Skip to main content

Posts

Showing posts with the label நடுதல்-கட்டுரை.

தமிழர் பழக்கவழக்கங்கள்.

தமிழர்களிடையே பொதுவாக இருக்கும் சில பழக்கவழக்கங்களையும் அவைகளைப் பற்றிய சில விளக்கங்களையும் தரலாம் என நினைக்கின்றேன் நாம் யாரையாவது சந்திக்கும்பொழுது இரண்டு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்கிறோம் அதாவது இது பிற மனிதரின் வரவை , இருப்பை மதித்துக் கவனத்தில் எடுத்துக்கொண்டதற்கான அடையாளம் ஆகும். எம்மிலும் பார்க வயதில் பெரியவர்களை உறவுப் பெயராலோ அல்லது மரியாதைப் பெயராலோ அழைப்பதே தமிழர் வழக்கம். எடுத்துக்காட்டாக அண்ணா , அக்கா , ஐயா என்று அழைத்தல். காலணிகளை வெளியே கழட்டிவிட்டு வீட்டிற்குள் உள்ளடதல் முறையும் குறிப்பிடத்தக்கது வெளியில் இருக்கும் மாசுக்களை வீட்டுக்குள் எடுத்து வரமால் இருக்க இந்த ஏற்பாடு உதவியிருக்கலாம். மேற்கத்திய வீடுகளில் இந்த பழக்கம் இல்லை. ஆனால் யப்பானிய பண்பாட்டில் இந்த பண்பாடு இறுக்கமாக பேணப்படுகின்றது.   மேலும் வீட்டுக்கு வந்தோருக்கு உண்ணவும் பருகவும் உணவும் நீர்பானமும் கொடுத்து உபசரிப்பது தமிழர் பண்பு. அத்துடன் ஒப்பீட்டளவில் மேற்கு நாட்டோருடன் ஒப்பிடும்பொழுது தமிழர்கள் பொதுவாக உணர்சிவயப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள்.உதாரணமாக செத்த வீட்டில் ஓவென நெஞ்சில்

அரிகண்டம் அல்லது நவகண்டம்.

தனது தலையை ஒரே முயற்சியில் தானே அரிந்து பலியிடுவதற்க்கு அரிகண்டம் என்று பெயர். இது ஒரு விழாப் போல் நடத்தப்படும். நவகண்டம் ‍‍/ அரிகண்டம் கொடுப்பதற்க்கு முன் உறவினர்கள் அனைவரும் அழைக்கப்படுவர். நவகண்டம் ‍கொடுப்பவர் இடையில் உடைவாளும் , மார்பில் கவசமும் தரித்து போர்வீரன் போல் போர்க்கோலப் பூண்டு இருப்பார். கொற்றவைக்கு பூசை முடித்து பின்பு , தனது இடது கையினால் முடியைப் பிடித்து வலது கையினால் கழுத்தை வெட்டிக் கொண்டு இறப்பார். இந்த மாதிரி நவகண்டம் கொடுப்பதற்க்கு பல காரணங்கள் உண்டு: 1. வலிமையான‌ எதிரி நாட்டுடன் போர் புரிய நேரும் போது , வெல்வதற்க்கு வாய்ப்பே இல்லை என்ற‌ தருணங்களில் தெய்வத்தின் அருள் நாடப்படுகிறது. துர்க்கைக்கு பலி கொடுத்தால் தெய்வத்தின் அருள் கிட்டும் என்ற நம்பிக்கையில் நவகண்டம் கொடுக்கப் பட்டது. 2. சில சமயங்களில் உடல் நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாக கிடக்கும் அரசனுக்கு , அவன் நலம் திரும்ப அவரது விசுவாசிகளால் நவகண்டம் கொடுக்கப் பட்டது. 3. நோயினால் சாவை எதிர் நோக்கி காத்திருக்கும் ஒருவன் , நோயினால் சாக விரும்பாமல் வீர சொர்க்கம் அடைய விரும்பி நவ