திரண்டு யுகங்களையும் உலகங்களையும் ஜெயிக்க வரும் வேளை அவர்கள் குருடராயும் செவி

சுவைத்(தேன்) – கவிதைகள் – பாகம் 01.

01 புத்தி தனக்கு புத்தி நுறு என்றது மீன் – பிடித்துக் கோர்த்தேன் ஈர்க்கில் . தனக்குப் புத்தி ஆயிரம் என்றது ஆமை – மல்லாத்தி ஏற்றினேன் கல்லை . எனக்குப் புத்தி ஒன்றே என்றது தவளை எட்டிப் பிடித்தேன்- பிடிக்குத் தப்பி தத்தித் தப்பிப் போகுது தவளைக் கவிதை – “நூறு புத்தரே ! கோர்த்தாரே ! ஆயிரம் புத்தரே ! மல்லாத்தாரே! கல்லேத்தாரே ! ஒரு புத்தரே ! தத்தாரே! பித்தாரே ! நான் அண்மையில் வாசித்த குவர்நிகாவில் வெளிவந்த கற்சுறா எழுதிய பிரமிளின் கவிதைகள் தொடர்பாக எழுதிய கட்டுரையில் எனக்குப் பிடித்த பிரமிளின் கவிதையில் ஒன்று . இந்தக் கவிதையில் எனது புரிதல் என்னவென்றால் கவிதையைத் தவளையாக்கி இருக்கின்றார் . புத்தியைப் புத்தராகியிருக்கின்றார் . தத்தலை தத்ராக்கி யாரைப் பித்தராக்கியிருக்கின்றார் ?? அதற்கும் அப்பால் வேறு எதோ இதற்குள் இருக்கின்றது . இன்னும் எனக்கு விளங்கவேயில்லை . உங்களுக்கு ஏதாவது விளங்கியதா ?? 000000000000000000000000000000000 02. E=mc2 ஒற்றைக் குருட்டு வெண்விழிப் பரிதி திசையெங்கும் கதிர்க்கோல்கள்